Saturday, 15 March 2008
தஞ்சா - புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களின் மகள். வயது 18. ஜெர்மனியில் பிராங்பர்ட்டில் 1989ல் பிறந்தார். குடும்பம் தாண்டிய அனைத்து நிலைகளிலும் ஜெர்மன் மொழியே புழங்கும் மொழியாக, பயில்மொழியாக இருப்பதால் தஞ்சா எழுதவதும் ஜெர்மன் மொழியில். அவருடைய கவிதைகள் சேரன் போன்ற கவிஞர்களின் பாராட்டு பெற்றுள்ளன. இக்கவிதையைத் தமிழ் ஆக்கம் செய்தவா சேரன். தஞ்சா - 'ஈழமண்ணில் ஓர் இந்தியச்சிறை' என்ற நூலை எழுதியவரும், ஈழநாடு, ஈழமுரசு போன்ற நாளிதழ்களில் ஆசிரியராய் இருந்தவருமான எஸ். எம். கோபாலரத்தினத்தின் பெயர்த்தி.
துணிவைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் என்னிடம் அது இல்லை
காதலைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் நான் அதைத் தொலைத்து விட்டேன்
நட்பைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் எனக்கு அது தேவையிலலை
உண்மையை பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் அதைத் தாங்கும் வலிமை எனக்கு இல்லை
நம்பிக்கையைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் என்னிடம் அது இறந்துபோய் விட்டது
அறிவைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் அது நிறையவே என்னிடம் உள்ளது
விசுவாசத்தை பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் எனக்கு அப்பாற்பட்டது அது
ஒளியைப் பற்றி என்னிடம எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் நான் இருளில் இருக்கிறேன்
வலியைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் நான் வலியற்றவள்
துயரத்தை பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் இரவும் பகலும் நான் அதனுடனேயே வாழ்கிறேன்
கோபத்தை பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் அது ஒருபோதும் தீரப்போவதில்லை
உன்னைப் பற்றி எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் உன்மேல் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை
என்னைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் என்னை உனக்கு தெரியாது
நன்றி: புதியபார்வை
|