அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 03 May 2024

arrowமுகப்பு arrow சமூகம் arrow உள்ளொளி arrow உளவியல் நேரம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


உளவியல் நேரம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கந்தையா நவரேந்திரன்  
Monday, 13 March 2006

உள்நோக்கிய நேரத்தை உற்புறமாக அமைந்துள்ள நேரமென்றும், மனதுள்ள நேரம் என்றும், ஆன்மிகமான நேரம் என்றும், உளவியல் நேரம் என்றும் அழைக்கலாம். அதனை என்ன பெயர் கொண்டு அழைக்கின்றோம் என்பது முக்கியமில்லை. அது எமக்குள் எவ்வாறு செயற்படுகன்றது என்பதே முக்கியம்.

எங்கள் சிந்தனைகள் யாவும் இறந்த காலத்தின் விளைவுகளால் உருவாக்கப்பட்டுப் பின்னர் நிகழ்காலத்தில் மாற்றியமைக்கப்பட்டு, எதிர்காலத்திற்குள் தொடர்கின்றன. இதனையே நாம் உளவியல் நேரம் என்கின்றோம்.

சூரிய உதயத்தையும் கதிரவன் மறைவையும் இரு வரையறைகளாகக்கொண்டு, அவற்றிற்கு இடைப்பட்ட காலத்தை, காலக்கணிப்புப்பொறியால் கணிக்கப்படும் நேரமே வெளிப்புற நேரமாகிறது. இந்த வெளிப்புற நேரத்தைப் புறத்தோற்றங்கொண்ட நேரம் என்றும், வெளி நோக்கிய தோற்றங்கொண்ட நேரம் என்றும், உடம்பு சார்ந்த நேரம் என்றும், புறம்பான நேரம் என்றும், கண்ணுக்குப்புலப்படுகின்ற நேரம் என்றும், மேலெழுந்த போக்கான நேரம் என்றும் அழைக்கலாம். இந்த நேரத்திற்கான ஒவ்வொரு பெயரும் அந்நேரத்தின் பல தன்மைகளைத் தனித்தனியாக விளக்குகின்றது.

ஒரு மொழியைக் கற்க, ஒரு தொழில் நுட்பத்துறையில் தேர்ச்சிபெற, ஒரு விஞ்ஞானியாக,ஒரு தூரத்தைக் கடக்க எமக்குத்தேவைப்படும் நேரம் வெளிப்புற நேரமாகும். இந்த வெளிப்புற நேரமானது இயற்பொருள் சார்ந்த - சடப்பொருள் தொடர்பான நேரமாகும்.

அதுவாக இல்லாத ஒருவர், அதுவாக மாறவிரும்புகின்றார் என்றால், அந்த மாற்றத்திற்கும் நேரம் தேவை. சடப்பொருள் சார்ந்த நேரமானது நடைமுறையிலுள்ள நேரமாகும். இதனை எழுதும் போது மேசையின் மேலிருக்கும் காலக்கணிப்புப்பொறி காலை நான்கு மணி காட்டுகின்றது. இது இயற்பொருள் சார்ந்த நேரமாகும்.

எமக்குள் உளவியல் நேரம் இருக்கும் போது தான் அச்சம் என்பது உருவாகின்றது. சென்ற கிழமை எனக்கு ஏற்பட்ட வலி எனது மூளையில் பதியப்படுகின்றது. எனவேதான் நாளைக்கும் அவ்வலி வந்து விடுமோ என நான் எண்ணி அஞ்சுகின்றேன். இதிலிருந்து எண்ணமும் உளவியல் நேரமும் தான் அச்சத்தை உருவாக்கின்றன என்பது புலனாகின்றது. அதாவது, அச்சத்தின் இரண்டு ஆதாரக் கூறுகள் எண்ணமும் உளவியல் நேரமும் தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். அச்சம் என்பது ஒரு நினைவே. அது எதிர்காலத்தைப் பற்றிய  ஓர் எண்ணமாகும். நான் இன்று வசதி தரும் பாதுகாப்பில் இருக்கின்றேன் என்று வைத்துக்கொள்ளுவோம். இந்த பாதுகாப்பு உணர்வு நினைவாய் என்
மூளையில் பதியப்படுகின்றது. உளவியல் நேரமும் மூளையில் ஏற்கனவே நினைவாய் பதியப்பட்ட எண்ணமும் சேரும்போது, நாளைக்கு அந்த வசதி தரும் பாதுகாப்பை இழக்க நேரலாம் என்ற அச்சம் எனக்குள் ஏற்படுகின்றது.
எனக்குள் ஏற்பட்டுள்ள இந்த அச்சத்தின் முழு அசைவையும் நான் எப்படி பார்க்க வேண்டும் என்பதை எனக்குள்ளேயே அவதானிக்கப்போகின்றேன். அந்த அவதானிப்பை நீங்களும் உங்களுக்குள் நிகழ்த்திப்பாருங்கள்.

அச்சத்தை மறுதலித்துப் பார்ப்பதா அல்லது அச்சத்தையும் என்னையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதா என்று முதலில் விளங்கிக் கொள்வோம். நானே அச்சமாய் இருக்கும்போது அச்சத்தை என்னிலிருந்து தனியாக எப்படிப் பிரித்துப் பார்க்கமுடியும்? நானே அச்சமாயும்,அச்சமே நானாயும் இருக்கும் போது, அவை இரண்டையும் பிரிப்பது என்பதற்கு இடமே இல்லை. என்னையும் எனது அச்சத்தையும் மறுதலிக்காமல் பார்க்கும் போது, நானே அச்சமாய் இருக்கின்றேன் என்ற உண்மை எனக்குப் புலனாகும். அச்சத்தை இரண்டு வகையாக மறுதலித்துப் பார்ப்போம். ஒன்று, 'எனக்கு அச்சம் இல்லை" என்று எனக்கு நானே கூறிக்கொண்டு, அச்சத்தை முற்று முழுதாக மறுதலித்துக் கொண்டு பார்ப்போம். இது ஓர் அசட்டுத்தனமான பார்வை என்ற உண்மை எமக்கு உடனடியாகவே தெரிந்து விடும். இரண்டு, காண்பவனாகிய நான், காணும் பொருளாகிய அச்சத்தைப் பார்க்கும்பொழுது, அச்சமே காண்போனாகின்றான். இந்நிலையில் அது பற்றி எதையும் செய்ய முடியாத நிலைக்கு நான் தள்ளப்படுகின்றேன்.

அச்சத்தை இல்லாமல் செய்யவோ, மறுதலிக்கவோ, தணிக்கவோ, தடை செய்யவோ, அதனிலிருந்து தப்பியோடவோ, அதனைப் பகுப்பாய்வு செய்யவோ, அதன் தோற்றத்திற்கான காரணியைக் கண்டுபிடிப்பதற்கோ என்று என்னால் மேற்கொள்ளப்படும் எவ்விதச் செயற்பாடும் அச்சத்தை மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே  அமையுமேயல்லாமல் வேறு எந்த வகையிலும் அவை உதவப் போவதில்லை. இப்படியெல்லாம் நாம் செயற்படும்போது - வினைப்படும்போது  நாம் அச்சத்திற்கு எதிராகச் செயற்படுவதாகவே அமையும். அச்சத்திற்கு எதிராக நாம் செயற்படும் போது அந்த எமது எதிர் வினைகள் யாவும் அச்சத்தை மேலும் உரமூட்டுவதாக அமைந்துவிடும் என்ற உண்மையை - எதார்த்தத்தை நாம் எம்முன் சரிவரப்புரிந்து கொள்ளும்போது, நாம் அச்சத்திற்கு எதிரான எமது செயற்பாட்டை அல்லது  செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவோம். அப்போது அச்சத்தையிட்டு ஒரு செயற்பாட்டின்மை - செயலற்றுப்போகும் நிலை ஏற்படும். அத்தகைய செயலற்றுப்போகும் நிலையில் ஒரு முற்றுமுழுதான வித்தியாசமான அசைவும் - இயக்கமும் எம்முன் நிகழ்வதைக் காணலாம்.


இனி நாம், இன்பம் - விருப்பம் - இன்ப நுகர்வு - மன மகிழ்ச்சி - புலனுகர்வு சார்ந்த மகிழ்ச்சி ஆகியவை அச்சத்தினின்றும் வேறுபட்டவையா அல்லது அச்சம் தான் இவை யாவுமா என்று பார்ப்போம்.

இன்பமும் கூட உளவியல் நேரத்தாலும் எண்ணத்தாலும் உருவாக்கப்பட்டது. இன்பத்தின் ஆதாரக்கூறுகளும் உளவியல் நேரமும் எண்ணமும் தான். ஓர் இறந்த கால நிகழ்வை நினைத்து அது மீண்டும் நிகழக்கூடாதென்றோ அதனைத் தவிர்க்கவேண்டும் என்றோ நினைக்கும்போது  எப்படி அச்சம் ஏற்படுகின்றதோ,அதைப்போலவே இறந்த காலத்தில் அனுபவித்த ஓர் இன்பமான அனுபவத்தையும் எமது நினைவில் பதிவு செய்துவிட்டு, அதனை மீண்டும் மீண்டும் நுகர்ந்து மகிழ எமது மனம் விரும்புகின்றது.

நாம் இவை இரண்டையும் தனித்தனியாக 'அச்சம்" என்றும் 'இன்பம்" என்றும் அழைத்தாலும் இவை இரண்டும் ஒரே விதமான கூறுகளின் அசைவுகளை - இயக்கங்களைக் கொண்டவை. இவ்வுண்மையை வெறுமனே அறிவு ரீதியாக அறிந்து கொள்ள முனைவதால் அல்லது புரிந்து கொள்ள எத்தனிப்பதால் எமக்கு எவ்வித பயனும் ஏறபடப் போவதில்லை. இதனை அறிவு நிலைக்கும் அப்பால், தன்னிலையான உணர்வு நிலையிலிருந்து உணர்ந்து கொள்ளும் போதே அவ்வுணர்வோடு கூடிய புரிதல்; பயனலிக்கும். அறிவின் முக்கியத்துவத்தையும் அதேவேளை அறிவின்மையின் பயன் பாட்டையும் உணர்த்தாத கல்வியால் எவ்வித பயனுமில்லை. ஒரு குறிப்பிட்ட கருத்து நோக்கோ முடிபோ இல்லாமல் எம்மையோ  உலகத்தையோ  அவதானித்துப்பார்க்க உதவாத எக்கல்வி முறையாலும் எமக்கு எவ்வித உபயோகமும்  ஏற்படப்போவதில்லை. நாம் எமக்குள் கூறுபடாத ஓர் உளவியல் புரட்சி நிலையில் வாழ்வது தான் உண்மையான சமய வாழ்க்கை ஆகும். இதனை விட்டுவிட்டு நாம் எப்பொழுதும் இறந்த காலத்துக்குள்ளேயே சடலமாய் நுழைந்துகொண்டிருக்கின்றோம். இதனைப் புரிந்துகொள்ளாத வரைக்கும் அச்சங்களும் இன்பங்களும், எம்மை, நாமே  எமக்காகத்தோண்டிக்கொண்டிருக்கும் உளவியல் நேரம் என்னும் புதைகுழிக்குள் புதைத்துக்கொண்டேயிருக்கும். சொற்களினூடாக உரையாடிக்கொணடிருக்கும் நாம், அச்சொற்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு  எமக்குள் இருக்கும் அச்சத்தையும் இன்பத்தையும் பார்ப்போமானால் அந்தப் பார்வை பல தெளிவுகளை எமக்குள் கொண்டுவரும்.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 03 May 2024 17:19
TamilNet
HASH(0x559953654310)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 03 May 2024 17:19


புதினம்
Fri, 03 May 2024 17:19
















     இதுவரை:  24855395 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1803 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com