அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 42 arrow 'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மகேந்திரா  
Saturday, 02 February 2008

பிரான்ஸ் 'தமிழர் திருநாள் 2008'
உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்தது

20. 01. 2008 ஞாயிறு தமிழர் திருநாளை நிகழ்வரங்காக்கிய நாளாக  அமைந்திருந்தது. பாரிசின் புறநகரான சார்சல் நகரின் தொடர் வண்டி முகப்பிலிருந்து பதாகைகள் மண்டபத்தைச் சுட்டி வழிகாட்டின. திறந்த மைதானத்துடன் கூடாரக் கொட்டிலாக அமைந்த இடம் தமிழர் திருநாளுக்குப் பொருத்தமானதாகவே அழகுபடுத்தியது. வெளி முகப்பு அழகாக வரவேற்க வெண்ணிறப் பதாகையில் எண்மொழிப் பதிவில் வணக்கமும் மும்மொழியில் நல்வரவும் கட்டியம் கூற வித்தியாசமான வரவேற்பாக இருந்தது. வாசலில் இருந்து மண்டப நுழைவாசல் வரை செங்கம்பளம் விரிக்கப்பட்டு பக்கவாட்டில் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.  எல்லோர் முகங்களிலும் மலர்ச்சியும் எதிர்பார்ப்பும் காணக்கிடைத்தன. வித்தியாசமாக அரங்கம் சோடிக்கப்பட்டிருந்தது. தொங்கவிடப்பட்டிருந்த பதாதைகள் புதிய வடிவில் நிகழ்வின் தனித்துவத்தை எடுத்துரைத்தன. அகண்ட பெரு அரங்கின் இருமருங்கிலும் வள்ளுவுர் நிமிர்ந்து கம்பீரமான அழகைக் கொட்டினார்.

தைப்பொங்கல்: தமிழர்க்கு ஒரு நாள் - தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் - என்ற விருதுவாக்கியத்துடன் பிரான்சில் சென்ற ஆண்டு முதலாவது பெரு அரங்க நிகழ்வாகியது தமிழர் திருநாள்-2007. இந்த ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, நல்லூர்ஸ்தான் பண்பாட்டும் விளையாட்டும், கராப்ஸ் இந்தியா, பிரான்சு சுயமரியாதை இயக்கம் மற்றும் சிலம்பு அமைப்பு என ஆறு அமைப்புகள் இணைந்து தமிழர் திருநாள் 2008 நிகழ்வை L’Espace Champ de Foire, Route des Refuzniks, 95200 SARCELLES   எனுமிடத்தில் அமைந்த வெளியுடன் கூடிய உள்ளரங்கில் நடாத்தின.

தமிழர்களின் பன்முக ஒன்றுகூடலாக அமைந்தது இந்நிகழ்வு. வெளிவாசலில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் சிறப்பு அதிதிகள் மதிப்பாடை போர்த்தப்பட்டுத் தொடர, தமிழர்களின் தொன்மையான பாரம்பரியக் கூத்து அசைவுகளுடனான இன்னிய அணி அழைத்தவாறு செல்ல ஆரம்பித்தது கண்கொள்ளாக் காட்சியாகி புளங்காகிதமடையச் செய்தது. புலம்பெயர் நாடொன்றில் இத்தகைய வரவேற்புடன் தமிழர்களின் நிகழ்வொன்று தொடங்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். இதனை இன்னிய அணியின் உருவாக்குநர்களில் ஒருவரான கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பாலசுகுமார் நேரடியாக பங்கேற்று நெறிப்படுத்தியிருந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிய அணிநடையை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத் தயாரிப்பில் ஆசிரியர்கள் திருமதி அனுஷா மணிவண்ணன், செல்வி வினோதா சந்திரகுமார் ஆகியோர் பயிற்றுவித்தனர். தமிழர்களின் தனிச்சிறப்பான நாளான தமிழர் திருநாளில் முதல் அரங்கம்கண்ட இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவிகள் சந்தியா சரசகோபாலன், சாருகா சரசகோபாலன், சங்கீதா குணசேகரலிங்கம், பிரதீபா வரதராஜா, தனுஜா சந்திரகுமார், அனித்த கமலநாத சத்தியேஸ்வரன், சுஜிந்தா முத்துசிவராசா, சுஜிதரா யோகேஸ்வரன், சோபி சிறீஸ்கந்தராஜா, சாமினி சிவராஜா ஆகியோராவர்.

இன்னிய அணி

இன்னிய அணி

அரங்க நுழைவாசலை நாடாவெட்டி ஆரம்பித்தார் பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா பொப்பினி அவர்கள்.

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்

மேடையில் இன்னிய அணி ஆடி சிறப்பு அதிதிகளைக் கௌரவித்து வரவேற்றதும் தமிழர் திருநாள் ஏற்பாட்டாளர்களான ஆறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிறப்பு அழைப்பாளர்களும் மங்கள விளக்கேற்றினர்.

ஆறுமுகம் பரசுராம் - விளக்கேற்றல்

கிறிஷ் பொன்னுசாமி விளக்கேற்றல்

பேராசிரியர் பன்னீர்செல்வம்

மலேசிய பிரதிநிதி திருமாவளவன்

பிரான்ஸ் சுயமரியாத இயக்கம்

நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு

தொடர்ந்து அமைதி வணக்கம் செலுத்தி நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக தொடக்கினார் தமிழர் திருநாள் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு அலன் ஆனந்தன். நிகழ்வின் வரவேற்பினை இருமொழிகளில் வழங்கினார் இந்நிகழ்வை ஒருங்கிணைத்துக் பணியாற்றியர்களில் ஒருவரான பேராசிரியர் அ.முருகையன் அவர்கள்.

அ.முருகையன் - வரவேற்புரை

இதன் பின் அரங்கங்களை முறைப்படி திறந்துவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. யுனெஸ்கோ இயக்குநர்களில் ஒருவரும் முன்னைநாள் மொறீசியஸ் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராம் பொங்கல் அரங்கைத் நாடா வெட்டித் திறந்து பொங்கலடுப்பிற்குத் தீ மூட்டி ஆரம்பித்துவைக்க பிரான்சு சுயமரியாதை இயக்கத் தலைவர் திரு கோபதி தலைமையில் பொங்கலிடல் நடைபெற்றது.

பொங்கல் தொடங்குதல்



மொரீசியஸ் உதவிப் பிரதமரின் முதன்மைச் செயலாளரான திரு கிறிஸ் பொன்னுச்சாமி அவர்கள் கோலமிடல் அரங்கைத் திறந்து வைத்தார். இதில் திருமதி சாந்தால் யுமல் அவர்களுடன் திருமதி ரவி ராஜேஸ்வரி அவர்களும் கலந்து கோலமிடல் அரங்கைச் சிறப்பித்தனர். இவர்களுடன் செல்வி சோபிதா வீரசிங்கம் தனது கோலம் கறறுக் கொள்ளும் ஆர்வத்தால் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.

கோலமிடல்

கோலமிடல்

கண்காட்சி அரங்கை மக்கள் நிர்வாகியும் பனியோ நகர அரசியல் பிரமுகருமான திருமதி மரி வீரபத்திரன் அவர்கள் திறந்து வைத்தார். பிரஞ்சுக்கும் தமிழுக்குமிடையிலான தொடர்பினைச் சுட்டும் தொகுப்பாக நூல்களும், தமிழர்களின் பரம்பல் தொடர்பான விபரணங்களும், அரிய பண்டையத் தமிழர் தொடர்பான ஆவணங்களுமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை பலரும் விரும்பிப் பார்த்தனர். இதில் வைக்கப்பட்டிருந்த ஏட்டுச்சுவடியும் மிதிவடிக் கட்டையும் சிறார்களைக் கவர்ந்தன.

மரி வீரபத்திரன் கண்காட்சி அரங்கு

மேடையில் வள்ளுவர் முன்னிலையில் தமிழார்வலர்களான பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பிரெஞ்சுத்துறையின் தலைவர் பன்னீர்ச்செல்வம் அவர்களும், மலேசியக் கல்வி ஆசிரியரும் எழுத்தாளருமாகிய இரா திருமாவளவன் அவர்களும் சிறார்களுக்கு அகரம் தொடக்கும் சான்றோர்களாயினர்.  இதனை ஆசிரியர் அருளம்பலம் அவர்கள் நெறிப்படுத்தினார். இரண்டாவது தடவையாகத் தொடரப்படும் இந்நிகழ்வில் 27 சிறார்களும் பெற்றோரும் பேருவகையுடன் பங்கேற்றனர். அகரம் எழுதலில் இம்முறை மதம் கடந்து தேச எல்லைகள் கடந்து ஈழத்தமிழர்களும், பாண்டிச்சேரித் தமிழர்களும், குவாதுலூப் தமிழர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றது குறிப்பிடத்தகுந்தது. இதனால் இவ்வரங்கு உலகத் தமிழர்கள் ஒருங்கிணையும் நிகழ்வாகிப் புதிய பரிமாணத்தைப் பெற்றது.

அகரம் எழுதல்

அகரம் எழுதல்

அகரம் எழுதல்

சிறார்கள் அகரம் எழுதிய தாளையும் எழுதுவதை பதிவாக்கிய ஓளிப்படத்தையும் இணைத்து அழகாக சட்டகமிட்ட படத்தை பேராசிரியர்கள் முருகையன் அவர்களும் பாலசுகுமார் அவர்களும் அகரம் எழுதி முடித்த சிறார்களுக்கு வழங்கி மதிப்பளித்தனர்.

மதிப்பளித்தல் - அ.முருகையன்

மதிப்பளித்தல் - பாலசுகுமார்

தமிழர் திருநாள் நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் மணக்கும் பொங்கல் வழங்கப்பட்டதுடன் முதல் அரங்கு நிறைவுற்றது.


முழுமையான மேடை அரங்காகிய இரண்டாம் அரங்கு தமிழர்களின் தொன்மையான இலக்கியங்களில் இருந்து மீட்டெடுத்த தொகுசொற்கோடியன் வருகையுடன் தொடங்கியது. அரங்காளுகையில் தனக்கென்ற தனி முத்திரையைப் பதித்தவராக பாலசுகுமார் அவையைக் கட்டிப்போட்டார். இதனைத் தொடர்ந்து சிற்றுரைகளாக வாழ்த்துரைகள் இடம் பெற்றன.

தொகுசொற்கோடியன்

தொகுசொற்கோடியன்

கராப் இந்தியா அமைப்பினர் வழங்கிய "கரீபியன் தீவில் தமிழ்" என்ற பாடலரங்கு வித்தியாசமானதாக இருந்தது.  நூற்றாண்டின் முன்பாக புலம் பெயர்ந்த இந்த தமிழர்களிடம் தமிழ் எப்படியாக உச்சரிப்பில் மாற்றமடைந்திருக்கிறது என்பதை பறைசாற்றியது இந்நிகழ்வு.

கரிபீயன் தீவில் தமிழ்

ஈழத்தமிழ் இசை வடிவில் பாடப்பட்ட பாரதியின் 'வாழ்க நிரந்தரம்...." பாடலுக்கு திருமதி தனுஷா மதி அவர்களின் நெறியாளுகையில் அவரின் மாணவர்கள் நடனமிட்டனர். இப்பாடலை பாலசுகுமார் பாட யூட் இசையமைத்திருந்தார். வித்தியாசமான உடை, இசை மற்றும் கூத்து அசைவுடன் மாணவிகளின் வெளிப்பாடு அவையை ஈர்த்தது.

தனுஷா மாணவிகள்

தனுஷா மாணவிகள்

தமிழர்களின் தொன்மையான ஆடல் வடிவங்களில் ஒன்றான பொய்க்கால் குதிரை ஆட்டத்தை யேர்மனி கெற்றிங்கன் நகரில் இருந்து வருகை தந்திருந்த இரு மாணவிகள் - செல்வி பிரவீணா பகீரதன், செல்வி தாரணியா சண்முகநாதன் - நாடாத்தியது சிறப்பாக இருந்தது. இவர்களின் மகிழ்வான முகபாவங்களும் தாளத்திற்கேற்ற ஆடல் அசைவுகளும் சபையின் கரவொலியைப் பரிசாக்கியது. இதனை சிவகுமாரன் பழக்கி நெறிப்படுத்தியிருந்தார்.

பொய்க்கால் குதிரையாட்டம்

பொய்க்கால் குதிரையாட்டம்

பொங்கல் அரங்கை வித்தியாசமாகச் சிறப்பித்திருந்த பிரான்சு சுயமரியாதை இயக்கம் திருக்குறள் கூறலை அரங்க நிகழ்வாக்கியது. சிறார்கள் குறள் பாட அதன் பொருளை தமிழிலும் பிரெஞ்சிலும் வெளிப்படுத்தினர்.

திருக்குறள் அரங்கு

திருமறைக்கலா மன்றத்தைச் சேர்ந்தவரும், இலண்டன் தீபம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சாம் பிரதீபன் தனது ஓரங்க நிகழ்வாக 'கூத்து விபரணத்தை' நிகழ்தினார். சுமார் அரை மணி நேரம் போனதை அவை மறந்தது.

கூத்து விபரணம்



உடுப்புத்தாங்கியில் மாட்டப்பட்டிருந்த அங்கிகளை அவ்வப்போது மாற்றியவாறு தெரிவு செய்யப்பட்ட இசைப் பாடலுக்கான கூத்தசைவால் சபையை தன்வசமாக்கிய சாம் பிரதீபன், கட்டியக்காரனில் தொடங்கி கடைசியில் தற்கால இலங்கைத்தமிழரின் அவலத்தைக் காட்டும் அசைவுடன் முடித்த இந்நிகழ்வு மொழி புரியாதவர்களையும் தாண்டி கலங்க வைத்தது.

கூத்து விபரணம்

கூத்து விபரணம்

திராவிடப் பாரம்பரியக் கலையான களரி ஆட்டத்தை அரங்க நிகழ்வாக்கினர் திரு ரவீந்திரனும், சிறினிவாசனும்.  புலம்பெயர் ஈழத்தமிழ் மேடை நிகழ்வொன்றில் இவ்வரங்க நிகழ்வு முதற்தடவையாக இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது உடலைப் பிசைந்தெழும்பும் அசைவுகளும் பாய்ந்து நடந்த வாள் சண்டையும் மயிர்கூச்செறிய வைத்தது என்றால் மிகையில்லை.

களரி - ரவீந்திரன் சிறினிவாசன்

களரி

களரி

இம்முறை உமாபதி குழுவினர் வழங்கிய இசையரங்கம் மென்னரங்காக நடைபெற நிகழ்வு நிறைவுற்றது.

'தமிழ்த்தாயின் விழாவாகிய தமிழர் திருநாளை அடுத்த தலைமுறையினர் தம் கண்முன்னாலேயே நிகழ்த்தவேண்டுமென்ற அவாவை மொழிந்து தமிழ்த் தாயை வாழ்த்தும் நாமெல்லோரும் நன்றி பாராட்டுதலுக்கு அப்பாலான வரலாற்றுக் கடமையையே செய்கிறோம்...." எனச் சுருக்கமான தனது நன்றியுரையில் குறிப்பிட்டார் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முகுந்தன்.

நன்றியுரை க.முகுந்தன்

எமது பாரம்பரிய முறையில் அமைந்த வாழி பாடலை பாலசுகுமார் பாடி தமிழர் திருநாளை நிறைவுறவைத்தார்.

வாழிபாடல் பாலசுகுமார்

'மன்று தழைக்க
மனுவெல்லாம் ஈடேற
கன்று தழைக்க
கறவையினம் பால்பெருக

ஏர் வாழி
ஊர் வாழி
உலகம் வாழி
உலகோர் வாழி

பாடனோர் வாழி
ஆடினோர் வாழி
கூடினோர் வாழி
கூடி மகிழ்ந்தோரும் தான்வாழி

வாழியவே வாழியவே
பல்லாண்டு வாழியவே
வந்தோரும் வாழியவே
எல்லோரும் வாழியவே

இன்றைய நிகழ்வின் ஒலியமைப்பு எவ்வகையிலும் பிசிறடையாமல் சீராக இருந்ததை அனைவரும் பாராட்டினர். சிரித்த அமைதியான மென்மையான சுபாவத்துடன் ஒலியமைப்பை வழங்கிய சிவா அவர்களை மகிழ்வுடன் பாராட்டினர். தவிர கம்பீரமான வள்ளுவர் திரைச் சீலையுடன் அரங்கம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. விழா மண்டபத்தினுள் இரு தட்டைத்தொலைக் காட்சிப் பெட்டி வைக்கப்பட்டு தமிழர் திருநாள் அனுசரணையாளர்களது விளம்பரங்களையும் நிகழ்வின் காட்சிகளையும் வெளிப்படுத்தியது வித்தியாசமாக இருந்தது.

பொங்கல் பற்றிய தமிழ் பிரஞ்சு ஆங்கில ஆக்கங்களும் சிறப்பாளர்களின் வாழ்த்துகளுடனுமான பதிவுகளுடன் இந்நிகழ்வுக்கு உயிர் ஊட்டிய அனுசரணையாளர்களின் விபரங்களுடன் சிறப்பு மலர் அழகான வடிவமைப்பில் இலவசமாக வெளியிடப்பட்டிருந்தது.


இம்முறை முதல் நாளன்று (19-01-2008) ஆய்வரங்கொன்றையும் நடாத்தியது தமிழர் திருநாள் ஏற்பாட்டாளர் குழு. புலம்பெயர் தமிழர்களும் அடையாளமும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கை பேராசிரியர் முருகையன் நடாத்தினார். இதில்

1. கிபி அரவிந்தன்  à®ªà®¿à®°à®¾à®©à¯à®šà®¿à®²à¯ புலப்பெயர்வு தமிழ் இலக்கியம்
2. பாலசுகுமார் (இங்கிலாந்து) à®ˆà®´à®¤à¯ தமிழர் அடையாளக் காரணிகள்:  à®‡à®šà¯ˆà®¯à¯à®®à¯ நடனமும்
3. பன்னீர் செல்வம் (இந்தியா) à®ªà¯à®²à®®à¯à®ªà¯†à®¯à®°à¯à®µà¯ அடையாளம் காணலில்  à®®à¯Šà®´à®¿à®ªà¯†à®¯à®°à®ªà¯à®ªà®¿à®©à¯ பங்கு
4. முருகையன் (பிரான்சு) à®ªà¯à®²à®®à¯ பெயர் சமூகங்களின் தனித்துவமும்  à®…டையாள நிர்ணயமும்
5. திருமாவளவன் (மலேசியா) à®ªà¯à®²à®®à¯à®ªà¯†à®¯à®°à¯ தமிழ் அடையாளம் காணலில் மலேசியாவின் முன்னோடித்துவம்
6. பொன்னுசாமி (மொரீசியஸ்) à®ªà¯à®²à®®à¯à®ªà¯†à®¯à®°à¯ தமிழர்களும் பொருளாதார வளர்ச்சியும்
ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழர் திருநாளை ஒட்டியதாக இப்படியானதொரு ஆய்வரங்கை நடாத்தியது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவே இருந்தது. ஆய்வரங்கில் கலந்துகொண்ட சிறப்பழைப்பாளருக்கு தமிழர் திருநாள் ஏற்பாட்டாளர்கள் சுவைமிகுந்த இரவுணவை வழங்கி மதிப்பளித்தனர்.

ஆய்வரங்கு

ஆய்வரங்கு

ஆய்வரங்கம்

ஆய்வரங்கு

ஆய்வரங்கு

பல்வேறு தேச எல்லைகள் கடந்த தமிழர்களை ஒன்றுகூட்டிய பிரான்சு தமிழர் திருநாள் 2008 நிகழ்வரங்கு ஈழத் தமிழர்களின் தனித்துவமான இசை ஆடல் கலை முத்திரைப் பொறிக்கப்பட்ட நிகழ்த்துகலையின் நீங்கா நினைவுகளுடன் வழியனுப்பிவைத்தது.
(ஒளிப்படங்கள்: சந்திரன். சிலம்பு உறுப்பினர்)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 06:46
TamilNet
HASH(0x5563ab170468)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 06:46


புதினம்
Tue, 19 Mar 2024 06:46
















     இதுவரை:  24681690 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1839 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com