இந்த ஏழாவது இதழுடன், இரண்டாம் ஆண்டில் ‘தெரிதல்’ கால்பதிக்கிறது. “புதிய வாசகரை - குறிப்பாக இளைஞர்களைச் சென்றடைந்து அவர்களுடன் தொடர்பாடல் செய்யும் முயற்சி.
தனிமனித உழைப்பல்ல - பலரின் கூட்டு முயற்சியே இதனைச் சாத்தியமாக்கியது, இணைந்த அனைவருக்கும் நன்றிகள்.
இலங்கையின் சிறப்புமிகு புதல்வர்களில் ஒருவரான றெஜி சிறிவர்த்தன, சென்ற மார்கழியில் காலமானார். அவர், சிறந்த மனிதர் - நேர்மையான மார்க்சியவாதி, இலங்கை இடதுசாரிகள் பலரைப்போல் சிங்களப் பேரினவாதச்சேற்றைத் தன்மீது (ஒருபோதுமே) பூசிக்கொண்டவரல்லர்...
மொத்தத்தில் நேர்த்தியான தளக்கோலமும், அதிகமான கலை இலக்கியத் தகவல்களும் - தெரிவும் நல்லனவற்றை அறிமுகப்படுத்தி போலிகளை அம்பலமாக்குவதும் (சக்தி ரி.வியின் போலித்தனம்), செய்திகளினூடே தரும் அரசியலும், ஐந்து ரூபாய்க்குக் கிடைப்பதும் தெரிதலின் வெற்றிக்கான தூண்கள் என்றே கூறவேண்டும்!
ஈழத்து நவீன கவிதை 'வளர்ச்சி'யின் ஆரோக்கியமற்ற பக்கங்கள் சில வெளிப்படுகின்றன! மேற்கூறிய விதத்தில் நோக்கும்போது, முதலில் குறிப்பிடத்தக்கதாயுள்ளமை, 'மேத்தா, வைரமுத்து பாணியிலான' கவிதைப்போக்கு தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துவது.
இவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் எமது நாட்டின் தமிழ்சினிமா வளர்ச்சிக்கு நிச்சயம் உதவக்கூடிய முதல் படிகளே. இளைய தலைமுறையினர், நல்ல சினிமாவைத் தெரிவு செய்யவும் புரிந்துகொள்ளக்கூடிய அறிவை வளர்க்கக்கூடிய சினிமா ரசனையைப் பெற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்டவேண்டும்.
“வாரும்! வாரும்! திறமா எழுதியிருக்கிறீர். தொடக்கமே நல்ல ஈர்ப்போடஇருக்கு (தொடக்கத்தை நான் மாற்றவில்லை!). கோட்பண்ணவேண்டியதையெல்லாம் கோட்பண்ணியிருக்கிறீர். இதில திருத்தம் ஒண்டுமில்லை. அடுத்த சப்ரரையும் இதைப்போல எழுதும்”.
இந்த முன்மாதிரிகள் அரசியல் கட்சிப் பத்திரிகைகளிலும் காணப்பட்டன. தேசாபிமானி, புதியபாதை, செம்பதாகை, தாயகம், ஜனவேகம் - இப்பத்திரிகைகள் சில காலகதியில் கட்சியில் தோன்றும் கருத்துப் பிளவுகளால் வலுவிழந்தும் மறைந்தும் போயின.
“எழுதுவது போலவும் சொல்வது போலவும் வாழாத எழுத்தாளனுடைய பேனையைச் சுட்டுப் பொசுக்கவேண்டும் என்று சில எழுத்தாளர்கள் கூறுகிறார்களே, இது சரியா?” - நான் எனக்குள் இருந்த உள்விமர்சகனைப் பார்த்துக் குரல் எழுப்பினேன்.
இருபது வயதில், இலங்கைத்தீவின் புகழ்மிகுந்த 'நாளந்தா'வில் கல்வியில் தனது கடைசியாண்டைப் பூர்த்திசெய்துகொண்டிருந்த 'சி.வி.', இலங்கைக்கு வருகைதந்திருந்த கவியரசர் தாகூரின் பார்வைக்கு, தான் படைத்த Vismadgenee என்ற 64 பக்கங்களில் அமைந்த ஆங்கில நாடகத்தைக் கையளித்தார்.
எமது நிலத்தில் பெரும்பாலான படைப்பாளிகள் போர்க்காலப் படைப்பாளிகளாகவே இருக்கின்றனர். அதனால்தான் இந்தப் போர்நிறுத்த காலத்தில் கலை இலக்கியத்தில் ஒரு மந்தநிலைமை காணப்படுவதாக, நான் கருதுகின்றேன். நல்ல கலை இலக்கிய ரசனைமிக்க படைப்புகளினை - நல்ல படைப்பாளிகளினை - அறிமுகப்படுத்த எமது...
பேசிச் சிரித்து மகிழ்ந்திருந்த அந்தச் சிறிது நேரத்தில், தங்களது பிரச்சினைகள் - அவற்றை ஏற்படுத்தும் எதிரிகள் பற்றியும் பேசிக்கொண்டன. அந்த எதிரிகள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டதும் அவைகளுக்குள்ளான நெருக்கம் அதிகரித்தது,கட்டிப் பிடித்துக்கொண்டன. கை குலுக்கிக்கொண்டன.
இவை சில உதாரணங்கள். தமிழ்க் கவிதைக்குரிய ஓசையில் மஹாகவிக்கிருந்த பிடிமானத்தைக் காட்டப் போதுமானவை. அந்த மரபையே அவர் காதலித்தார். அவர் புதுக்கவிதை எழுதவில்லை. தவறு. ஒரேயொரு புதுக்கவிதை எழுதினார், அதன் தலைப்பு 'சேரன்'.
நல்ல திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு யாழ்ப்பாணத்தில் (பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தில் தவிர) அரிதாகவே கிடைக்கிறது, மாறாக பொதுப்புத்தியையும் கலை உணர்வையும் அவமதிக்கும், 'மசாலாத் தமிழ்ப் படங்களே' எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கும் 2005 ஆம் ஆண்டிற்கான 'இயல் விருது' இம்முறை, திரு பத்மநாப ஐயருக்கு அளிக்கப்படுகின்றது. அவரின் தமிழ்த்தொண்டு வகைமைப்பாட்டிற்குள் அடங்க மறுக்கும் அதேவேளை, பலர் கால் பதிக்காத புதிய தடம்.