அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 25 September 2023

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow குஞ்சரம் arrow இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: முகிலன்  
Friday, 25 June 2004

புலம்பெயர் வாழ்வியலில் கலியாணம், தலைப்பிரசவம் என்பதெல்லாம் மிக மிகப் பெரிய ஒத்திகைகளுடன் நிகழ்த்தப்படும் மாபெரும் நிகழ்வாக உருமாறிக் கொண்டே இருக்கின்றன. கோடம்பாக்கம் சினிமாக்களில் மிகையாக்கி காட்டப்படும் பிரசவக் காட்சிகளைப் பார்த்து மிரண்டு அரண்டு, அதுவும் மொழியறிவு போதாத அல்லது வேலை மொழி மட்டுமே நாவரப்பெற்ற அந்நியச்சூழலில் வைத்தியர்களுடன் சைகை மொழிகளுடனும், கடகப்பொதிகளான ஊகங்களுடனும் பலரும் பெற்றேர்களாகியது சுவையான பல கதைகளாகக் கூடும். இந்தப் புலம்பெயர்ந்த முதல்தலைமுறையினரின் வாழ்வியல் கோலங்கள்தான் எத்தனை.

ஆனால் இது சற்று வித்தியாசமானது. எமது வாழ்வியல் சூழல் மொழி நன்றே புரிந்த அடுத்த தலைமுறையினரது கதை.

அன்றைக்கு திடீரென விடுப்பெடுத்தான் இளம் குடும்பத்தலைவனாகிய என் பணியகத்தின் நண்பன். அவன் மூன்றுமாதத்துக்கு முன்தான் ஒரு பெண்குழந்தைக்கு தகப்பனாகியவன். இப்படி அதிரடியாக இவனெடுக்கும் விடுப்புகளெல்லாம் எனது மேலதிகப் பணிச்சுமையாவது வழமை. இதனால் அவனது விடுப்புகளின் விபரமறிவது எனது சாதாரண நடைமுறை.

“ஏன்டாப்பா திடீரென்று?”
“ஒன்றுமில்லையடாப்பா! இன்று எனக்கும் எனது துணைவிக்கும் ரொம்பவும் அலைச்சலாகிப் போச்சு” வார்த்தைகளில் சோர்வு தெரிந்தது.
புன்முறுவல் பூத்த எனது முகத்தில் அடுத்த வாரிசு ஏதாகிலும் என்பது போன்ற பூடகம் தொனித்தது போலும் துடித்தவனாக
“அப்படியொன்றுமில்லையப்பா. ஒரு குழைந்தையுடன் ஒரு வீட்டையும் வாங்கிப்போட்டு நான் அலையும் நாய்படா வாழ்க்கை போதுமடாப்பா!.......
அவனது வார்த்தைகளில் சலிப்புகள் கொட்டின.
“அப்ப ஏன்? - இயல்பாக நான்
“இலண்டனிலிருந்து எனது மனைவியின் தங்கை வந்திருக்கிறா. அவவுக்க இப்ப ஏழு மாதம்.”
“அதனாலென்ன ஐரோப்பாவுக்குள்ள இருந்து அதுவும் இலண்டனிலிருந்து இங்கே வந்து போவதெல்லாம் ஒரு பிரச்சனையா?”
“இல்லையடாப்பா, அவ இங்கைதான் பிள்ளை பெறப்போகிறா…”
சென்ற வருடத்தில் இலண்டன் மாப்பிளை பார்த்து கல்யாணமாகிப் போயிருந்தவர் இப்பெண். நண்பனின் மாமா வீட்டுக்கு பிரசவத்திற்காக வந்திருக்கிறார். நண்பனும் தனது வசதிக்காக மாமாவின் வீட்டுக்குப் பக்கத்தில் புதிய வீடு வாங்கியிருந்தது இப்போது வம்பாகிப் போச்சு.
எனது எண்ணவோட்டத்தை கணக்கிடாமல் தொடர்கிறான் நண்பன்,
“இலண்டன் வைத்தியசாலைகள் பற்றி தெரியுந்தானே? அங்கு சரியான கஷ்டம். டொக்டர்களும் நன்றாகப் பார்க்க மாட்டார்கள். என்ன பிள்ளையெண்டும் தெரியாது. நன்றாகச் சோதனைகளும் செய்ய மாட்டினம்….”
தொடரும் நண்பனின் வார்த்தைகள் என் செவிப்பறைகளை அடைய விடாமல், மனம் இறுகுகிறது
“அவவின்ர புருசனுக்கு லீவில்லாத வேலை. நாங்கதானே பார்க்க வேண்டும். அவவும் ஏழு மாதத்திலே வந்திருக்கிறா…. இங்கிருக்கிற நிர்வாக பதிவு வேலைகளும் வைத்திய சோதனைகளுமென….
அவன் தொடர்கிறான்.
இலண்டன். எம்மவர்களின் கனவுச் சீமை. இந்த இலண்டனை நோக்கிய பயணங்களின் தோல்விதான் ஏனைய ஐரோப்பிய தேசங்களில் தரிப்பையும் புதிய இருப்பையும் நமக்கு ஏற்படுத்தியது. ஆனால் இலண்டனில் இருந்து மருத்துவ வசதியின்றி வெளியேறுவதென்பது எனக்கு நம்பவே முடியவில்லை. மனம் தாறுமாறாக தடம் புரள்கின்றது.
“சீமை…. இலண்டன் சீமை வாழ்க்கை!” சத்தமிடாமல் மனசு எக்காளமிடுகிறது

“ஆக் அகாகா…கா..” -என்னிடமிருந்து வெளிப்பட்ட வெடிச்சிரிப்பைக் கண்டு மருளுகிறான் நண்பன்.

* பாரிஸ்


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 25 Sep 2023 12:11
TamilNet
HASH(0x55f9e8877750)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 25 Sep 2023 11:53


புதினம்
Mon, 25 Sep 2023 12:11
















     இதுவரை:  24044935 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1298 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com