அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 13 June 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 35 arrow தாசீசியஸ் நேர்காணல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தாசீசியஸ் நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கானா பிரபா  
Monday, 04 June 2007
பக்கம் 6 of 8

கானா பிரபா: அதாவது நீங்கள் கற்றுக் கொடுத்ததை  உள்வாங்கியவர்கள் மேடையேற்றங்கள் எதாவது  செய்திருக்கின்றார்களா..? அல்லது உங்களது தலைமையிலோ  அல்லது உங்களுடைய நெறியாள்கையிலோ அப்படியான  முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனரா..?

தாசீசியஸ்:   நான் நினைக்கிறேன் தொட்டம் தொட்டமாக இங்கே  பயிற்சிகளை பலரும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நான்  அதிலிருந்து ஓரளவிற்கு விலகிவிட்டேன் என்று கூறலாம். ஆனால்  நான்கோ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விவேசய்க்  கலையகத்திற்கு நான் போயிருந்த போது ஒரு பலஸ்தீனக் குழு  ஒன்று வந்திருந்தது. அவர்கள் நாடகத்திற்கு முதல் தங்களுடைய சில விடயங்களை தொட்டம் தொட்டமாக போட்டு எப்படிப் பயிற்சி  எடுப்பதென்று காட்டினார்கள். அப்பொழுது என்னுடைய பயிற்சிக்கு  இங்கே வந்து கற்ற ஒரு பலஸ்தீனியன் ஒருவருடைய மாணவரும்  அந்தக் நாடகக் குழுவில்  இருந்தார். அவர் இது தமிழ்முறை என்று  சொல்லி அங்க இருந்தவர்களுக்கு விளங்கப்படுத்தினார். நான்  சந்தோசமாக கேட்டுவிட்டு எழும்பி வந்தேன். ஏனென்றால்  என்னுடைய மாணவருடைய மாணவர் அங்கே வந்த இது  தமிழ்முறை என்று நாடகங்களைப் போட்டுக் காட்டியபோது  சந்தோஷமாக இருந்தது. எங்களுடைய ஆட்ட வடிவங்களையும் அவர் போட்டுக் காட்டியிருந்தார். ஆனால் பயிற்சிப் பட்டறைகள் பலபேர்  நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். பாலேந்திரா கூட நடாத்திக்  கொண்டிருக்கிறார். நாடகம் தொடர்பாக எவர் எவரிடமிருந்து எது  வந்தது என்பதை என்னால சொல்ல முடியாது. என்னுடைய நாடகப்  பயிற்சியால்தான் என்றெல்லம் அப்பிடி என்னால் சொல்ல முடியாது.  என்னிடம் இல்லாததை மற்றவர்கள் கற்றுத்தந்தார்கள் என்பதல்ல  ஒவ்வொருத்தரும் தங்களிட்டை உள்ளதை மெருகூட்டினார்கள்  என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் ஆர்வத்தோடை வந்தபடியால் அவர்களைக் கொஞ்சம் திருத்தி விட்டானான் என்றுதான்  நினைக்கிறேன். அப்படித்தான் இங்கே பயிற்சிகள்  கொடுக்கப்படுகின்றன. இங்கே யார் நாங்கள் கர்தாக்களாக,  பிரமாக்களாக உரிமை பாராட்டுறதுக்கு. இவை தொன்று தொட்டு  வருபவை. இடையில நாங்கள் ஒரு சின்னப் பங்களிப்பைச் செய்து  போட்டு போகிறோம். அப்பிடித்தான் நான் இந்த நாடகப் பயிற்சிகளைப் பார்க்கிறேன். அதனால் என்னால் உரிமை பாராட்ட முடியேல உரிமை பாராட்டக் கூடாது.

கானா பிரபா: இதேவேளை தமிழ் நாடகத்துறை என்பது இன்றைக்கு  வரக்கூடிய தொலைக்காட்சி நாடகங்களால் கொஞ்சம் ஆட்டம்  கண்டிருப்பதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டிருக்கிறது. அதேவேளை  நவீன நாடகம் என்பது நீங்கள் குறிப்பிட்டது போன்று தமிழ் பேசும்  மக்கள் தவிர்ந்த மேலத்தேயவர்களாலும் போற்றக்கூடிய அளவிற்கு  மற்றவர்களாலும் உள்வாங்கங்கூடிய அமைப்பிலே அந்த நவீன  நாடகத்தினுடைய பாணி அல்லது அவற்றை வெளிப்படுத்தும் தன்மை அமைந்திருக்கின்றது. இல்லையோ..?

தாசீசியஸ்:  ஓம் நவீன நாடகம் எனும் பொழுது நாங்கள் ஒன்றை  மறக்கக்கூடாது. நவீனம் என்பது மெருகூட்டப்பட்டதே ஒழிய ஏதோ  புதிதாக வந்தது என்பது அல்ல. எல்லாமே மெருகூட்டப்பட்ட  வடிவங்கள்தான். பாரம்பரியத்தில் இருந்து வருபவை, அவை  மெருகூட்டப்பட்டவை என்ற அர்த்தத்திலேதான் கொள்ளவேண்டும்.  அபந்த நாடகங்களை எடுத்துக் கொண்டாலும்கூட அதுவும்  எங்களுடைய மூலப்பாரம்பரியத்தில் இருந்து திருப்பித் திருப்பி  காட்டுவதாக அதாவது ஒரு நடனம் ஒன்று தொடங்கும் போது அந்த  நடனத்தின் முதல் அசைவை இடையிலே நிறுத்தி அதை பிறீஸ்  பண்ணி, அதன் பின்னர் அது தொடரும் பின்னர் அதனை பிறீஸ்  பண்ணி அதாவது வந்து சாலிச் சப்பிளீன் நடைபோல நேரில்லாமல்  டக் டக் டக் என்று எட்டி எட்டி வைச்சு நடக்கிறது. பிறகு கோர்த்து  விட்டுப் பார்த்தால் முழு நடையாக இருக்கும். அப்படியான அபத்த  வடிவங்கள் கூட பாரம்பரிய வடிவங்களில் இருந்துதான் வருகின்றது.  நீங்கள் இரண்டு கேள்விகளைக் கேட்டீர்கள். தொலைக்காட்சி  வருவதற்கு பின் எற்பட்ட பாதிப்பு, மற்றது நவீனத்துவம் தருகிற  அந்த மெருகூட்டல். தொலைக்காட்சி வந்ததற்கு பிற்பாடு என்றால்  முக்கிய காரணம் அது மட்டுமல்ல. நாங்கள் புலம்பெயர்ந்து  அகதிகளாக வந்த எங்களுக்கு நேரமில்லை, மாதக்கணக்கிலை ஒரு  நாடகத்தைப் பயிற்சி எடுத்து அதைச் செய்வதற்கு. உதாரணமாய்  நாங்கள் இலங்கையில் இருந்த போது கோடை நாடகத்தை  மேடையேற்ற ஆறுமாதப் பயிற்சி செய்தோம். ஆறுமாதப் பயிற்சிக்குப் பின்னர் தான் அந்த நாடகம் மேடையேறியது. மேடையேறும் அந்த  நாடகத்தை நான் வெளியில் இருந்தபடியே எத்தனையாவது நிமிடம்  என்ன நடக்குது என்று கூறக்கூடியதாக இருக்கும். நாடகம்  தொடங்கின உடன நான் வெளியால் போய்விடுவேன். நாடகம்  முடிவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்தான் நான் உள்ள  வருவேன். எனக்கு தெரியும் நான் திரும்பி வருகிற இரண்டு  நிமிடத்தில் நாடகம் முடியுமென்று. ஆனால் இங்கே அப்படியல்ல  புலம்பெயர்ந்து வந்தனாங்கள் எங்களுக்குத் தேவைகள் நிறைய, இனி  நாடக பயிற்சிக்கு இடவசதி கிடையாது, அதனால் நாடகங்களுக்கான  முழுமையான பயிற்சிக்கு இங்க இடமில்லை தொலைக்காட்சியில்  பிழைகளை மீளத்திருத்தி திருத்தி எடுத்துப் போடலாம். ஆனால்  மேடையில செய்தால் செய்ததுதான், பேர் கெட்டால் கெட்டதுதான்.
நவீனத்துவம் இங்க என்ன மாதிரி பயன்படுகிறது என்று கேட்டீர்கள்.  நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாங்கள் புலம்பெயர்ந்து வாழுகிற  மக்கள், எங்களுக்கு தொடர்ச்சியாக நாடகப் பயிற்சி எடுக்க முடியாது.  ஆனபடியால் என்னுடைய நவீனத்துவ அறிவினை நாடகங்களுக்குப்  பயன்படுத்தி அகதி மக்களுக்கிடையில் அதனை நன்றாகப்  பிரயோகிக்க முடிந்தது. உதாரணமாக இலங்கையில் நடக்கும்  நிகழ்வுகளை, சம்பவங்களை நாங்கள் இங்கே மக்களுக்குத்  தெரியப்படுத்த விரும்பும் போது அவற்றை நாங்கள்  நாடகமாக்கினோம். பத்து நிமிட, பதினைந்து நிமிட, ஐந்து நிமிட,  மூன்று நிமிட சின்னச் சின்ன துண்டுகளாக ஆனால் அதை நாடகத்  தன்மைப்படுத்தி சம்பவங்களை விவரித்தோம். அதை நாங்கள் நாடகப் படுத்தும் போது ஒரே இடத்தில நாங்கள் ஒரு பதினைந்து, இருபது  நிமிட துண்டுகளைக் கொண்டுபோய் மண்ணில் நடந்தவை அல்லது  களத்தில் நடந்தவை என்ற தலைப்பில் அவர்களுக்கு நாடகங்களாகப்  போடுவோம். அப்ப உடனடிச் செய்திகளைக் கூறுவதற்கும், மக்களுக்கு அங்க நிகழும் உண்மை நிகழ்வுகளைக் காட்டுவதற்கும் நவீனத்துவ  முறையில நாங்கள் இந்த விடயங்களை நாடக மூலம் உடனடியாகச்  சொல்லக் கூடியதாக இருந்தது. அதற்கு இந்த நவீனத்துவ நாடக  முறைகள் நிறையப் பயன்பட்டன. அதாவது எங்களுடைய பயிற்சிகள் குறிப்பாக நவீனத்துவ பயிற்சிகளுக்கு வந்த எங்களது பிள்ளைகள்  பதினொரு வயதில இருந்து இருபத்தியெட்டு வரை இருந்தார்கள்.  நாங்கள் பயிற்சிகளை எடுத்துவிட்டு இப்படியான விடயங்களை  விவாதித்து விட்டு ஆளுக்காள நாங்கள் உடனடியாக பாத்திரங்களை  பகிர்ந்து கொண்டு பாத்திரங்களையும் அந்தக் கதைகளையும்  வைத்துக்கொண்டு பயிற்சிகளை நாங்கள் உடனடியாக நடத்துவம்.  ஓவ்வொரு நாளும் ஐந்து ஆறு விடயங்களை எடுத்துக் கொண்டு  பயிற்சிகளை நடத்துவம். அன்று மாலையே நாங்கள் ஏதாவது  நிகழ்ச்சிக்குச் செல்வதாக இருந்தால்; அங்க  ஐந்து அல்லது ஆறு  நாடகங்களை நாங்கள் போடுவம். எங்களுக்கு ஒரு மணித்தியாலம்  ஒதுக்கினால் சில வேளைகளில் சின்னச் சின்ன நாடகங்களாக பத்து  நாடகங்கள் போடுவோம். அல்லது ஆறு நாடகங்கள் போடுவோம்.  இப்படியாக ஒரு அகதி நிலைப்பட்ட மக்களுக்கு நாடகத்தன்மையை  சுவை குன்றாத வகையில், மக்களுக்கு விடயங்களைத் தெரிவிக்கும்  வகையில் எங்களால் நாடகங்களை நிகழ்த்த முடிந்தது. அப்பிடிப்  பார்த்தால் மண்ணில் நிகழ்ந்தவை அல்லது களத்தில் நிகழ்ந்தவை  என்று ஆறு ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருநூறு அல்லது  முந்நூறு நாடகத் துண்டுகள் நாங்கள் போட்டிருப்போம்.  அவற்றுக்கெல்லாம் நாடகப் பயிற்சியிலும், நாடகக் கல்வியிலும்  எங்களுக்கு இருந்த அந்தத் தன்னம்பிக்கைதான் காரணம். ஒரு  பயிற்சி முறையால் அதன் பலத்தை அறிந்து அதைப்  பிரயோகிக்கலாம் வெல்லலாம் என்ற தன்னம்பிக்கை எங்களுக்கு  இருந்தது.மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 13 Jun 2024 12:10
TamilNet
HASH(0x558e26592150)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 13 Jun 2024 12:10


புதினம்
Thu, 13 Jun 2024 12:10
     இதுவரை:  25115051 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5623 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com