அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 03
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 03   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 20 November 2006

3.

பெத்தாச்சி நிதானமாகக் கைத்தடியை ஊன்றியபடி அந்த நீண்ட தூரத்தை மெல்ல மெல்லக் கடந்து வந்து கொண்டிருந்தாள்.

ஐந்தடிக்கும் சற்றும் அதிகமான உயரம். இப்போ நாரியில் சற்றுக் கூன் கண்டதனால் வளைந்திருந்தது. ஆனால் அன்றைய கம்பீரம், 'வன்னிச்சியார்" என்று மரியாதையோடு பலராலும் அழைக்கப்பட்டு, வன்னியா குடும்பத்;தின் ஒரே பிள்ளையாக எத்தனையோ விவகாரங்களையெல்லாம் ஒரு அரசிக்கு இருக்கக்கூடிய திறமையோடும் மிடுக்கோடும் நிறைவேற்றிய அந்தக் கம்பீரம், இன்னும் வளைந்துவிடவில்லை.

செக்கச் செவேல் என்று அக்கினிக் கொழுந்துபோல வெய்யிலில் மின்னும் உடல் இப்போ மங்கிப் போய்விட்டாலும், எதனையும் தீர்க்கமாகவும், உன்னிப்பாகவும் கவனித்துவிடும் விழிகள்!

வீட்டின் பின்புறத்தை நோக்கி நடந்த வந்து குசினிப்பக்க விறாந்தையில் தான் வழக்கமாகச் சாய்ந்து உட்காரும் மரத்தூணடியில் அமர்ந்துகொண்ட பெத்தாச்சி கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை.

சித்திராவுக்கு அடுத்தவளான நிர்மலாவுக்கும் பெத்தாச்சி என்ன விஷயமாக மாமா குலசேகரத்தாருடைய வீட்டுக்குப் போயிருந்தாள் என்பது தெரிந்திருந்தது. எனவே என்ன நடந்தது என்று அறியும் ஆவலுடன் பெத்தாச்சியினருகே வந்து நின்றுகொண்டாள்.

பெத்தாச்சி நிதானமாக வெற்றிலைத் தட்டத்தை எடுத்து வைத்துக் கொண்டு, சித்திர வேலைப்பாடு அமைந்த பழைய பாக்குரலில் பாக்கை வெட்டிப்போட்டு, எதையோ தீவிரமாகச் சிந்தித்த வண்ணம் துவைத்துக் கொண்டிருந்தாள்.

சட்டெனப் பாக்குத் துவைப்பதை நிறுத்திய அவள் மடை திறந்ததுபோல மளமளவெனப் பொரிந்து கொட்டினாள்.

'என்னை என்னெண்டு நினைச்சுக் கொண்டான் அந்தக் குலசேகரன். சொத்துக்கும், சீலைக்கும் வழியில்லாமல் நிண்ட காலத்திலை, காணி குடுத்துப் பூமி குடுத்து ஆளாக்கிவிட, இண்டைக்கு அவனுக்கும் அவன்ரை வளவுக்காறருக்கும் கண்கடை தெரியாமல் வந்திட்டுது! பொடியன் படிச்சு முடிஞ்சு வெளிக்கிட மூண்டு வரியம் செல்லுமாம், அதுக்குப் பிறகு செய்வம் எண்டு இழுவல் கதையல்லோ கதைக்கிறான்! .... கடைப்புளி நாய்!"

'மூத்தவளுக்கு முடிச்சு வைக்க மூண்டு வரியம் செல்லுமெண்டால், மற்ற நாலுக்கும் கிழடு தட்டின பிறகே கலியாணம் முடிக்கிறது? எனக்கு வந்த ஆத்திரத்திலை கையிலை கிடந்த பொல்லாலை அவன்ரை மண்டையை உடைச்சுப் போட்டு வந்திருப்பன்!" கணீரென்ற குரலில் பொரிந்து தள்ளிய வன்னிச்சியார் பொக்கென்று உணர்ச்சி தணிந்துபோய், ...ம்... என்று நீண்டதொரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு மௌனமாய்ப் பாக்கை இடிக்கத் தொடங்கினாள். சுருக்குகள் கோடிட்ட அவளுடைய முகம் தாழ்ந்திருந்தது. கண்கள் கலங்கிப் போயிருக்க வேண்டும்.

டக்! டக்! என்ற பாக்கு உரலின் ஓசையைத் தவிர வேறெந்த ஒலியும் இல்லை!

சித்திரா சிலையாகிவிட்டாள். அவள் மனதில் ஒரேயொரு வினாமட்டும் துடித்துக்கொண்டு வெளியேறுவதற்குத் தவியாய்த் தவித்தது. அதேசமயம் அவளுடைய தங்கை நிர்மலா, 'ஏன் பெத்தாச்சி, அத்தானும் அங்கைதானே இருந்தவர்?" என்று கேட்டபோது, சித்திரா தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பெத்தாச்சியின் பதிலுக்காக ஏங்கினாள். 'கண்ணகை அம்மனே! கல்லடியானே!" என்று அவளது இதயம் தனக்குத் தெரிந்த தெய்வங்களையெல்லாம் தொழுது கொண்டது.

அமைதியாய்ப் பாக்கை இடித்துக் கொண்டிருந்த பெத்தாச்சி அதை நிறுத்தாமலே உப்புச்சப்பற்ற தொனியில் 'ஓமாக்கும்! அவனும் அங்கைதான் நிண்டவன்!... அவனும் இப்ப ஒரு பெரிய கைதானே!" என்று கூறினாள்.

புன்னை மரத்தடியில் கருவாகி, தென்னைகளின் நிழலிலும், இழைத்த கிடுகுகளின் ஒவ்வொரு பின்னலிலும் உருவாகி, உயர்ந்து இன்பக் கோட்டையாக நின்ற சித்திராவின் இனிய எதிர்காலக் கனவுகள் பொலுபொலுவெனச் சரிந்தன.

சித்திரா பல்லைக் கடித்துக்கொண்டு நின்றாள். நெஞ்சு வெந்து துடித்தது. அவளையும் மீறி இரு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் விழியோரங்களில் வழிந்தன. சட்டென அவற்றைத் துடைத்துக் கொண்டவள், தன்னுடைய அறைக்கு விரைந்து சென்று தன் பெட்டியின் அடியில் இருந்த அந்தக் கசங்கிய கடிதத்தை எடுத்துப் பிரித்தாள்.

'புன்னை மரத்தடியில் காத்திருக்வும்."

அவள் அந்தக் கடிதத்தை மிகவும் நிதானமாகச் சிறு துண்டுகளாகக் கிழித்து வெளியே வீசினாள். அவள் இனி யாருக்காகவுமே காத்திருக்க மாட்டாள்.

குசினியுள் சென்று தான் ஏற்கெனவே கரைத்து வைத்திருந்த பழையதை எடுத்துக்கொண்டு துரவடியில் கிடுகு இழைத்துக் கொண்டிருந்த தங்கைகளிடம் சென்றாள் சித்திரா.

'கெதியிலை கொண்டுவா அக்கா! காதடைக்குது!" துடிப்புடன் கூவினாள் கடைக்குட்டி செல்வம்.

'கொஞ்சம் பொறம்மா!" என்று அன்பாகக் கூறியவண்ணம் அவர்களுக்குப் பரிவுடன் சோற்றுக் கரைசலை ஊற்றிக் கொடுத்த சித்திரா, செல்வம் இழைத்துக் கொண்டிருந்த கிடுகைக் கவனித்தாள்.

'என்னம்மா உன்ரை கிடுகு வடிவில்லாமல் கிடக்குது. ஓலை நெருக்கமாய்க் கிடந்தால் கள்ளோலை விட்டல்லோ இழைக்கோணும்" என்று சொன்னவள் செல்வத்தின் அருகில் அமர்ந்து, கள்ளோலை விட்டுக் கிடுகு இழைக்கும் திறமையை அழகாகக் கற்றுக்கொடுத்தாள் சித்திரா.

(வளரும்)

 


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 10:52
TamilNet
HASH(0x560fa142d3d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 10:52


புதினம்
Tue, 19 Mar 2024 10:52
















     இதுவரை:  24681913 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1205 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com