அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow குஞ்சரம் arrow மக்களை கைவிட்ட கடவுள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மக்களை கைவிட்ட கடவுள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: முகிலன்  
Friday, 11 June 2004

பாரிஸ் புறநகர் குடியிருப்பில் எனது வீடு –மே 2004

புலம் பெயர்ந்த பின்னும், புலப்பெயர்வுக்கு புறப்பட்ட காலத்திலிருந்தும் எம்மவர்களுக்கு தொலைபேசி ஒரு அவசியக் கருவியாகிவிட்டது. எம்வர்களின் பல்வேறு பணிகளுக்கான முக்கிய தொடர்பாடல்கள் அதனு}டாகவே நிகழ்த்தப்படுகிறன.
இதன் வழியான உரையாடல்கள் சொல்லும் கதைகள் எத்தனை எத்தனையோ, இதிலொன்று…..

புதிய புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வருகையால் மலிவான தொலைபேசி இணைப்புகளும், இலவச உரையாடல் நேரங்களும் நீண்டு சென்றுகொண்டிருக்கின்றன.  இவ்வேளையில் ஒருநாள், பக்கத்து அறையிலிருந்து நாரந்தனையிலுள்ள தன் தாயாருடன் தொடர்பை ஏற்படுத்துகிறாள் என் மனைவி.
நான் இணையப் பக்கங்களில் மூழ்குகிறேன்.

‘காசா ? எவ்வளவு 10000 மா ?... அம்மா இது சரிவராது…’
என் கட்டுப்பாட்டை இழக்கிறது செவிப்புலன்.

‘அம்மா கோவிலுக்குக் காசென்று கேட்டால் இப்போது உனக்கு அனுப்புற தொகையும் இல்லாது போகும்.’
எனது மனைவியின் இந்த உரையாடல் என்னைப்பற்றி இழுக்கிறது.
மனைவி மறுமுனையில் கதைப்பவரின் குரலைக் கேட்கும் வகையில் உரத்துபேசியின் பொத்தானை அழுத்துகிறாள். எனது மாமியின் குரல் தெளிவாகக் கேட்கிறது.

‘மகளே மருமகனைப்பற்றி எனக்குத் தெரியும் ஆனால் கோவில் விசயம் கவனமாக இருக்க வேண்டும். கந்தனைப் பார்க்கப் பார்க்க எனக்கு அழுகை அழுகையாக வருது எப்படி இருந்தவர், காட்டுக்குள்ளே இருக்கிற மாதிரி இருக்கு. அந்த தேரும் அரைவாசி எரிந்த நிலையில் பரிதாபமாகக் கிடக்குது. என் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வெளிநாட்டிலே இருப்பதால் எல்லாருமாகச் சேர்ந்து இந்தத் தேரைப் புனரமைத்துக் கொடுக்கலாமே என்று நினைச்சேன். இராசன், துரை இரண்டு பேரும் சம்மதிச்சுட்டான்கள் நீதான்…. ’

‘அம்மா நீ கேட்கிறது ஞாயமாகப்படவில்லை. இந்த மக்கள் கஷ்டப்படக்க அவர் என்ன செய்து கொண்டிருந்தவராம். சும்மா இந்தக் கதையை விட்டுட்டு வேறு கதை சொல்லு..’
‘என்னடி மகளே இப்படியெல்லாம் பேசுறே? உன்னையும் மாற்றிப் போட்டார் போல, இது தெய்வ குற்றமாகிப்போகிடப் போகுது. நாங்கள் செய்யவேண்டிய திருவிழா - பூசைப்பங்கும், மோர்ப்பந்தல் பங்கும் இருக்குதுதானே.’ பக்தியின் பயத்தில் மாமியும் விடாமல்…

‘அம்மா நீ என்ன வேண்டுமென்றாலும் கேள் அது வேறுவிடயம். கோவிலெண்டு மாத்திரம் என்னோடு கதைக்க வேண்டாம்…’

‘புள்ளே நீ கொஞ்சம் யோசி…, கடவுள் விசயம், நீங்களெல்லோரும் வெளிநாடுகளுக்குப் போய் நல்லாத்தானே இருக்குறீர்கள்……’

மாமி கதையைத் தொடரும் போதே ஊடறுத்தது மனைவியின் குரல்,
‘அம்மா, இந்தக் கந்தசாமிக் கோவிலுக்குப் பக்கத்திலே இருந்த அவ்வளவு பேரும் குடிபெயர்ந்தாயிற்று. இவ்வளவு நடந்தேறியதைப்பற்றிய கவலை ஏதும் இந்தக்கந்தசாமியாருக்கு இருக்கா…., ஊரே சூனியமாகிய நிலையில் கோவில் மட்டும் மிளிர்ந்து என்ன செய்யப்போகுது? நாங்களும் யோசிக்க வேண்டிய காலம் வந்துட்டுது.’

‘அம்மா… அம்மா…’
மாமி சொல்வதறியாதிருப்பது புரிகிறது.
‘சரி மகளே பிறகு கதைப்போம்.’ உரையாடலை வழமையாக நீடித்துக் கொள்ளும் மாமி துண்டிப்பது கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்துவதை மனைவியின் முகத்தில் காணும் போதிலும், இறுக்கம் தெரிகிறது.

என் பெரிமிதப்பார்வையை புறந்தள்ளியவாறு அவள் செல்கிறாள்.

என் 12 வருட இல்வாழ்வில் என் மனைவியிடம் ஒரு தத்துவார்த்த மாற்றம் மெல்ல நிகழ்ந்திருப்பதை இன்றுதான் நான் உணர்கிறேன்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(3 posts)


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Apr 2024 08:13
TamilNet
HASH(0x56089915aa20)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Apr 2024 07:17


புதினம்
Thu, 18 Apr 2024 07:17
















     இதுவரை:  24776538 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2606 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com