அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow பொங்கலோ..ஓ.. பொங்கல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பொங்கலோ..ஓ.. பொங்கல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.கந்தையா  
Saturday, 03 February 2007

கலைமிளிரும் ஐரோப்பியநகரில் தமிழர்களின் தனித்துவம்  வெளிப்பட்ட 'தமிழர் திருநாள் 2007 - பிரான்சு'.

பொங்குதல்

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் வந்த பல மடல்களில் கொஞ்சம்  வேறுபட்டதாக இருந்தது இந்த அழைப்பிதழ்.
"பாரெங்கும் பரவி வாழும் தமிழர்கள், தமிழால் ஒன்றிணைந்து கூடி  மகிழ்வுறும் இனிய நாள் - பொங்கல் நாள். இந்நாள் 'தமிழர்  திருநாளாக' உலகெங்கிலும் அடையாளப்படுத்தப்படுகிறது. பல்வேறு தேச, பிரதேச, மத மற்றும் வேறுபாடுகளுடன் வாழும் தமிழர்கள்,  தமிழால் ஒன்றுகூடி மகிழ்வுறும் இந்நாள் நம்வாழ்வில்  நன்னாளாகும்"
என்ற வாக்கிய முன்மொழிவோடு தனிக்கவனங்கொண்டு  அழகாக  அச்சிடப்பட்ட இந்த அழைப்பிதழ் கொஞ்சம் வித்தியாசமாகத்தான்  இருந்தது.

14.01.2007 அன்று காலையில் எழுந்தபோது வானம் தெளிவாக  சூரியனின் பிரகாசத்துடன் வெளிப்பட்டது குதூகல  மனக்கிளர்ச்சியைக் கொடுத்தது.  அப்பா இன்று வேட்டி  உடுத்தப்போகிறார் என்ற உந்துதலாகவோ அல்லது அவனது  நண்பனின் தம்பி இன்று அகரம் எழுத உள்ளான் என்ற  ஆர்வத்தாலோ ‘அம்மா எனக்கும் வேட்டி வேண்டும்’ எனக் கேட்ட  இளைய மகனின் கோரிக்கையால் என் துணைவி  அசந்துபோய்விட்டார். இன்றைய நாளை முழுமையாக சார்சல்  நகரிலேயே கழிப்பது என்ற ஏற்கனவே  தீர்மானித்திருந்ததற்கமைவாக தகுந்த ஏற்பாடுகளுடன் குடும்பமாக  நிகழ்வைக்காண பயணத்தை ஆரம்பிக்கிறோம். வழக்கமாக  நம்மவர்களின் குடும்பக் கொண்டாட்டங்களுக்கு அழைத்தால்  திமிறும் இளையமகன் இன்று உற்சாகமாக வரக்கிளம்பியது சற்று  ஆச்சரியமாகவே இருந்தது.

சார்சல் நகரின் ஒதுக்குப்புறமாக அமைந்த L'Espace Champ de Foire என்ற மண்டபத்தை இனங்கண்டு வருவதில் கொஞ்சம் சிரமப்பட  வேண்டியதாயிற்று. வாசலில் காணப்பட்ட தோரணங்களும் நிகழ்வுப் பதாகையும், நம்மூரில் அமைக்கப்படும் கீற்றுக் கொட்டகைகளை  ஞாபகப்படுத்தும் வெண்மையான துணிக்கூடாரமாக அமைந்த  கொட்டகையும் அசத்தலாகவே இருந்தது. 

வரவேற்பு பந்தல்

அழகான நல்வரவு வளைவு வரவேற்கிறது. பக்கத்தில் தனியாக  ஒதுக்கப்பட்ட சிறிய திடல் சுத்தம் செய்யப்பட்டு கோலமிப்பட்டு  தோரணங்களுடன் கரும்புக்கம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டு  பொங்கலிடப்படுவதான இடம் இதுதானென பறைசாற்றிக்  கொண்டிருந்தது. இந்த சிறப்பு பந்தலில் இரண்டு பானைகளுடன்  ஒரு உறியும் தொங்கவிடப்படடிருந்தது. இந்தச் சின்னத்திடலின்;  முன் தனது சட்டிமுகத்துடன் சறக்கட்டுன் காட்சிதந்து  கொடிருந்தார் நம்மூர் கத்தரி வெருளியார். ஒரு ஓரமாகப்  பொங்கலிடுவதற்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏர்,  மண்வெட்டி என்பன வைக்கப்பட்டிருந்தன. அங்கும் இங்குமாக சிலர் பரபரத்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் நிதானம் எல்லோரிடமும்  காணப்பட்டது. சிறார்கள் புதியதாக இருந்த இச்சூழலை ஆவலுடன்  உற்றுப்பார்தனர். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை, பிரான்சில்  பொதுப் பார்வை அரங்காக பொங்கலிடல் நிகழ்வு நடைபெறுவது  இதுதான் முதற்தடவை.

வணக்கம் தெரிவித்தவாறு உள்ளே நுழைகிறோம். குத்து  விளக்குகளை எல்லைக் கம்புகளாக நட்டு சின்னதாக வேலி  அமைத்து தனியாக ஒரு அரங்கு முதலில் காணப்பட்டது.  ஒலி-ஒளி, மற்றும் படப்பிப்பாளர்கள் தமது பணிகளைச் செய்யத்  தயாராகிக் கொண்டிருந்தனர். மிகச் சாதாரணமாகக் கதிரைகள்  அடுக்கப்பட்டிருந்தன. எதிலும் எளிமை காணப்பட்டது. பெரிய  அகலமான மேடை அதில் ஒப்பனை மேற்கொண்டவாறு பலர்  பரபரத்துக் கொண்டிருந்தனர். மேடையின் பிரதான பதாகையைப்  பொருத்தும் பணி மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. மேடையை  மறைக்கும் திரை இல்லாததால் எல்லாவற்றையும் காணமுடிந்தது.  குடும்பம் குடும்பமாக வரும் அழைப்பாளர்கள் தமக்குத் தோதான  இருக்கைகளில் அமர்கின்றனர். திரும்பி ஒரு முறை சழன்று  பார்க்கும்போது சிற்றுண்டிச்சாலையைக் காணாதது  ஆச்சரிமூட்டியது. ஆனால் நீண்ட மேசையில் சிறுபெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
நேரம் நெருங்கும்போது மேடையின் பக்கம் மையம் கொள்ள  வைத்தது அந்தப் பிரமாண்டமான பிரதான பதாகை. அப்படியே  பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது அதன் கம்பீர அழகு. 

மேடை

அழகான பொங்கல் பானையுடன் ‘தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒரு  நாள். இது தமிழால் அடையாளம்கொள்ளும் தனித்துவ நாள்’ என்ற  விருதுவாக்கிய முன்மொழிவுடன் வரையப்பட்ட அழகில்  அனைவரும் சொக்கிப்போனோம். இடது கோடியில் வள்ளுவர்  அமர்ந்திருக்க வலது கோடியில் வண்டிச் சக்கரங்கள்  வைக்கப்பட்டிருந்தன.  வழமைகளுக்கு மாறாக இந்நிகழ்வினை  கூட்டாக ஏற்பாடு செய்திருந்த பிரான்சு தமிழ்ச்சங்கங்களின்  கூட்டமைப்பு, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், சிலம்பு அமைப்பு ஆகியவற்றின் சின்னங்கள் மேடையைத் தாங்கும் சில்லுகளாக  அமைதியாக மேடையின் கீழ் முகப்பில் காணப்பட்டது மிகுந்த  அர்த்தங்களைக் கொடுப்பனவாக இருந்தன. தமிழின் நீண்ட  வரலாற்றில் எந்தச் சாயமிடலுக்குள்ளும் மூழ்காமல்  தனித்துவமாகத் நிமிர்ந்திருக்கும் தமிழின் அடையாள நாளான  ‘தமிழர் திருநாள்’ தனக்கான மிடுக்கோடு அரங்கத்தில்  அழகுபடுத்தப்பட்டிருந்தது. கூடார அரங்கத்தின் மேடை இருந்த  பக்கம் தவிர்த்து உட்சுவர்களில் பல்வேறு இயற்கைக்  காட்சிகளாலான படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. முதற்பார்வை  எதிலும் முக்கியமானது என்பதற்கமைவாக இன்றைய நாள் புதிய  அரங்கநிகழ்வைத் தரப்போகின்றன என்னும் நம்பிக்கையை  வெகுவாக ஏற்படுத்திவிட்டது.

புகலிட வாழ்வின் நீட்சியில் பேரர்களைக் கண்ட  முதற்தலைமுறையும், குடியேறிய நாடுகளிலேயே குடும்பமாகி  வாழ்வில் ஐக்கியமாகிய அடுத்த தலைமுறையும், இவர்களின்  முகங்களைப் பார்த்தவாறு தவழத் தொடங்கும் மூன்றாம்  தலைமுறையுமாக ஈழத்தமிழர்கள் ஒரு புறமும், இதையும்  கடந்தவர்களாக பாண்டிச்சேரி வழி கொண்ட தமிழர்களும்,  காலனியக் கால இடப் பெயர்வுகளால் கண்டங்கள் மாறி தேசங்கள் மாறி மூலம் தேடும் மொரிசியஸ், ரீயூனியன், குவாதுலுப்  வழிவந்தவர்களும், மனித நேயப்பற்றால் தார்மீக  ஈடுபாட்டைக்காட்டும் பிரான்ஸ் தேசத்தவர்களுமாக அரங்கில்  மக்கள் மெல்லக் குழுமினர்.

எந்தப் பாடல்களும் இல்லாதிருந்த அரங்கத்தில் நிகழ்வு தொடங்கும் அறிவிப்பு வெளிப்பட்டது.

அகவணக்கம்

மங்கல விளக்கேற்றுவோர் மேடைக்கு  அழைக்கப்பட்டனர். திரு- திருமதி பாலசுந்தரம் (.த.ச.கூ), திரு அலன் ஆனந்தன்(உ.த.ப), திரு- திருமதி பரலோகநாதன் (சிலம்பு அமைப்பு), நகர சபைத்தலைவர் (லூபூஜே), திருமதி சாந்தல் தெலமூர்,  திரு  மார்க் ரங்கன் (பிரதிநிதி றியூனியன்), திருமதி பஸ்கால்  முருகையன் ஆகியோர் மங்கல விளக்கேற்றினர். இவர்கள்  மேடையில் அமைதியாக நிற்க அகவணக்கம் செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வின் தொடக்க உரையை நிகழ்த்தினார் ஏற்பாட்டாளர்களில்  ஒருவரான கிபி அரவிந்தன். தொடர்ந்து வரவேற்புரையை  வழங்கினார் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு அலன் ஆனந்தன்.  இவ்வேளையில் இந்நிகழ்வுக்காக பாரீஸ் வந்திருந்த மூத்த  தமிழ்ப்பற்றாளர் மணவை முஸ்தபா அவர்கள் திடீர் சுகவீனமுற்று  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்  வெளிப்பட்டபோது அரங்கம் வேதனை அலைகளால் உறைந்தது.

இருகரம்கூப்பி வருகைதருவோரை இன்முகத்துடன் அழகாக  வரவேற்றார்கள் வில்தானூஸ் தமிழ்ச்சங்க இளஞ்சிட்டுகள்.

முதல் அமர்வில் மூன்று நிகழ்வுகள் ஒருங்கே தொடக்கப்பட்டன.
1. வெளியரங்கில் பொங்கலிடல்
2. அரங்க நுழைவாயிலுக்கு அண்மித்தாக  உள்ளே ஒதுக்கப்பட்ட  இடத்தில் கோலமிடல்                           3. மேடையில் அகரம் எழுதல்.
ஒரேவேளையில் மூன்று நிகழ்வுகளும் ஆரம்பமாக விறுவிறுப்பான  தொடக்கத்தைக் கொடுத்தது. சிறார்கள் மகிழ்வுடன் அங்குமிங்குமாக ஓடி ஓடிப் பார்க்க விளைந்தனர்.

பொங்கல் நிகழ்வு வெளித் திடலில் திரு டொமினிக் அவர்கள்  தலைமையில் ஆரம்பமாகியது. வில்லியே லூ பெல் தமிழ்ச்  சங்கத்தினர் இதனை நேர்த்தியாக நடத்தினர். நம்மூர் திருவலையில் கீழே உட்காந்தவாறு தேங்காய் துருவுகிறார் ஒரு பெண்.  பொங்கலுக்கான அரிசியைத் துப்பரவு செய்து புடைத்து எடுக்கிறார்  இன்னொருவர். துருவிய தேயங்காய்ப்பூவிலிருந்து பாலெடுத்தலென  பெண்கள் ஆய்த்தங்களில் ஈடுபடுகின்றனர். அடுப்பில் பவ்வியமாக  அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானையை வைத்து தீ மூட்லில்  ஈடுபடுகின்றனர் ஆண்கள். தமிழர்களின் தொன்மையான  வாத்தியங்கள் சங்கு, சேமக்கலம், மணி போன்றவை ஓசை  எழுப்புகின்றன. இதுவரை இப்படியான ஒரு காட்சியைக் காணாத  புலம்பெயர் சூழலில் வாழும் நம் புதிய தலைமுறையினர்  ஆவலுடன் பார்க்க, நீண்ட புலம்பெயர்வாழ்வில் காணாது  விடுபட்டிருந்த ஊர் கூடிப்பொங்கலிடும் நிகழ்வைக் கண்ட  பரவசத்தால் ஆனந்தக் கண்ணீருடன் திக்குமுக்காடினர் மூத்த  முதற்தலைமுறையினர். பொங்கல் பானை சூடேறத் தாமதித்தபோது தன்னார்வத்துடன் முன்வந்து செயற்பட்ட ஆண்களால் தீ  பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. பொங்கும் வேளை வெளி அரங்கு  பரசவத்தால் கிறங்கிப்போனது. சங்கு, சேமக்கலம், மணி போன்ற  வாத்தியங்களை முதன்முறையாகக் காணுற்ற புதிய  தலைமுறையினரும் தன்னார்வத்துடன் வாங்கி வாசிக்க  எத்தனித்தனர். சில சிறார்கள் மத்தாப்பு கொழுத்தி மகிழ்வுற்றனர்.  கண்கலங்கிய பெரியவர் ஒருவர் சால்வையை தோழில் தூக்கிப்  போட்டவாறு ‘நான் தமிழன்’ என்று சொல்லியவாறு நிமிர்ந்து  சென்றதைப் பார்த்தபோது நெகிழ்ந்து போனேன். மறந்தும்  மதச்சாயமிடாதவகையில் இந்நிகழ்வை பொறுப்புணர்வுடன்  அழகாகச் நிகழ்த்திய வில்லியே லூ பெல்; தமிழ்ச் சங்கத்தினர்  பாராட்டுதலுக்குரியவர்கள்.

கோலம்

இதேவேளை, அரங்க நுழைவாயிருக்கண்மையில் வெள்ளைக்காரப்  பெண்மணி திருமதி சாந்தல் கருமமே கண்ணாக அழகான  கோலங்களை வரைந்து கொண்டிருந்தார். அவர் கோலமிடும்போது  அவரது கையின் அசைவு மாத்தூள் ஓவியரின் அசைவாகி  பிரகாசித்தன. சூரியத் தேர் நேர்த்தியாக அமைந்தது. பொங்கல்  கோலம் குத்துவிளக்காகவும் பொங்கற் பானையாகவும் அமைந்து  இந்நிகழ்வுக்குப் பொருத்தப்பாடாக அமைந்திருந்தது. இவர்  பிரான்சில் கோலமிடுதலையே வாழ்வாதாரப் பணியாக்  கொண்டுள்ளார் என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. நம் பாரம்பரியக் கலையை செம்மையாகக் கற்று வெளிப்படுத்தும்  இவரை இந்நிகழ்வில் பங்கேற்ற வைத்த ஏற்பாட்டாளர்களின்  கவனமெடுப்பு மகிழ்வைக் கொடுத்தது.

அகரம் எழுதல்

மேடையில் ‘அகரமெழுதல்’ என்ற புதிய அரங்க நிகழ்வு  இதேவேளையில் உணர்வுபூர்வமாக நடந்து கொண்டிருந்தது.  புன்முறுவலுடன் மேடையின் இடது கோடியில் அமர்ந்திருந்த  வள்ளுவருக்கு முன் வெண்மையான துண்டு விரிக்கப்பட்டு அதில்  அமர்ந்திருந்தவாறு மொழியியல் ஆராச்சியாளரும் தமிழ்ப்  பேராசிரியருமான திரு à®…. முருகையன் அவர்களால் எமது புதிய  தலைமுறையினருக்கு அகரம் எழுதல் நிகழ்வு நடாத்தப்பட்டது.  பழைமையும் புதுமையுமாக இந்நிகழ்வு அமைந்தது. வெள்ளித்  தட்டில் பரப்பப்பட்ட அரிசிலும், இதற்கென தயாரிக்கப்பட்ட  தாளிலும் சிறார்கள் எழுதினார்கள். மிக அருமையாக நிகழ்ந்த புதிய நிகழ்வுகளில் இது ஒன்று என்பதை உறுதியாகச் சொல்லலாம். 

அகரம் மதிப்பளித்தல்

இதில் இளம் சிறார்கள் எழுதிய எழுத்துகளுடன் அவர்கள் எழுதும்  படத்தையும் பதிவாக்கி சட்டகத்திலிட்டு உடனனேயே அதே  அரங்கில் பிரான்சு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப்  பணிபுரியும் திருமதி எலிசபெத் உதயணன் கைகளால் பரிசாக  வழங்கியமை அநேகரது பாராட்டுதலைப் பெற்றது. திருவள்ளுவர்  முன்னிலையில் பெற்றோர், சிறார், அகரம் தொடக்குநர்  அமர்ந்திருந்து மிகுந்த அக்கறையோடு நிகழ்த்தப்பட்ட காட்சியை  தூரத்திலிருந்து பார்த்த போது மெய்சிலிர்த்தது. மதச்சாயங்களல்லாத தமிழர் திருநாளில், தமிழ்ப்பேசும் மக்களுக்குப் பொதுவான  திருவள்ளுவர் முன்னிலையில் மிகுந்த பொருத்தப்பாடோடு நிகழ்ந்த இந்த புதியநிகழ்வு வரலாற்றுப் பதிவாகியதில் வியப்பேதுமில்லை.

அகரம் எழுதல் நிகழ்வில் பங்கேற்ற சிறார்கள்

 à®¤à®¾à®¯à¯                    தந்தை             குழந்தை
01 à®ªà¯à®¸à¯à®ªà®°à®¾à®£à®¿     இராஜலிங்கம்    புஸ்பனிதா
02 à®°à®œà®¿à®¤à®¾             சுதர்சன்               கவிநயா
03 à®šà¯à®•à®¿à®°à¯à®¤à®¾           à®šà®¨à¯à®¤à®¿à®°à®ªà®¾à®²à®©à¯       கதிர்
04 à®²à®•à¯à®šà¯à®®à®¿à®ªà®µà®¾à®©à®¿ à®…ன்ரன்பாலேந்திரா à®•à®ªà®¿à®²à®©à¯
05 à®šà¯à®°à¯‡à®•à®¾        பரலோகநாதன்      மதன்
06 à®šà¯à®°à¯‡à®•à®¾       பரலோகநாதன்      மிதுரா
07 à®šà¯à®°à¯‡à®•à®¾        à®ªà®°à®²à¯‹à®•à®¨à®¾à®¤à®©à¯    ஐந்தா
08 à®µà®¾à®šà¯à®•à®¿       நல்லையா         அவந்தியா
09 à®¤à®©à¯à®œà®¾       மகேந்திரராசா    தூயவன்
10 à®‡à®¨à¯à®¤à®¿à®°à®µà®¤à®¿  à®®à®•à¯‡à®¸à¯à®µà®°à®©à¯      இனியவன்
11 à®‡à®°à®¾à®šà®°à®¾à®£à®¿  à®Ÿà®•à¯à®³à®¸à¯             மொறிலின்
12 à®šà®¾à®¨à¯à®¤à®•à¯à®®à®¾à®°à®¿  கிருஷ்ணகுமார்   சாரங்கி

வெளியில் போய் பொங்கலிடல் எப்படி நடக்கிறது? என்று பார்க்க  மனம் பதைபதைத்தது ஆனால் எழும்பிய பின் இருக்க இடம்  கிடைக்காதென துணைவி கூற பொறுமைகாக்க வேண்டியதாயிற்று. பிள்ளைகள் வெளியில்தான் இருந்தார்கள்.

மேடையில் பல ஒலிவாங்கிகளுடன் பல்வேறு வாத்தியக் கருவிகள் அடுக்கப்பட என்னதான் நடக்கப் போகிறதோ எனப் பார்வை அங்கே குவிந்தது. கணீர்க் குரலோன் எஸ் கே ராஜன் இசை அரங்கம்  நடைபெறப்போவதாக அறிவிக்கிறார். அலட்சியமாக  இருந்தோரையும் கவர்ந்து வயது வேறுபாடில்லாத வகையில்  அனைவராலும் ஈர்க்கபட்ட இசை முழக்கமாக அமைந்தது  இந்நிகழ்வு. பலரது கவனத்தை ஈர்த்த நிகழ்வாக அமைந்த ‘இசை  அரங்கம்’ புதுமையாக இருந்தது. வாத்தியக் கருவிகளினாலான  ஓசை இலயத்தால் சபை கட்டுண்டதைக் கண்டு  புளங்காகிதமடைந்தேன். அரங்கு நிறைந்த கரவொலிகொலியால்  மேல் கூடாரம் படபடத்தது.

இசை அரங்கம்

 à®ªà®²à¯à®¤à¯à®±à¯ˆà®•à¯ கலைஞன் பரா அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வு பல்வாத்தியக் கலைஞன் உமாபதி தலைமையில் நிகழ்த்தப்பட்டது. இதில் பங்கேற்றோர் சத்தியமூர்த்தி  : நாயனம், ஃபிரான்சுவா: சுரத்தட்டு, சாரங்கன்: கெஞ்சிரா, கண்ணன்:  தவில், சுதர்சன்: மிருதங்கம், பாஸ்கரன்: எலக்ட்ரிக் பேடு, அருண்:  எலக்ட்ரிக் பேடு, கனி: ஜம்பை, ராஜா: கிட்டார். பொங்கல் நடைபெறும் வேளையில் முழங்கிய இவ்விசை அமுதம் செவிவழிப் பொங்கலாக இனித்தது.

இடைவேளையில்லாது தொடர்ந்த நிகழ்வில் சொக்கிய  பார்வையாளர்கள் சிற்றுண்டி தேடிப் போகப்  பிரியப்படவில்லைபோலும். சிற்றுண்டிச் சாலையும் இருட்டில்  சலசலப்பில்லாது நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் வருகை  தந்திருந்த அனைவருக்கும் அழகாகப் பெட்டியில் இடப்பட்ட  பொங்கல் வழங்கப்பட்டமை இன்றைய சிறப்பம்சமாகும். வயது  வேறுபாடில்லாது எல்லோரும் விரும்பி இப்பொங்கலைப்  பெற்றதைக் காணமுடிந்தது.

பாரம்பரிய நடனங்களாக மூன்று இடம்பெற்றன.

உழவுப்பாடல்

 
1. உழவுப்பாடல்- தயாரிப்பு: சிலம்பொலி கலையகம்
நெறியாள்கை: திருமதி சேஷா கற்பகம்,
பாடல் வழிமூலம்: கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி பாலசுகுமார்
இசை: யூட் - இலண்டன். பங்கேற்றவர் சேஷா கரோல், ப்யுஷி  நதாஷா, க்ருஷ்ணகுமார் லீலா, சேஷா கவின், தவீது பிரியா,  வேன்ஸன் ஆனந்தராஜ் விமலா, பெரன் லெத்திசியா.

வரவேற்பு நடனம்


2. வரவேற்பு நடனம் ‘தமிழே உயிரே வணக்கம்’
நடன ஆசிரியை தனுசா மதி,
பங்கேற்பு ஓல்னே சூபுவா- செவ்றோன் தமிழ்ச்சோலை மாணவர்கள்  நியோனி தயாநிதி, நிசாந்தினி பாலேந்திரராஐன்,  à®šà®®à®¨à¯à®¤à®¾  மகேந்திரராஐh, சபிதாஈ அம்சலா இராசலிங்கம், டுசிகலா  இராசலிங்கம், லாவண்யா விஸ்வநாதன், . à®šà¯à®°à¯‡à®©à®¾ குணராஐh,  அபிநயா நல்லையா, குருசல்யா செல்வராஐh.

அம்பா பாடல்

 
3. அம்பாப் பாடல் வழங்கியவர்கள் டேமியன் சூரி மற்றும் குழு  (திருமலைக் கலா மன்றம்)
இவை மூன்றும் வெவ்வேறு தளத்திலிருந்து தமக்கேயுரித்தான  தனித்துவமான முத்திரையைப் பதித்தன. தவிர இவ்றி சூ செயின்  தமிழ்ச் சங்கம் சார்பாக இளம் சிறார்களால் காவடி ஆட்டமும்  நிகழ்த்தபபட்டது.

சிறப்புரை வழங்கவும் அகரம் எழுதவும் பாரீசுக்கு வருகை தந்த  மூத்த தமிழறிஞர் மணவை முஸ்தபா திடீரென சுகவீனமுற்று  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தமிழ் நெஞ்சங்களுக்கு  மிகுந்த வேதனையைக் கொடுத்தது. சொல்லும் செயலும் ஒன்றென வாழும் மணவை ஐயாவின்

 à®‰à®³à®ªà¯à®ªà¯‚ர்வமான வார்த்தைகளால்  வெளிவரவேண்டிய அருமையான சொற்பொழிவினை அரங்கம்  இழந்திருந்தமை வேதனையைத் தழுவியது. இதனால் மெல்லிய  கவலை அரங்கு முழுமையும்

 

 

வியாபித்திருந்தது. ஆனாலும ;  மணவை ஐயா குணமாகி தமிழுக்கான சேவையைத்  தொடரவேண்டுமென்பதே எல்லோரது விருப்பமாகவும் இருந்தது.  இவ்வெற்றிடத்தை நிரப்ப முடியாதபோதிலும் சிப்புரைகளை வழங்கி இந்நாளைச் சிறப்பித்தார்கள் செழுங்கலைப்புலவர் à®….குமரன்  அவர்கள் தமிழிலும், பேராசிரியர்

à®…. முருகையன் பிரஞ்சிலும்.  தவிரவும் சிற்றுரைகள் மூலம் கருத்துரைத்தார்கள் திருமதி சந்தால், வண. பிதா கில்லரி, சார்சல் நகர சபைத்தலைவர், லூபூஜே நகர  சபைத் தலைவர்.

 

   

 à®µà®¿à®²à¯à®²à®¿à®¯à¯‡ லூ பெல் தமிழ்ச் சோலை மாணவர்களால்  நிகழ்த்தப்பட்ட ‘சூரிய உதயம்” சிறுவர் நிகழ்கலை அரங்கு இந்தத்  தைப்பொங்கல் நிகழ்வு தொடர்பான கருத்தாடலை அழகாகக் காவிச் சென்றது. ஒலிவாங்கிகளையும் விஞ்சியதாக அமைந்தது  இந்நிகழ்வு. அதிக கவனமெடுப்படன் சிறார்களால் நிகழ்த்ப்பட்ட  இந்நிகழ்வு அவையைக் கவர்ந்தது. இதன் நெறியாழ்கை திரு  சர்வசீலன். பங்கேற்ற சிறார்கள் ஜெகானி ஜெயச்சந்திரன்(07வ),  யதுசா இராஜேந்திரம்;(05வ), சரண்யா சந்திரகுமார்;(09வ), ஆதுசன்  பாஸ்கரன்(12வ);, கௌசிகன் இரவிச்சந்திரன்;(12வ),  பிரவீனன்  இராஜலிங்கம்;(12வ), ஜெகானன் ஜெயச்சந்திரன்(12வ);, தேனீசன்  பாஸ்கரன்;(13வ), கௌதமி இரவிச்சந்திரன்;(07வ), ஜெகதா  ஜெயச்சந்திரன்;(10வ), பிரவீணா இரவிச்சந்திரன்;(11வ), ஆஸா  பாஸ்கரன்;(14வ),  கோசீலன் பாஸ்கரன்;(06வ), கௌசல்யா  இரவிச்சந்திரன்(09வ);, பிரதீப் இரவிச்சந்திரன்;(14வ) .

இந்நிகழ்வில் சீரான இடைவெளியில் திருக்குறள் கூறல் என்ற  வித்தியாசமான நிகழ்வு நடாத்தப்பட்டது. இதில் வயது, பால்,  தேசியம், மதம் எனக் கருதப்படும் எல்லைகள் கடந்தனவாக  வேறுபட்ட பிரசன்னம் காணப்பட்டதைப் பதியவேண்டும். 6 வயது  முதல் 75 குமரன்வயது வரையிலானவர்கள் இதில் கலந்து  கொண்டிருந்தார்கள்.

இதில் இஸ்லாமியப் பெண் ஒருவரும்,  குவாதுலூப்பைச் சேர்ந்த தமிழ் மறந்த மூனறாம் தலைமுறைத்  தமிழர் ஒருவரும், மொறீசியஸ் தமிழ்க் குடும்பமொன்றின்  மகளொருவரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தகுந்தது. இதில்  பங்கேற்றவர்கள் செல்வன் மதுசன் மகேந்திரராசா (வ.08), செல்வி  அக்சயா குமாரவேந்தன் (வ.06), செல்வி அதிசயா நல்லையா  (வ.06), செல்வி சிந்தி பாபு (வ.12), திருமதி அசினா முகமட்  இப்ராகிம் (வ.21), திருமதி திலகம் லியோ அன்ரன். (50),  திரு.கோபாலி (47), திரு.விவேகானந்தன்(வ.52), .செல்வன்  ஜோனாஸ் அன்ரன் (வ.16), திரு.ஏ.ரகுநாதன் (வ.71), திருமதி  கந்தசாமி(வ74). இக்குறள் கூறல் நிகழ்வில் மேலும் அதிக  கவனமெடுத்திருக்கலாம் என்றும் இவற்றின் கருத்துகளை பிரஞ்சு  மொழியில் தெரிவித்திருக்கலாம் என்றுமான ஆதங்கத்தைப் பலரும்  வெளிப்படுத்தினர்.

 

 

இந்நிகழ்வின் கடைசி முத்தாய்ப்பு நிகழ்வாக ‘சிலம்பாட்டம்’  நிகழ்த்தப்பட்டது.

சிலம்பாட்டம்

இந்நிகழ்வுக்காக சிறப்பாக அழைக்கப்பட்ட  சிலம்பாடக் கலைஞன் ஜோதி செந்தில் கண்ணன் அவையோரை  வசீகரித்தார். புலம்பெயர் தமிழர்களின் ஐரோப்பிய மேடை  நிகழ்வொன்றில் தமிழர்களின் பாரம்பரிய வீரக் கலையான  சிலம்பாடம் நிகழ்த்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.   உடலின் சகல அவயங்களை ஒருங்கிணைத்து கம்பு சுழல  வைக்கப்படும் காட்சியை காண மெய்சிலிர்த்தது. பறை ஒலி  முழங்க அந்தத் தாளக்கட்டுக்கமைவாக கம்பை இருகைகளாலும்  அநாயாசமாக சழற்றியபடி நின்று இருந்து படுத்து அசைந்து துள்ளி ஆடிய ஆட்டம் சபையோரின் பெருத்த கரவொலியைப்  பரிசாக்கியது. காணக் கண் கோடி வேண்டுமென்பார்கள்... இதனை  இன்றைய இக்காட்சியில் காணுற்று மெய் மறந்தேன். தமிழர்களின்  பாரம்பரியக் கலையான சிலம்பத்தை ஒலிம்பிக்கில் இணைக்கும்  பேரவாவுடன் செயற்படும் இளைஞனின் ஈடுபாடு பலரையும்  கவனம் கொள்ள வைத்தது. இவர் சென்ற 2004 - 2005 ஆண்டுகளில் பாரீஸ் பேர்சி அரங்கில் பிரஞ்சு அழைப்பாளர்களால்  வருவிக்கப்பட்டு பங்கேற்றவர் என்பதும் இப்பதிவு கனல் புளுஸ்  தொலைக்காட்சியில் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தகுந்தது.

க.முகுந்தன்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முகுந்தனின் இரத்தினச்  சுருக்கமான நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது. எல்லோரது  முகங்களிலும் திருப்தியுடனான மகிழ்வு காணப்பட்டது.

மண்டபத்தைச் சீர்செய்யும் பணி முடிய கொண்டுவந்த  பொருட்களைச் சரிபார்த்து உரியவர்களிடம் திரும்பச் சேர்க்கும்  மும்முரத்திலிருந்தார்கள் ஏற்பாட்டாளர்கள். எல்லோரும்  அமைதியாக் கலைய நாமும் வண்டியில் ஏறுகிறோம். என்னால்  எதுவுமே பேச முடியவில்லை. வழமைக்குமாறான எனது  மௌனத்தைக் கண்டு துணைவி சீண்டுகிறார். வேலைக் களைப்பில்  வண்டியை ஓட்டியவாறு நான் தூங்கி வழிகிறோனோ என்ற பயம்  அவருக்கு. ஆனால் நானோ,
‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!...’ என்ற பாரதிதாசனின்  கவிவரிகளுக்குள் மூழ்கியிருந்தேன்.

 

தூவானம்

- â€˜à®¨à®®à¯à®®à®¾à®•à¯à®•à®³à¯ கல்யாணம், கொண்டாட்டம் எனப்  போறதற்கு இப்படியான நிகழ்ச்சிகள் செய்யலாம்’ என்றான்  மகிவுடன் நிகழ்வைப் பார்த்த இருபது வயது வாலிபன்
- â€˜à®…ரங்கத்துக்குள் நுழைந்தபோது இருக்கைகள் கண்டு  துணுக்குற்றேன். நிகழ்வு அறிவித்ததும் மேடையில் ஸ்பொட் ஒளி  குறியிட அரங்கம் ஒளிக்கீலங்களால் வசீகரிக்கப்படுமென  நினைத்திருந்தேன். ஆனால்…. தனது பேராவின் கவலையைப்  பகிர்ந்தார் நடுத்தரக் குடும்பப் பெண்.
- â€˜à®‡à®©à¯à®±à¯ˆà®•à¯à®•à¯ சூரியனைப் பார்த்தீங்களா என்னமாய்  பொழியுது ஆகா எவ்வளவு சந்தோசமாயிருக்கு!’ என தனது  உற்சாகத்தைப் பகிர்ந்து சென்றார் வேட்டியுடன் நடமாடிய  குடும்பத்தர்.
- à®•à¯‹à®²à®¤à¯à®¤à®¾à®²à¯ கவரப்பட்ட எனது நண்பனின் நான்கு வயது  மகள் வீடு திரும்பியதும் தாயாரிடம் ‘அம்மா உங்களுக்கு கோலம்  போடத் தெரியுமா?’ எனக் கேட்டதாக நண்பன் மகிழ்வுடன்  சொன்னான்.
- à®¨à®¿à®•à®´à¯à®µà®¿à®©à¯ முடிவின் பின் மேடைக்கருகாமையில், ‘இவர்  தான் திருவள்ளுவர் இவர் தமிழர்க்கு பெரிய ஆள் திருக்குறள்  தந்தவர். இவருக்கு இன்று 2038 வயது.’ என தனது சிறு  நண்பனுக்கு விளக்கமளித்தான் எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன்.
- à®¨à®¿à®•à®´à¯à®µà¯ முடிந்ததும் எடுப்பம் என இருந்த கரும்புகளில்  ஒன்று கூடக் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்டார்  ஏற்பாட்டாளர்களில் ஒருவர்.
- â€˜à®•à®®à¯à®ªà¯ சுற்றல் அழகை இன்றுதான் பார்த்தன் ஆகா என்ன  கம்பீரம், தமிழனென நினைக்கப் பெருமையாக இருக்கு!’ என்றார்  புளங்காகிதமடைந்த குடும்பத் தலைவர் தன் மகனுடன்.
- â€˜à®¨à®¾à®©à¯ பரவலாகப் பல நிகழ்வுகளைப் பார்ப்பவன். ஆனால்  இன்றயை நிகழ்வு சொல்லி வைத்தாற்போல மையக்கருத்துடன்  பொதுமைப் பட்டதாக அழகாகக் கோர்க்கப்பட்டிருந்தன. எப்படி  ஒருங்கமைத்தீர்கள்?’ மனமாரப் பாராட்டினார் ஒளிப்பதிவாளரில்  ஒருவர்.
- â€˜à®…றிவிப்பில் தமிழ் à®‰à®°à®¤à¯à®¤à¯ நடந்தது ஆனால் பிரஞ்சு மென்நடை பயின்றது பொருத்தமாக  இருக்கவில்லை’ என்றார் பொதுமகன் ஒருவர்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(5 posts)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 20:09
TamilNet
HASH(0x555891d45038)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 20:09


புதினம்
Thu, 28 Mar 2024 20:09
















     இதுவரை:  24713790 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4092 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com