Wednesday, 28 February 2007
01. பிள்ளைவரம் வேண்டிசென்று காசி பெற்றதுண்டாம் அக்காலத்து வாசி வெள்ளையர்கள் ஆய்வுசெய்து வென்றெடுத்த முறையில்இன்று உள்ளதன்றோ கருத்தரிக்க ஊசி.
02. சோதிடமா மேதைஅவன் தில்லை சொல்லுகின்ற பலன்பிழைப்ப தில்லை மாதுகரு ஆண்மகவே! மனைமாறும் சனிபார்வை!! ஆதலால்பால் மாறக்கூடும் பிள்ளை.
03. முல்லைக்கொடி பரிதவிக்க கண்டு முடியரசன் தன்தேரைக் கொண்டு வல்லமன்னன் சிறுபொழுதில் வடிவாய்ஓர் பந்தலிட்டு நல்லாய்ப்படர விடலாமன்றோ?.. மண்டு.
04. துச்சாதனன் துகில்உரிந்த காலை துடித்துக்கொண்டு அளித்தான்பட்டுச் சேலை நிர்க்கதியாய் ஈழப்பெண்கள் நிற்கையில்நிர் வாணமதாய் பார்த்திருந்தான் கண்ணன்அந்த யூலை.
05. பொந்தினிலே ஈரல்என்று மந்தி பொய்கூறிப் பிழைத்தகதை முந்தி அந்தக்காலத் தந்திரங்கள் ஆகாஇந்த அணுயுகத்தில இந்தக்காலம் இணையதளப் புத்தி.
06. கல்லுப்போட்டு பானையினுள் காகம் தீர்த்ததுபார் அக்காலத்தில் தாகம் வல்லகாக்கை இக்காலத்தில் வாயால்பைப்பை திறந்துநீரை நல்லாய்உண்டு பாடுமொரு கீதம்.
07. கல்லுப்போன்று கடிக்கஒண்ணா இட்டலி கசாயம்போல அதற்குவைத்த சட்டினி "சொல்லிஊற வைத்துஉண்டான் சோக்காய் இருக்கு"என்று நல்லஉபாதை நாலுநாளாய் பட்டினி.
08. சொந்தஊரில் அவ்வைமங்கை ஆனாள் சொல்லொணாத துன்பப்பட்டுப் போனாள் அந்தக்கால ஆண்புலவர் அங்கசேட்டை தாங்கொணாது நொந்துஇறையை வேண்டிப்பாட்டி ஆனாள்.
09. பிரேதறூமில் போட்டபிணம் ஒன்று பிழைத்தெழுந்து மரணத்தை வென்று சுரேஷ்டொக்டர் கண்டுகொண்டு 'சொறி'சொல்லி முடித்தார் நச்சு மருந்தூசி போட்டிமீளக் கொன்று.
10. குயிலோகாக்கை கூட்டில்முட்டை இட்டு கூவும்வரை காகம்அல்லல் பட்டு... குயில்கள்கூடு கட்டுதற்கோ காகம்முட்டை உணருதற்கோ சனியார்வரம் ஈந்தால்தீரும் இக்-கட்டு.
இன்னும்வரும்..
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
|