அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow திருகோணமலையில் அஞ்சலி நிகழ்வு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


திருகோணமலையில் அஞ்சலி நிகழ்வு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அப்பால்தமிழ் குழுமம்  
Tuesday, 31 October 2006
ஏ.ஜே கனகரத்தினாவை நினைவு கூரலும்
அவரது ஆளுமையை மதிப்பிடுதலும்
திருகோணமலையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு பற்றி...
இந்நிகழ்வு திருகோணமலையில் கடந்த 22.10.2006 அன்று சமூக  அபிவிருத்தி ஆய்வு நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் யதீந்திராவின் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் ஏ.ஜேயை நினைவு கூர்ந்து கவிஞர்  சு.வில்வரெத்தினம், எழுத்தாளர் நத்தினிசேவியர் ஆகியோர்  உரை நிகழ்த்தினர்
யதீந்திரா தனது தலைமை உரையில் ஏ.ஜேயைப் பற்றி  எனக்கு அதிகம் தெரியாது அவரை ஒரேயொரு தடைவை  நேரில் கண்டிருக்கின்றேன் மானுடத்தின் தமிழ் கூடலுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த போதே அவரை முதன்முதலாக  சந்தித்தித்தேன். அந்த சந்திப்பு கூட எதேச்சையான  ஒன்றுதான் அந்த நேரத்தில் எனக்கு பலரைத் தெரியாது  அந்நிகழ்வு ஒரு தொடர்ப்பிற்கான களமாகவும் இருந்தது.  நான், திருமாஸ்டர், நிலாந்தன், சு.வில்வரெத்தினம்,  கருணாகரன் மற்றும் இன்னும் சிலருடனும் இணைந்து  புகைப்படமொன்றை எடுக்க முயன்ற போது பெரிய  குடையொன்றுடன் குள்ளமான ஒருவர் இடையில் வந்து  நின்றார் கொஞ்சம் தண்ணியும் போட்டிருந்தார்.  அப்போதுதான் நிலாந்தன் இவர்தான் எ.ஜே என்றார். அதற்கு  முன்னர் ஏ.ஜே ஒரு சிறந்த ஆங்கிலப் புலமையாளர்  விமர்சகர் என்றெல்லாம் அறிந்திருக்கின்றேன். அவர் எழுதிய நூல்கள் சிலவற்றை படித்திருக்கின்றேன்
கவிஞர் சு.வில்வரெத்தினம் தனது உரையில், அவருடன்  தனக்கிருந்த நீண்ட நாள் உறவு மற்றும் நட்பு குறித்து பல  விடயங்களை பகிர்ந்து கொண்டார். தன்னை அதிகம்  வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாதவரான ஏ.ஜே  அவர்கள் தன்முனைப்பற்ற ஒரு சிந்தனையாளராவார். நமது  சூழலில் மிகச் சிறந்த ஆங்கில புலமையாளரான ஏஜே  கனகரத்தினா தமிழின் பக்கம் திரும்பியதற்கு காரணம் தனிச் சிங்களச் சட்டமாகும். இது அந்த காலத்தில் பலருக்கும்  நிகழ்ந்த ஒன்றுதான். அவரது ஒரு நூலை தனிச் சிங்களச்  சட்டத்திற்கு சமர்ப்பணம் செய்யக் கூடிய அளவிற்கு அது  அவரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது அதன்  பின்னரே அவர் தமிழ்த் தேசியம் குறித்து அக்கறை  கொள்கின்றார் ஆனால் அவர் எப்போதும் குறிப்பிட்ட அணி  சார்ந்து இயங்கிய ஒருவரல்ல. அவர் மார்க்சியம் குறித்து  அதிகம் எழுதியிருந்தாலும் எந்தவொரு மார்க்சிய அமைப்பு  சார்ந்தும் தொழிற்பட்டவரல்ல. எல்லா தரப்பினருடனும்  நட்பை பேணி வந்தார். அவருக்கு நாம் செலுத்தக் கூடிய   உண்மையான அஞ்சலி என்னவென்றால், மறைந்து கிடக்கும் அவரது பல எழுத்துக்களை வெளிக் கொணர்வதுதான். ஏ.ஜே பற்றி நுஃமான் குறிப்பிடும் போது அவரது எல்லா  எழுத்துக்களையும் திரட்டினால் கிட்டத்தட்ட ஆயிரம்  பக்கங்கள் தேறும் என்கின்றார். அது முழுவதும்  வெளிவருமானால் அதுவே அவர் நமது சூழலுக்கு ஆற்றிய  பெரிய பங்களிப்பாகும். அவரது எழுத்துக்கள் அடங்கிய  தொகுப்பொன்றை நான் விடியல் பதிப்பகத்தினூடாக  கொண்டு வர எத்தனித்த போது வேறு ஒரு பதிப்பத்தினர்  அதனை தாம் வெளியிடுவதாக கூறி வாங்கிச் சென்றார்கள்  அது அங்கு முடங்கிக் கிடக்கின்றது அதனை விரைந்து  வெளிக் கொணர வேண்டும்.
நந்தினி சேவியர் ஏ.ஜே பற்றி குறிப்பிடும் போது தனக்கு  தெரிந்த ஏ.ஜே பற்றிய பல நினைவுகளை பகிர்ந்து  கொண்டார். அவர் சரஸ்வதியில் அதிகம் எழுதினார்  அக்காலத்தில் பலரும் மௌனி குறித்து சிலாகித்துக்  கொண்டிருந்த போது ஏ.ஜே.மௌனி வழிபாடு குறித்து ஒரு  கட்டுரையை எழுதினார் அது மிகவும் சிறியதொரு கட்டுரை  இதனை இன்று பலரும் மறந்திருக்கக் கூடும். உண்மையில்  ஏ.ஜே அவர்கள் சு.வி.குறிப்பிட்டது போன்று தன்னைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத ஒருவராகத்தான் இறுதி வரை இருந்தார். என்னைப் பொறுத்தவரையில் அவருக்கிருந்த  பரந்த அறிவுக்கு ஏற்ப அவர் ஆற்றிய பங்களிப்பு போதாது  என்றுதான் நான் சொல்வேன.; அவர் இறுதியாக  ரெஜிசிறிவர்தானாவின் எழுத்துக்கள் அடங்கிய  தொகுப்பொன்றை எடிட் செய்திருந்தார் அதுதான் அவரது  இறுதிப் பங்களிப்பு. கனடாவிலிருந்து வெளிவரும் காலம்  அவர் குறித்து சிறப்பிதழ் ஒன்றையும் முன்னர்  வெளியிட்டிருந்தது.
இறுதியில் ஏ.ஜேயின் ஆழுமை குறித்தும் அவரது  எழுத்துக்கள் குறித்த கலந்துரையாடலுடன் அவருக்கான  மௌன அஞ்சலியுடன் நிகழ்வு முற்றுப் பெற்றது.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 20:09
TamilNet
HASH(0x555891d45038)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 20:09


புதினம்
Thu, 28 Mar 2024 20:09
















     இதுவரை:  24713913 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4187 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com