அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 03 May 2024

arrowமுகப்பு arrow சமூகம் arrow உள்ளொளி arrow துன்பத்தை முடிவுக்குக் கொண்டு வருதல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


துன்பத்தை முடிவுக்குக் கொண்டு வருதல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கந்தையா நவரேந்திரன்  
Monday, 27 March 2006

இறப்பு, தனிமை, ஏமாற்றம், வாழ்வு முறையின் பயனின்மை ஆகியவை எமக்குத் துன்பத்தைத் தந்துகொண்டு இருக்கின்றன. துன்பம் ஏன் ஏற்படுகின்றது? நாம் எமது துன்பத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கின்றோம்?

 à®ªà®±à¯à®±à®¿à®©à¯à®±à®¿ வாழவேண்டும் என்றும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகக்கூடாது என்றும், ஒட்டில்லாமல் வாழவேண்டும் என்றும், மறுபடியும் ஊறுபடாதபடி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், எமக்குத் துன்பம் அனுபவ ரீதியாகக் கற்றுத்தந்துள்ளதாக நாம் நினைத்து ஆறுதல் கொள்ளமுடியுமானால், நாம் எமது துன்பத்திலிருந்து எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் கொள்ள வேண்டும். அப்படியானால் நாம் துன்பத்திலிருந்து மெய்யறிவை-பட்டுணர் பகுத்தறிவைக் கற்றுக்கொள்ளாமல், கூடுதலான தந்திரத்தையும், கூடுதலான கூருணர்வின்மையையுமே கற்றுக்கொண்டுள்ளோம் என்றுதான் கொள்ள வேண்டும். இவையனைத்துமே எம்மை நாமே பாதுகாக்கும் எதிர்வினைகளேயாகும்.

 à®¤à¯à®©à¯à®ªà®™à¯à®•à®³à¯à®³à¯, தனிப்பட்ட துன்பம் என்றும்,உலகின் துன்பம் என்றும் இரண்டு வகையான துன்பங்கள் உள்ளன. தனிப்பட்ட துன்பம் என்பது அறியாமையினால் ஏற்படும் துன்பமாகும். உலகின் துன்பம் என்பது காலத்தால் ஏற்படும் துன்பமாகும். தன்னைத்தானே அறியாததனால் ஏற்படுவதே அறியாமையினால் ஏற்படும் துன்பமாகும். காலம் துன்பத்தைக் குணப்படுத்தும் - மாற்றும் என்று எம்மை எண்ணவைத்து ஏமாற்றுவது காலத்தின் துன்பம். இந்தக் காலத்தின் துன்பம் என்ற ஏமாற்று விந்தைக்குள் அகப்பட்டுள்ள மிகப் பலர், துன்பத்தைத் துதிக்கின்றார்கள் - தொழுதல் செய்கின்றார்கள். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துன்பம் தொடரத்தான் செய்கின்றது. துன்பம் முடிவுக்கு வருமா என்று எவருமே தம்மைத்தாமே கேட்பதில்லை.

சுய அனுதாபமும், பிறர்மீது பற்றுக்கொள்வதும், பிறர் எம்மீது பற்றுக்கொள்ள வைப்பதும் துன்பத்தின் மிக முக்கிய காரணிகளாகும் .பற்று தோல்வியுறும்போது மட்டும்தான் துன்பம் ஏற்படுகின்றது என்பதல்ல .பற்றின் தொடக்கத்தின்போதே துன்பத்திற்கான விதை விதைக்கப்படுகின்றது. இப்பிரச்சனைகளுக்கெல்லாம் காரணியாக அமைவது, எம்மை நாம் புரியாமல் விடுவதேயாகும். தன்னைத்தான் அறியும்போது துன்பம் முடிவுக்கு வருகின்றது. ஆனால் நாமோ, எம்மைப் புரிந்துகொள்வதில் அச்சமும் தயக்கமும் காட்டுகின்றோம். ஏனெனில் நாமே எமக்குள், நல்லது-கெட்டது, தீயது-புனிதமானது, சுத்தமானது-அசுத்தமானது என்று வகைப்படுத்திப் பிரித்து வைத்துள்ளோம். நல்லது என்பது எப்பொழுதும் கெட்டது என்பதை மதிப்பீடு செய்துகொண்டிருக்கின்றது. இந்த எதிர்மறைக் கூறுகள் தமக்குள்ளே ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டும், போர்புரிந்துகொண்டும் இருக்கின்றன. இந்தப்போரும் பிணக்கும்  தான் துன்பம் .உண்மையைக் காண்பதே துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.

 à®‡à®¤à®©à¯ˆ விடுத்து, துன்பத்துக்கு எதிர்மறையைக் கண்டுபிடிப்பதால் துன்பம் முடிவுக்கு வந்துவிடாது. எதிர்மறைகள் இரண்டிற்குள்ளும், ஒன்றுக்குள் மற்றொன்று உட்கிடையாய் இருக்கத்தான் செய்யும். இந்த எதிர்மறைகளுக்கிடையே உள்ள நடைகூடத்தில் துன்பமே உலாவருகின்றது. வாழ்க்கையை உயர்வானது-கீழானது என்றும், புனிதமானது-புனிதமற்றது என்றும், கடவுள்-சாத்தான் என்றும் கூறுபோடுதல், பிணக்கையும் வலியையுமே விளைவிக்கும். துன்பம் இருக்கும்போது அன்பு இராது. அன்பாலும் துன்பத்தாலும் ஒன்றிணைந்து இருக்கமுடியாது. ஒருவர் எவ்வாறு உள்ளாரோ, அவ்வாறே தன்னை அவர் பார்ப்பதனாலேயே, அவர் தன்னைப் புரிந்துகொள்ள முடியும். இந்தப்புரிதல் கணத்துக்குக்கணம் நிகழவேண்டும். இப்புரிதலில் எவ்வித தெரிதலும் (உhà®´iஉந) இருக்கக்கூடாது. எவ்வித எதிர்மறையுமில்லாமல், கருத்தியல் கோட்பாடுமில்லாமல் ஒருவர் தன்னைப்பார்க்கவேண்டும்.
ளள
 à®“ருவருடைய தன்னைக்காணும் கண், கடுவெறுப்புடனோ, மனக்காழ்ப்புடனோ, வன்மத்துடனோ, மனக்கசப்புடனோ, சீற்றத்துடனோ இருக்குமானால், அவருடைய பார்வை இறந்தகால முலாம் பூசிய பார்வையாகவே இருக்கும். ஒருவர் தன்னைப் பார்க்கும் எல்லா வேளைகளிலும் இறந்த காலத்தை உதிர விட்டப்படிப் பார்ப்பதையே இறந்தகாலத்திலிருந்து விடுதலை பெற்ற பார்வை என்கிறோம். புரிதலின் ஒளியிருக்கும்போதுதான் துன்பம் முடிவுக்கு வரும் இந்த ஒளியை,ஓர் அனுபவத்தால் அல்லது ஒரு கணநேரப் புரிதலால் ஒளிரவைக்கமுடியாது. இந்தப்புரிதல் தன்னைத்தானே எப்பொழுதும் ஒளியூட்டிக்கொண்டேயிருக்கும். இந்த ஒளியை எந்த ஒரு நூலாலும்,குருவாலும்,இராட்சகராலும்,
சூழ்ச்சியாலும்,கைத்திறனாலும் எமக்கு அளிக்கமுடியாது. எம்மை நாமே புரிந்துகொண்டால்,
துன்பம் தானாகவே முடிவுக்கு வரும்.

 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 03 May 2024 23:25
TamilNet
HASH(0x560ce3402678)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 03 May 2024 23:25


புதினம்
Fri, 03 May 2024 23:25
















     இதுவரை:  24855784 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1608 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com