புன்முறுவலுடன் மேடையின் இடது கோடியில் அமர்ந்திருந்த வள்ளுவருக்கு முன் வெண்மையான துண்டு விரிக்கப்பட்டு அதில் அமர்ந்திருந்தவாறு மொழியியல் ஆராச்சியாளரும் தமிழ்ப் பேராசிரியருமான திரு அ. முருகையன் அவர்களால் எமது புதிய தலைமுறையினருக்கு அகரம் எழுதல் நிகழ்வு நடாத்தப்பட்டது.
பரதேசிகளின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில் தொகுப்பின் தலைப்பும், படைப்புகளின் படைப்பாளிகள் காணாமல் போயிருந்தமையும் எல்லோரின் அவதானிப்புக்கும் வியப்புக்குமுரிய பேசுபொருளாய் இருந்ததை நோக்க முடிந்தது. ஊர் நாடு என்னும் எல்லைகள் தாண்டி உலவிவந்த கவிஞர்களின்.. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஆடம்பரமோ ஆரவாரமோ இல்லாத இந்நிகழ்வு வந்திருந்தோரின் விழிகளை விரியப்பண்ணி வியக்க வைத்தது. கண்காட்சியாக விரிக்கப்பட்டிருந்த அரிய சேகரிப்புகளான நாணயங்கள் முத்திரைகள் பத்திரிகைகள் என்பவற்றை யேர்மனியில் வாழும் நம்மவர் ஒருவர் சேகரித்து வருகிறார் என்பதே அவ்வியப்பிற்குரிய காரணமாகும்.
நவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம். மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் பதினைந்து படைப்புக்களை மொழிபெயர்த்து, உலக அரங்கில் நவீன தமிழின் வளத்தை அறியச் செய்துள்ளார்.
1950களில் தமிழகம் அறிந்த ஈழத்து படைப்பாளிகளில் எஸ்பொ குறிப்பிடத்தகுந்தவர். அக்காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரசண்ட விகடன், கலைமகள், கல்கி, சரஸ்வதி ஆகிய இதழ்களில் இடம்பெற்றுள்ளன. ஈழத்தின் சிறந்த சிறுகதையாளராக கணிக்கப்படும் எஸ்பொ, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, ஊடகம் என பல தளங்களில் செயல்பட்டவர். (பவளவிழா படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)