எழுதியவர்: வேபம்படிச்சித்தன்
|
|
|
Thursday, 05 October 2006
காலத்துள் வாழ்க்கை பயணிப்பது போல் பயணிக்கிறது புகையிரதம்.
யன்னலினூடு ஏதோவோரு கோடைகாலக் காட்சிகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.
யன்னலினூடு வந்துகொண்டேயிருக்கும் வருவது யன்னலினூடு போவதாகித் தொலைய தொடர்ந்தும் வருவது வந்துகொண்டேயிருக்கிறது.
போனது என் யன்னலுக்கு வெளியில் மட்டுமே போய்முடிந்தது. அது வேறு யன்னல்களுக்கு இப்போதும் வந்துகொண்டும் போய்கொண்டுமேயிருக்கிறது.
என் யன்னலுக்கு வந்துபோனது யாரேனினதும் யன்னலுக்கு இன்னமும் வந்து கொண்டிருப்பதுபோல்
என் யன்னலுக்கு வந்து கொண்டேயிருப்பதும் யாரேனினதும் யன்னலுக்கு ஏற்கெனவே வந்துபோனதுதான்.
புகையிரதத்தை விட்டு நீங்கிப் போதலில் இருக்கிறது யன்னலின் இன்மை.
|