அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 25 September 2023

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow குஞ்சரம் arrow செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சந்திரன்  
Friday, 18 June 2004

இந்தியாவில் புதிய நாடளுமன்றம் கூடிய முதல் நாள்.

காலை எழுந்து இணைய வெளியில் உலாவியபோதே உற்சாக மனநிலை தோன்றிவிட்டது. வேலைத்தலமான "இன்ரநெற்கபேக்கு" (Internet Cafe) à®µà®°à¯à®®à¯à®ªà¯‹à®¤à¯ கொஞ்சம் தெம்போடு கலந்த துள்ளல் நடை இருக்கவே செய்தது. தமிழகமக்களின் வாக்களிப்பும், தமிழகக்கட்சிகளின் இறுக்கமான போக்கும் தந்திருந்த ஆச்சரியங்களுக்கு அப்பால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருந்தது அப்துல் கலாமின் நாடாளுமன்ற உரையும், செயற்திட்ட அறிக்கையும்.
 
வீறார்ந்த  ஈழப்போராட்டம் புறநிலையில்  புலப்படுத்தும் அதிர்வுகளின் சமிக்ஞை என்கிறது உள்மனம்!

இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் தாராளமாகவே நிமிடக் கொடுப்புகள் தந்து எனது உற்சாகத்தை கொண்டாடினேன். அவர்களும் மகிழ்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எமது புதிய வாடிக்கையாளராக அண்மையில் இணைந்தவர் வருகிறார். தமிழ் மொழி பேசுபவர், à®Žà®©à®•à¯à®•à¯ பரிச்சயமானவர்.  à®‰à®±à¯à®šà®¾à®•à®¤à¯à®¤à¯ˆ பகிர சரியான வாய்ப்பு. ஆனால் இவர் வரும்போதெல்லாம் தனது வாழ்தலின் சலிப்பை முகத்தினாலும், வார்த்தைகளாலும் வெளிப்படுத்தத் தவறுவதேயில்லை. நானும் அவ்வப்போது ஆறுதல் சொல்லி, கொஞ்சம் தாராளமாகவே நேரக்கொடுப்புத் தருவேன்.

“வணக்கம் சார். இன்று உங்கள் நாட்டிலே நல்ல விடயமெல்லாம் அறிவிக்கப்பட்டிருக்குதே…." நான் அவரை உற்சாகமாக வரவேற்கிறேன்.

"என்ன சார் அப்படி நடந்துட்டுது?" வழமைபோலவே அவரும் சலிப்புடன்தான்.

"செய்தி ஒன்றும் அறியவில்லையா?" நானோ அவரது ஆவலைத்தூண்டினேன்.

"என்ன சார் செல்லுங்களேன்…." கொஞ்சம் கெஞ்சல் தொனியுடன்.

"என்ன சார் நீங்கள்..,  தமிழைச் செம்மொழியாக அறிவிக்கப் போவதாக இந்திய குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். எப்பேற்பட்ட நல்ல காரியங்களெல்லாம் நடக்க ஆரம்பிச்சிருக்கு…"

அவருக்கும் எனது உற்சாகம் தொற்றட்டுமே என்ற நப்பாசையில் நான் தொடர்கின்றேன். அவரிடமோ சலிப்பு தொற்றிக்கொள்ள அலட்சியத்துடன் என்னைத் தாண்டுகிறார். என்னால் தொடர முடியாமல் வார்த்தைகள் முடங்குகின்றன..

"செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்? துட்டுக்கு வழிபார்ப்பதை விட்டுப்போட்டு…"

என்னிடமிருந்த உற்சாகத்தை கொன்றுவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து மின்னஞ்சல் பணியினை ஆரம்பிக்கிறார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை மீறி வெளிப்படும் ஒரு நீண்ட பெருமூச்சுடன், இவருக்கு என் உற்சாகத்தின் அடையாளமான மேலதிக நிமிடத்தை கொடுப்பதா என்ற கேள்வியின் பதிலைத் தேடியபடி மற்ற வாடிக்கையாளரின் தொடர்பு வேலையில் மூழ்குகிறேன்.

* பாரிஸ் யூன் 2004


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 25 Sep 2023 10:10
TamilNet
HASH(0x55892e16baf0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 25 Sep 2023 09:52


புதினம்
Mon, 25 Sep 2023 10:10
     இதுவரை:  24044742 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1203 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com