அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow நிலக்கிளி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி
.. மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன.. மீண்டும் தளிர்ப்பதற்காக!.. மான்மரைகள் கொம்புகளை விழுத்துகின்றன.. மறுபடியும் முளைப்பதற்கு!.. பறவைகள் இறகை உதிர்க்கின்றன.. மீண்டும் புதிய இறகுகள் பெறுவதற்கு!..
மரங்களிலெல்லாம் இலைகளில்லை. பட்டுப்போன கிளைகள் வானத்தைச் சுட்டிக்காட்டி நின்றன. தொடர்ந்து எறித்த உக்கிரமான வெய்யிலின் கானல், பசுமையை உறிஞ்சிக் குடித்துவிட்டுத் தாகம் அடங்காமல் பிசாசுபோல் அந்தப் பிரதேசமெங்கும் அலைந்தது. குளத்தில் நீர் வற்றி அது பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்தது
எங்கோ ஒரு மரம் முறிந்துவிழும் மளார் என்ற ஓசை பயங்கரமாக ஒலித்தது. சுந்தரம் சட்டென்று உணர்ச்சிகளை அடக்கி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு, இதற்குமேலும் இந்தச் சின்னக் குடிசைக்குள் நான் இவளுடன் தரித்திருப்பது நல்லதல்ல என்று எண்ணியவனாய்..
'பதஞ்சலியை உன் தங்கைபோல் எண்ணி உன்னால் பழகமுடியாது! உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே! ஆதலால் அங்கு போவதை அடியோடு நிறுத்திவிடு! அவசியமானல் இந்தக் கிராமத்தையே விட்டு எங்காவது போய்விடு! அழகியதொரு கவிதையைப் போன்று இனிக்கும் அந்த இளந்தம்பதிகளின் இன்பவாழ்வைச் சிதைத்து விடாதே!" என்றெல்லாம் அவனுக்கு எடுத்துக் கூறியது.
தினந்தோறும் ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, 'இறைவா! என்னுடைய உள்ளத்திலிருந்து இந்தக் கீழ்த்தரமான நினைவுகளையெல்லாம் நீக்கிவிடு!" என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டிருந்தான். ஒருவாரம் பதஞ்சலியைக் காணாமல் இருந்ததனால் அவனுடைய உணர்வுகள்
கள்ளமில்லாத உள்ளம். அமைதியான குணம். ஆரோக்கியம் ததும்பும் தேகம். தன்னம்பிக்கையுடன் ஒளிவீசும் கண்கள். எந்தப் பல்கலைக்கழகமுமே இவற்றையெல்லாம் ஒருவனுக்குக் கற்றுத்தர முடியாது. இந்த இருண்ட காடுகள்தானா இவனுக்கு இத்தனை சிறப்புக்களையும் வழங்கியிருக்கின்றன..
காட்டோரங்களில் படர்ந்து காய்க்கும் குருவித்தலைப் பாகற்காயோடு, இறைச்சிக்கருவாடு, கொச்சிக்காய் சேர்த்துப் பதஞ்சலி ஆக்கியிருந்த கறியும், பச்சையரிசிச் சோறும், வேலைசெய்து களைத்துப் போயிருந்த சுந்தரத்துக்கு மிகவும் ருசித்தது. தண்ணிமுறிப்புக்கு வந்த நாள்தொட்டு..
பதஞ்சலி இன்னொருவன் மனைவியாய் இருந்தாற்கூட அவளின் அழகை, தான் கண்நிறையப் பார்த்து இரசிப்பதில் என்ன தவறு என்று தன்னையே கேட்டுக்கொள்வான். ஆனால் அவன் இதுவரை மனதில் வளர்த்த சில கொள்கைகள், அவ்வாறு செய்வது தவறு என்று அறிவுரை கூறும்.
கண்ணை இமை காப்பதுபோல் தன் வயலைக் காத்துவந்த கதிராமனின் கைதேர்ந்த பராமரிப்பில் அவன் வயல் செழித்தது. குடலைப் பருவங் கடந்து, பார்த்த கண்ணுக்குக் கதிராகிப், பின் கலங்கல் கதிராக்கி, இறுதியில் ஒரே கதிர்க் காடாகக் காட்சியளித்தது. அத்தனையும் பதரில்லா அசல் நெல்மணிகள்!
ஆடி உழவு தேடி உழு என்பார்கள். மலையரின் வயலிலே இந்த வருடந்தான் ஆடி உழவு தவறிவிட்டது. உழவு நடக்க வேண்டிய சமயத்தில் எருமைக் கடாக்களை விற்றுப் பணமாக்கியிருந்தார் மலையர். உழவுயந்திரம் அவருடைய வீட்டுக்கு வருமுன்னரே ஆடி மாதம் ஓடி மறைந்துவிட்டது.
இதற்குள் விழித்துக் கொண்ட பதஞ்சலி, 'என்ன காடு எரியுது?" என்று பதறிப்போய்க் கேட்டாள். 'ஆரோ காட்டுக்கு நெருப்பு வைச்சிட்டாங்கள் பதஞ்சலி!" என்று அமைதியாகக் கூறிய கதிராமன், மேலே வானத்தையும், சுற்றாடல் காடுகளையும் ஒருதடவை கூர்ந்து கவனித்தான். நெருப்பின் ஒளியில்
வஞ்சம் தீர்ப்பதற்குக் கோணாமலையர் துணிந்துவிட்டார். வேண்டுமென்றே வெட்டிய காட்டின் மேல்காற்றுப் பக்கமாய்ப் போய் ஓரிடத்தில் குந்திக்கொண்டு, சருகுகளைக் கூட்டிக்குவித்து அதற்கு நெருப்பு வைத்தார். நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கும் கதிராமனும், பதஞ்சலியும் வேளைக்கே நித்திரைக்குச் சென்றிருந்தனர்.
காட்டிலே வெட்டிய கம்பு தடிகளைச் சுமந்துவந்து நிலத்தில் போட்ட ஓசையில் திடுக்குற்று விழித்துக் கொண்டாள். அதிகாலைப் பொழுதில் தனக்கு முன்னரே எழுந்து வேலையில் மூழ்கிச் சிரித்தபடியே நிற்கும் கணவனைப் பார்த்தபோது பதஞ்சலியை வெட்கம் பிடுங்கித்தின்றது.
அவன் வாய்க்காலைக் கடந்து அப்பால் இருந்த காட்டை நோக்கிச் சென்றான். நிலவு காலித்துவிட்ட அவ்வேளையில் காடு சந்தடியற்றுக் கிடந்தது. வாய்க்காலில் குளத்துநீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. கதிராமன் காடடோரமாக இருந்த ஒரு மேட்டில் ஏறி,
சிந்தனையில் ஆழ்ந்தவளாய் நடந்து கொண்டிருந்த பதஞ்சலி, தன்னுடன் கூடவே வந்துகொண்டிருந்த கதிராமனின் நடை திடீரென்று நின்றதும் துணுக்குற்றுப் போய் நிமிர்ந்து பார்த்தாள். அங்கு கண்ட காட்சி அவளை அதிரவைத்தது.
எருமையினம் மாலைவேளையில் மழைமேகம்போல உமாபதியின் வளவுக்குள் புகுந்தன. செழிப்புடன் காய்த்துக் குலுங்கிய, பதஞ்சலியின் அருமையான தோட்டம் எருமைகளின் கால்களின்கீழ் சிக்கித் துவம்சமாகின. மேலும், மலையர் கையில் வைத்திருந்த கேட்டியினால் மாடுகளை ஓங்கியடிக்கவும்,
'பதஞ்சலி!' என்று ஆதரவாகக் கதிராமன் கூப்பிட்டான். அவன் குரல் கேட்ட மாத்திரத்தில், தாயின் குரல் கேட்ட கன்றுபோல அவள் எழுந்து, அவனைக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழத்தொடங்கினாள்
ஒரு கூர்மையான கத்தியினால் உரோமம் அகற்றிய மான் தோல்களை மெல்லிய நாடாக்களாக வார்ந்து கொண்டிருந்தார். இப்படி வார்ந்தெடுத்த தோல் நாடாக்களைக் கொண்டுதான் குழுமாடு பிடிப்பதற்குப் பயன்படுத்தும் வார்க்கயிற்றைத் திரிப்பார்கள்.
அந்த நிமிஷம் கதிராமனைப் பார்ப்பவர்கள், அவனை ஒரு காட்டு விலங்கு என்றே எண்ணுவார்கள். அவனுடைய கருமையான நிறமும், அங்க அசைவுகளும், அவனைக் காட்டோடு காடாகவே காட்டின. அந்தப் புதர் அருகிற் சென்று
காட்டிலே வளர்ந்த அவனுக்குத் தெரியவேண்டியவை தெரிந்திருந்தாலும், தெரியக்கூடாத சில நாகரீகங்கள் இன்னமும் தெரியாமலேதான் இருந்தன. அவன் மெல்லத் திரும்பிக் குடிசையைக் கவனித்தான்.
எல்லையற்ற துன்பம் நேர்கையில் யாருடனாவது அணைந்து கொண்டிருப்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் ஆறுதலாக இருக்கும் என்பதைப்போல், பதஞ்சலியும் ராசுவை அணைத்தவாறே அமர்ந்திருந்தாள். அவளது நினைவுகள் ஒவ்வொன்றும் உமாபதியையே சுற்றி வந்தன
காட்டு விலங்குகளின் கண்கள் தீப்பந்தங்கள் போல் ஒளிர்ந்தன. பச்சைப் பளீரென ஒளிவிடும் கண்கள் மான்களுக்குரியவை. பழுப்பு நிறமாக மங்கித் தெரிபவை முயல், மரநாய்களுக்குச் சொந்தம். இவ்வாறு தரம்பிரிக்கப் பழகியவன் கதிராமன்.
பதஞ்சலியை அருகில் அழைத்தான். வெள்ளை வெளேரென்று, இடியப்பத் தட்டுக்களைப்போல் வட்டவடிவமாக இருந்த அவற்றை எடுத்துப் பதஞ்சலியின் விரிந்த கைகளுக்குள் வைத்தான். தேன்வதைகளை அவள் கண்டிருக்கின்றாள். ஆனால்
அந்தச் செவ்விளை சில நாட்களுக்கு முன்தான் முதற்பாளையைத் தள்ளியிருந்தது. இதுவரை இயற்கையின் இறுக்கத்தில் இருந்த அந்தத் தென்னம் பாளை இன்று வெடித்து மெல்லச் சிரித்து நின்றது.
பலவகை மரங்களும், செடிகளும் மண்டி வளர்ந்தன. காடு மூடிக்கொண்டது. நாளடைவில், சிதைந்துபோன குளக்கட்டைப் பெரியதொரு காட்டாறு முறித்துச் சென்றதனால், தண்ணிமுறிப்பு என்று பெயர்பெற்றுத்..
அங்கு நின்ற முடிதும்மைச் செடியைப் பிடுங்கிக் கசக்கி கதிராமனுடைய காயத்தின்மேல் வைத்து பாவாடையில் இருந்து கிழித்த துண்டால் பதஞ்சலி மளமளவென்று கட்டினாள்.
முரலிமரங்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் காய்த்துப் பழுக்கும்! முரலி பழுத்தால் காடே மணக்கும்! தின்னத் தின்னத் தெவிட்டாத பழம்!
நிலக்கிளி | அண்ணாமலை பாலமனோகரன் | முதற்பதிப்பு மே 1973. | வெளியீட்டாளர் - வீரகேசரி, கொழும்பு | இரண்டாவது பதிப்பு செப்டெம்பர் 2003 | வெளியீட்டாளர் - மல்லிகைப்பந்தல், கொழும்பு
நான் வன்னி மண்ணிலே பிறந்தவன். இங்கு வாழும் மக்கள் மிகவும் எளிமையானவர்கள். இருண்ட காடுகளின் மத்தியிலே சிதறிக் கிடக்கும் பல குளங்களையொட்டி அமைதியான சூழலில் எளிமை நிறைந்த வாழ்க்கை நடத்தும் இவர்களைத்தான் என்னுடைய கதைகளிலே அதிகமாகச் சந்திக்க முடியும்.
முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின், வன்னியிலிருந்து ஆறாயிரம் மைல்கள் வடக்கே இருந்துகொண்டு, அப்பால் தமிழுக்காக, எனது முதலாவது நாவலான நிலக்கிளியை கணினியில் மறுபதிப்புச் செய்துகொண்டிருக்கின்றேன்.
இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார்கள். உண்மைதான்! ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த வன்னியையும், அதன் மக்களையும் நாம் இனிமேல் சந்திக்க வேண்டுமெனில், நிலக்கிளி போன்ற வன்னிக் கதைகளில்தான் காணமுடியும்!

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 03:43
TamilNet
HASH(0x55ef984f51d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 03:43


புதினம்
Tue, 19 Mar 2024 03:43
















     இதுவரை:  24681573 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1967 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com