இந்தக் கதையில் வரும் அந்த மனிதர்கள் நவீன உலகத்தை அறியாத காட்டுவாசிகள். அவர்களுக்கு உள்ள அறிவின் தெளிவு கூட இப்போது இந்தியாவின் நாட்டுவாசிகளுக்கு இல்லையோ என ஐயம் கொள்ளும் அளவுக்கு சில நிகழ்வுகள் அண்மையில் நடந்துள்ளன.
யாழ்ப்பாணம் புலமையாளர்களையும் பண்டிதர்களையும் உருவாக்கும். ஆனால் யாழ்ப்பாண மனிதன், தென்னிலங்கையில் உள்ள சிங்களச் சகோதரனைப் போலவல்லாது, வித்தியாசமான விழுமிய அமைப்பைக் கொண்டவன். அது அவனுக்கு சிருஷ்டித்துவத்தையும் கற்பனையையும் எளிதாகக் கொடுக்க விடாது.
'மத்து', 'செங்காவலர் தலைவர் யேசுநாதர்' என்ற இரு நூல்களிலும் இடம்பெறும் கட்டுரைகளை வாசித்தபோது ஏ.ஜே.கனகரட்னா எப்படியான திறமையுடன் அறிவுபரம்பல் இலக்கியப் பணியை ஆற்றியிருக்கிறார் என்று நான் வியந்தேன். இன்று பல நாடுகளிலும் வாழும் முன்னணி ஆய்வாளர்கள், ஆங்கிலத்திலேயே தம் கண்டுபிடிப்புக்களை பிரசுரிக்க..
‘ஒரு நாள் அந்த மரம் விழவே செய்யும்’ இது உமர்கயாமின் கவிதை வரிகளில் ஒன்று. பேராசிரியர் குறித்த ஆவணப்படத்தை பார்த்த போது இந்த கவிதை வரியே என் நினைவுக்கு வந்தது உண்மையில் இந்த ஆவணப்படத்திற்கு மேற்படி கவிதை வரியை தலைப்பாக வைத்திருந்தால்; மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்