 |
அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க  |
|
  |
|
எழுதியவர்: தளநெறியாளர்
|
|
|
Monday, 01 October 2007









ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளில் எஸ்.பொன்னுத்துரை (சண்முகம் பொன்னுத்துரை) என்னும் இயற்பெயர் கொண்ட எஸ்பொ அவர்கள் முக்கியமானவர். ஏறத்தாழ அறுபதாண்டுகாலத்தை தாண்டியது அவரது இலக்கிய வாழ்வு. 1932ல் யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்பொ, தனது பல்கலைக்கழக படிப்பை சென்னையில் முடித்தவர். இலங்கையில் மட்டக்களப்பில் ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் பணியாற்றிய எஸ்பொ, 1981ல் ஆபிரிக்காவில் நைஜீரிய நாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அத்துடன் இலங்கையில் இருந்தபோது கல்வி அமைச்சின் பாடவிதானக்குழுவிலும், இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் குழுவிலும் பங்கேற்றவர். தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் எஸ்பொ. சென்னையில் மித்ர என்னும் பதிப்பகத்தையும் இயக்கி வருகின்றார். 1950களில் தமிழகம் அறிந்த ஈழத்து படைப்பாளிகளில் எஸ்பொ குறிப்பிடத்தகுந்தவர். அக்காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரசண்ட விகடன், கலைமகள், கல்கி, சரஸ்வதி ஆகிய இதழ்களில் இடம்பெற்றுள்ளன. ஈழத்தின் சிறந்த சிறுகதையாளராக கணிக்கப்படும் எஸ்பொ, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, ஊடகம் என பல தளங்களில் செயல்பட்டவர். ஈழத்து இலக்கியத் தளத்தில் 'நற்போக்கு இலக்கியம்" என்னும் கருத்தாக்கத்துடன் செயல்பட்டதுடன், படைப்பாக்கத்தில் பல பரிசோதனைகளையும் முன்னுதாரணங்களையும் நிகழ்த்தியவர். இவரது முதல் நாவலான தீ மிகுந்த பாராட்டையும் கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. தீ, சடங்கு, ஆகிய நாலல்களையும் வீ, பூ, அவா, என்னும் சிறுகதைத் தொகுதிகளையும், நனவிடை தோய்தல், கீதையின் நிழலில், பெருங்காப்பியம் பத்து, ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுளார். அத்துடன் இரண்டு பாகங்கள் கொண்ட 2000ம் பக்கங்களிலான வரலாற்றில் வாழ்தல் என்னும் தன்வரலாற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் ஒரு படைப்பாளியின் தன்வரலாறு இத்தனை பக்கங்களில் இதுவைரை எழுதப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு அப்பால் தமிழ் குழுமத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.


இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
|
|
|
|
  |
செய்திச் சுருக்கம் |
|
|
 |