அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 04 May 2024

arrowமுகப்பு arrow சமூகம் arrow உள்ளொளி arrow தரக்குறைவு ஏற்படுதல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தரக்குறைவு ஏற்படுதல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கந்தையா நவரேந்திரன்  
Tuesday, 09 May 2006

எமது உடலும் மனமும் எதற்காகப் படிப்டிபடியாகத் தரங்குறைந்து  போகின்றன? வயதுடனும் காலத்துடனும் உடல் தான் படிப்படியாக  நலிவுறுகிறதென்றால், மனம் எதற்காக நலிவுறுகின்றது? வாழ்வின் முடிவில்  உடலும் மனமும் மரணிக்கின்றன. ஆனால் உடல் உயிருடன் இருக்கும்போது கூட மனத்தின் இறப்பு நிகழ்வது ஏன்? மூளையினதும் உடலினதும்  கலங்களின் சொந்த ஊன்ம ஆக்கச் சிதைவு மாறுபாட்டின் விளைவுகளை  முழுதாகவே அகற்றுவதற்கான செயல்முறை மூளையின் கலன்களுக்கும்  உடலின் கலன்களுக்கும் இல்லாததனால் தான் அவை படிப்படியாகத்  தரங்குறைந்து போகின்றன. அவற்றிற்குத் தம்மைத்தானே கழுவுவதற்கான  நல்வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அவை என்றும் உயிருடனிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்லாம்.
ஒரு குறிப்பிட்ட காலவட்டத்திற்குள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்  மூளை, எதற்காகப் படிப்படியாகத் தரங்குறைந்து போகின்றது? உயிர் நூல்  அறிஞர்களின் ஆய்வுப்படி மூளைக்குப்போதிய சுத்திகரிக்கும்  ஆற்றலளிக்கப்பட்டிருந்தால் அது என்றென்றும் இயங்கிக்கொண்டிருக்குமாம்.  அப்படியானால் அந்த சுத்திகரிக்கும் ஆக்கக் கூறுதான் எது?
எதற்காக மூளையால் தனது மதிக்கூர்மையை - தெளிவை - ஆழமான  சக்தியை - தனித்திறனை - தனியியல்பைத் தக்கவைத்திருக்க  முடியாமற்போகின்றது? ஏற்கனவே மூளை ஒரு வரிப்பள்ளத்திற்குள் -  வரித்தடத்திற்குள் - செல் தடப்பள்ளத்திற்குள் - தடம்பட்ட வழிக்குள் -  புரிக்குள் - பழக்கப்பட்ட நாள்முறை நடப்புக்குள் இருப்பதனால் அது தனது  ஆற்றலைப் படிப்படியாக இழக்கின்றது. சிலர் தமது இளம் பிராயத்திலேயே  தமது மூளையின் செயல் வேகத்தை இழந்து விடுகின்றனர். சிறு  பிராயத்திலேயே அவர்களது மூளை புரிக்குள் அகப்பட்டு விடுவதனாலேயே  அவர்களது மூளையின் தரம் படிப்படியாகக் குறைந்து போய்விடுகின்றது.  மூளையிலுள்ள மன நிறைவு, திருப்தி ஆகியன பற்றிய சில முடிவுகளுக்கு  ஏற்றபடி செய்யப்படும் தெரிவும், விருப்பமும், தன்னடக்க ஆற்றலும்,  தீர்மானமும் அவர்களைக் கூறுகளுக்குள் வாழவைக்கின்றன. இதும்  படிப்படியாகத் தரகக்குறைவு ஏற்படுவதற்கான அம்சமாகின்றது. நான் ஒரு  விஞ்ஞானியாக அல்லது வழக்கறிஞனாக அல்லது பொருளாதார நிபுணனாக  அல்லது தத்துவ ஞானியாக ஆவதற்கு விரும்புகின்றேன் என்றால், எனக்கு  விருப்பமானத் துறையைத் தெரிவு செய்கின்றேன். சூழ்நிலையின்  செல்வாக்கோ, குடும்பச்செல்வாக்கோ, ஒரு குறிப்பிட்ட துறையில் வெற்றிபெற வெண்டும் என்ற எனது சொந்த விருப்பமோ என்னை ஒரு துறையைத்  தெரிவு செய்யத் தூண்டுகின்றது. ஒரு குறிப்பிட்டத் தொழிலுக்கான தெரிவும்
அந்தத் தெரிவு பற்றிய தீர்மானமும், அந்தத் தெரிவை எட்டுவதற்கான எனது  செயற்பாடும் எனது மூளையின் படிப்படியான தரக்குறைவுக்குக்  காரணமாகின்றன. உடனே நான் அந்தத் துறையின் ஒரு குறிப்பிட்ட  ஒடுக்கமான மூலையை பின்பற்றத் தொடங்குகின்றேன். இதனால் எனது  மூளையின் கலன்கள் முழுமையாகச் செயற்படாமல் ஒரு திசையிலேயே   செயற்படத்தொடங்குகின்றன. இதனால் முழுமூளையும் சுறுசுறுப்பாகச்  செயற்படாமல் விடுவதனால் அது படிப்படியாக தரங்குறைந்து போகின்றது .
சாதிப்பதற்கான விருப்பொ, நிறைவேற்றவதற்கான நோக்கமோ கொண்ட  எக்குறிக்கோளும் - ஈடுபாடும் தெரிவை அடிப்படையாகக் கொண்டிருந்தால்,  அத்தகைய செயற்பாடு, சச்சரவை - பிணக்கை - மனப்போராட்டத்தை -  மோதலை - முரண்பாட்டைத் தோற்றுவிக்கும். எனவே முரண்பாடு,  படிப்படியாகத் தரக்குறைவை ஏற்படுத்தும் முக்கிய அம்சங்களில்  ஒன்றாகின்றது. சரியாகச் சொல்வதானால் இதுவே மூளையின்  தரக்குறைவுக்கு முக்கிய காரணம் எனலாம். நான் ஒரு சமய வாதியாகவோ,  ஓர் அரசியல் வாதியாகவோ, ஒரு துறவியாகவோ இருந்து கொண்டு நான்  எடுக்கும் தீர்மானம், எனது அறிவால் வரையறுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகவே இருக்கும். இந்தத் தீர்மானத்திற்கு என்னைத் தள்ளிவிடும் எனது அறிவு  இயல்பாகவே வரையறுக்கப்பட்டது. எனவே எனது தீர்மானம்  முழுமையற்றது. எனவே, முழுமைக்கு முரணாக என்னால் எடுக்கப்படும் எந்த ஒரு தெரிவும், விருப்பமும் எனது
மூளையைப் படிப்படியாகத் தரக்குறைவு செய்கின்றது என்பது எதார்த்தமான  உண்மையாகும். நான் ஏதாவது ஒன்றிற்குப் பதிலாக இன்னொன்றைத் தெரிவு செய்கின்றேன் என்றால், அங்கு பாகுபாடுதான் எனது தெரிவுக்கு காரணமாக  அமைகின்றது.
மூளையில் தரக்குறைவை உண்டாக்குவதற்கு அதிர்ச்சியும்
(shock)  ஒரு காரணமாக இருக்கின்றது. திடீரெனச் சற்றும் எதிர்பாராத  வகையில் எனது தந்தை மரணிக்கின்றார் என்றால், அச்சம்பவம் என்னுள்  ஒரு நரம்பு சார்ந்த அதிர்ச்சியை உண்டுபண்ணுகின்றது. இந்தத் திடீர் இழப்பு,  என்னை உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும்  பாதிக்கின்றது. இந்த அதிர்ச்சி மூளையின் கலன்களுக்கு ஏற்படுகின்றது. எனது தந்தை மறையும்போது எனது முழுவாழ்வும் மாறுதல் அடைகின்றது. இந்த  அதிர்ச்சி என்னுள் ஒரு வடுவை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த அதிர்ச்சி  என்னுள் தனித்த ஓர் அடையாளத்தையோ, தனித்த ஒரு வலியையோ,  தனித்த ஒரு கீறலையோ - பிறாண்டலையோ - கீறு தடத்தையோ -  சிறுகாயத்தையோ - கீறல் கோட்டையோ - துயரத்தின் நிழற்படிவையோ  விடாமல் செய்திருந்தால், மனமானது, முற்றிலும் புதிதாக, முற்றிலும்  புதுவலுவுடன் கூடிய புத்துயிர்ப்புடன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளும். அப்படி மீளாத போது, அந்த அதிர்ச்சியும் தரக்குறைவை (deterioration ) உண்டாக்கும்  ஓர் அம்சமாகின்றது.
தடங்காணா ஆழம் வரை, தான் ஊறுபடவில்லை என்பதை எமது மனம்  எவ்வாறு அறிந்துகொள்ளும்?
அதிர்ச்சி என்பது இயல்பாகவே ஏற்படுவது. மனம், அந்த ஊறுடன் (hurt )  சேர்ந்து மீள்கின்றதா, அல்லது ஊறை முற்றாக நீக்கிவிட்டு மீள்கின்றதா?  அந்த ஊறுகள் மேலோட்டமானவையா, அல்லது ஒரு குறிப்பிட்ட கணத்தில்  விழிப்பு நிலையிலிருக்கும் மனத்தால் புரிந்து கொள்ள முடியாதவாறு  திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கும் அளவுக்கு ஆழமானவையா?
இவை யாவுமே உளவியல் சக்தியின் விரயமாகும். ஊறு என்பது ஆழமான  வலியாகும். வலியை, அதிர்ச்சி வெளிப்படுத்துகின்றது. அந்த வலி ஏற்கனவே  என்னுள் இருந்தது. அதிர்ச்சி அதனை வெளிப்படுத்துகின்றது.
துன்பம் (suffering) என்பது வலி. நாம் தனிமையை - பற்றை - பிணக்கை -  துணைமை நிலையை மறைப்பதற்காகவே துன்பப்படுகின்றோம்.  மனிதனுடைய மனத்தில் உள்ள துயரங்கள் யாவற்றையும் மேல் தளத்திற்கு  கொண்டு வந்து விடுவது தான் அதிர்ச்சி. இது நிகளும்போது, என்ன  செய்வதென்று அறியாத நிலையில் நாம் அழுகின்றோம். இறைவனைத்  தொழுகின்றோம். கோயிலுக்குப் போகின்றோம். காலஞ்சென்ற வரை  ஆவியுருவில் மறு உலகத்தில் சந்திக்கலாமென்று நம்புகின்றோம். வலியின்  உபாதையிலிருந்து விடுபட நாம் எமக்குத்தெரிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கின்றோம்.
தெருவில் பிச்சைக்காரன் ஒருவனைப் பார்க்கும்போதோ, சமயம் என்ற  கம்பத்தில் கட்டப்பட்ட ஒருவனுடைய வலியின் உபாதையை  பார்க்கும்போதோ அழாத நாம், எதற்காக எமது தந்தையாரின் மரணத்திற்காக  மட்டும் அழுகின்றோம்? நாம் கூர் உணர்வற்றவர்களாக -  நுண்ணுணர்வுத்திறன் இல்லாதவர்களாக இருப்பதனாலேயே இந்த பாரபட்சம்  நிகழ்கின்றது. துயில்கொள்ளும் மனம் அதிர்ச்சியால் எழுப்பப்படுகின்றது.  துயரத்துக்கான விழிப்பு எமது அதிர்ச்சியால் எழுப்பப்படுகின்றதேயொழிய, நாம் ஏன் முன்கூட்டியே விழித்துக்கொள்வதில்லை என்பது பற்றி நாம் ஏன்  சிந்தித்துப்பார்க்கவில்லை?
இந்த வலியோடு இருக்கும் நாம், இனி என்ன செய்ய வேண்டும்? இந்த  உளவியல் வலியை நீக்க ஒரு மனோதத்துவ நிபுணரிடம் செல்வதா? புனித  நூலை வாசிப்பதா? புனித தலத்திற்குச் செல்வதா?
துன்ப வலியிலிருந்து மீளுவதற்கு நாம் என்ன தான் செய்ய வேண்டும்?
தெருவில் நாம் கண்ட பிச்சைக்காரனின் வலியும் எங்களுடைய வலியும்  வௌ;வேறானவையல்ல. எமது தனிப்பட்ட வலியும் பிறருடைய துயரங்களும் ஒன்றானவையே. தமது நோன்புறுதியால் - சபதத்தால் - கடவுள் பற்றிய தமது கருத்துக்களாலும் கோட்பாடுகளாலும் சித்திரவதைக்குட்பட்டிருக்கும்  துறவிகளின் துயரங்களையெல்லாம் நாம் காண்கின்றோம். எனவே துயரமும்  நாமும் வேறுவேறானவையல்ல. நாமே துயரம். துயரமே நாம். இங்கே  காண்பானும் காணப்படும் பொருளும் ஒன்றாகின்றது. எனவே எமது  துயரத்திலிருந்து அப்பால் செல்வதற்கு எமக்கு போக்கிடம் வேறு கிடையாது.  காண்பவனே ஊறுபடுகின்றான்.
காண்பவன் இல்லாவிட்டால் வலியும் இராது. காண்பவனின் மையமே, 'நான்  அதிர்ச்சிக்கு உள்ளாகினேன்" என்று சொல்லும். மையம் இல்லாமல், அதாவது  காண்பான் இல்லாமல், எம்மால் வலியைப் பார்க்க முடியுமா?
மனமானது வலியிருந்து அதற்கப்பால் ஓடாதபோது, அது வலியை  உற்றுநோக்கும். அதனோடு இணைந்து வாழும். எந்தவிதத் தப்பியோடலும்  இல்லாமல், எதார்த்தமான உண்மை நிழ்வுக்கு முகம் கொடுக்கும்போது, மனம் மிகவும் தெளிவாகமும் கூர்மையாகவும் இருக்கும். அவ்வேளையில்  அத்துன்பமே கருணையாக மாறும். அத்தகைய மனம் என்றுமே ஊறுபடாது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 04 May 2024 06:33
TamilNet
HASH(0x55c2587b0520)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 04 May 2024 06:33


புதினம்
Sat, 04 May 2024 06:33
















     இதுவரை:  24856304 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1589 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com