அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 27 July 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow குஞ்சரம் arrow வீடும் வலியும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வீடும் வலியும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: குயிலி  
Sunday, 20 June 2004

நான் வேலைக்கு பயணிக்கும் இரயிலில் அடிக்கடி அவரைச் சந்திப்பதுண்டு. ஆனால் ஒருநாளும் பேச வாய்ப்புக் கிடைத்தில்லை. ஏனெனில் அவரை எப்போதும் தூங்கி விழும் நிலையில்தான் நான் காண்பதுண்டு. வாயைப் பிளந்தபடி அருகில் இருப்பவரின் தோளில் தூங்கிச் சரிவதும் அவர்கள் இவரை முறைத்துப் பார்ப்பதும் தள்ளி இருப்பதும்  அடிக்கடி நிகழ்வதுண்டு. அன்றும் இப்படியான காட்சிதான். நான் வாசித்துக்கொண்டிருந்தேன். இரயில் திடீரென பெரிய சத்தத்துடன் குலுங்கி நின்றது. பயணம் செய்து கொண்டிருந்த எல்லோர் முகத்திலும் பரபரப்பு. தூங்கி வழிந்து கொண்டிருந்த நண்பரும் அரக்க பரக்க முழித்துவிட்டார். எதிரே இருந்த என்னிடத்தில் என்ன நடந்தது எனக் கேட்டார். பதில் சொல்ல பேச்சு வளரத் தொடங்கியது. தூக்க மயக்கம் அவருக்கு தீரவில்லை. ஆனால் நான் விடவில்லை.
ஏன் சரியா முறிகிற வேலையா பார்க்கிறீர்கள்?
அதை ஏன் கேட்கிறீர்கள் நான் படும்பாடு. என்றவர் கொட்டத் தொடங்கினார்.
வந்த நாளில இருந்து ஒழுங்கா படுத்தெழும்ப இடமில்லாமல் அலைந்தனான். வாடகை கட்டிக்கட்டி அலுத்துப்போச்சு. பின்ன ஒரு வீட்டை வாங்கினேன் பாருங்கோ. அதால காலைவேலை மாலைவேலை என்று ஓடித்திரிகிறன். இப்ப நான் வாங்கிய வீட்டில நிம்மதியா படுத்தெழும்ப முடியல்ல இப்படி இரயிலில, பயணத்தில கிடைக்கிற நேரத்திலதான்  தூங்க வேண்டி இருக்கு.
அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

* பிரான்ஸ்


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 27 Jul 2024 05:32
TamilNet
HASH(0x55cdcd715110)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 27 Jul 2024 05:33


புதினம்
Sat, 27 Jul 2024 05:33
















     இதுவரை:  25425748 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4135 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com