அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 09 June 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 35 arrow தாசீசியஸ் நேர்காணல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தாசீசியஸ் நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கானா பிரபா  
Monday, 04 June 2007
பக்கம் 1 of 8

ஈழத்து நவீன நாடக வரலாற்றிலே புதிய போக்கினை நிறுவிய நாடக  நெறியாளர், ஊடகர் ஏ.சி. தாசீசியஸ் அவர்கட்கு கனடிய இலக்கியத்  தோட்டத்திற்கான தேர்வுக்குழு 2006ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்குகின்றது. விருது வழங்கும் நிகழ்வு 03-06-2007 ல் கனடாவில்  இடம்பெற்றது. இந்த வேளையில், 'தமிழ்நாதம்" இணையத்  தளத்திற்காகச்  தாசீசியஸ் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வியின்  எழுத்து வடிவத்தினை இங்கு தருகின்றோம்.

ஏ.சி.தார்சீசியஸ்

கானா பிரபா: ஈழத்திலே நவீன நாடக வரலாற்றை நிறுவி, ஒரு புதிய  போக்கை நிறுவி ஒரு சாதனையைப் படைத்திருக்கின்றீர்கள். இந்த  வேளையிலே, நாடகத்துறையிலே உங்களுடைய ஆரம்பம் எப்படி  இருந்தது என்று கூறுவீர்களா?

தாசீசியஸ்: நவீன நாடகத்துறையிலே ஒரு புதிய போக்கை  நிறுவினேன் என்று நீங்கள் கூறும்போது, அது முதன்முதலில்  என்னிடமிருந்து தோன்றியது என்கிற ஒரு மாயையை  ஏற்படுத்திவிடக்கூடாது. ஒரு தொடர்நடவடிக்கையின், ஒரு  சங்கிலிக்கோர்வையின் அங்கமாக, வளையமாக இடையிலே  சேர்ந்தவன் நான். என்னுடைய அந்தப் பங்களிப்புக் காத்திரமானதாக,  துடிப்புமிக்கதாக இருந்திருக்கலாம், அவ்வளவேதான்! நாடகத்தில்  எனது பிரவேசம் என்பது, சிறுபிராயத்தில் எனது ஊரில் நான் பார்த்த  நாட்டுக் கூத்துக்கள்தான். அவைதான் எனக்குள் அந்த அறிமுகத்தைத் தந்தன. நாடகங்கள் பழகுவதும், மேடையேற்றுவதும் கிராமச்சூழலில்  தொடர்ச்சியாக நடந்துகொண்டு வருபவை. அவை எம் வாழ்வுடன்  இரண்டறக் கலந்துவிடுகின்றன.

நான் பிறந்த காலத்தில், அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து  நாற்பதில், கிராமத்தில் வானொலியோ, திரைப்படமோ பெரிதாக  இருந்ததில்லை. அவற்றிற்கு நாங்கள் நகரங்களுக்குத்தான்  செல்லவேண்டும். ஆகவே, நாட்டுக்கூத்துக்கள், நாட்டுப்பாடல்கள்தான்;  மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களோடு  எங்களை இணைத்தன. அவர்கள் பாடும் பாடல்களைக் கவரவைத்தன.  இங்கேதான் என்னுடைய நாடக ஆர்வம் தொடங்கியது.  பள்ளிக்கூடத்தில், குறிப்பாக, இளவாலை புனித ஹென்றிஸ் கல்லூரி  ஆசிரியர்கள் என்னுடைய நாடக ஆர்வத்தை வளர்த்தார்கள். அங்கு  ஆண்டுதோறும், தவணைதோறும் நாடகங்கள் நடைபெறும். அவற்றில்; நான் பங்கெடுப்பேன். என்னுடைய அந்த ஆசிரியர்களை இப்போ  நினைவுகூருகின்றேன். என்னுடைய நாடக இயக்கத்தின் ஆரம்பத்தில்  எனக்கு வழிகாட்டிய அண்ணாவிமார்களை, ஆசிரியர்களை, என்னோடு  இணைந்து நடித்தவர்களை எல்லாம் நான் நினைவுகூருகின்றேன்.

கனடாவிலே எனக்கு இந்த விருது வழங்குவதுபற்றி அறிவித்த  அன்று, அந்த அறிவித்தலுக்குச் சற்று முன்னர்தான் எங்கள்  ஊர்ப்பகுதியில் விமானம் குண்டுகள் பொழிந்து, வீடுகள்  நாசமாக்கப்பட்ட செய்தியும் கிடைத்திருந்தது. அதைக்  கேட்டுக்கொண்டிருக்கிறபொழுது, இந்தச் செய்தியும் வந்ததில்,  உடனடியாக கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி எனக்கு இருக்கவில்லை. ஓர்  அதிர்ச்சியோடு இருந்த எனக்கு, ஏதோ ஒரு செய்திபோல்தான்  இவ்விருதுச் செய்தி பட்டது. யாருக்கோ கூறப்படும் செய்தியாக அதை உள்வாங்கப் பலமணி நேரம் எனக்குப் பிடித்தது. நாடகத் தொடக்கம்  அதிர்வுகள்தான். அதுபோல், இந்தச் செய்திகூட எனக்கு அதிர்வுதான்.  அந்த அதிர்வும் ஒரு வழிகாட்டியாக, ஒரு ஈடுபாட்டை எனக்குத்  தருவதாக சொல்லலாம்.



மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 09 Jun 2023 05:53
TamilNet
HASH(0x55e60a1edaf0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 09 Jun 2023 05:53


புதினம்
Fri, 09 Jun 2023 05:53
















     இதுவரை:  23718533 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4943 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com