அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 04 May 2024

arrowமுகப்பு arrow சமூகம் arrow உள்ளொளி arrow உண்மையான விடுதலை.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


உண்மையான விடுதலை.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கந்தையா நவரேந்திரன்  
Tuesday, 02 August 2005

அவதானிப்பதற்கான விடுதலையே
உண்மையான விடுதலை.
த
னிப்பட்ட சிறப்பியல்பை ஒரு பண்புக்கூறாக நாகரீகப்படுத்துவது மனிதர்களுடைய தனித்தன்மைகளுள் ஒன்று. நாம் சிறுபராயத்திலிருந்தே எமக்கென்ற தனிப்பட்ட சிறப்பியல்புப் பண்புகளைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கப்பட்டு வருகின்றோம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கென்ற தனிப்பட்ட கருத்துக்களும், செயல் நோக்கங்களும், அவற்றால் உருவாகிய அனுபவங்களும் உண்டு. எனவே ஒருவருடைய பண்பு இன்னொருவருடைய பண்பிலிருந்து வேறுபடுவது இயல்பே. இந்தப் பண்பு அவாவினாலோ அறிவினாலோ பேணி வளர்க்கப்படுகின்றது.
இந்தப் பண்பானது அதனைக் கொண்டுள்ளவருக்கு ஆறுதலை அல்லது மருட்சியை அல்லது மகிழ்ச்சியை அல்லது உண்மை நிகழ்வுகளோடான தொடர்பை ஏற்படுத்துகின்றது. எனவே தனித்தனியான மனிதர்களிடையே காணப்படும் தனித்தனியான சிறப்பியல்புகள் அவர்களை மற்ற மனிதர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன. ஒருவருடைய நோக்கங்களின் படியும், தப்பெண்ணங்களின்படியும், அவர் கொண்டுள்ள சிறப்பியல்புகள் மெச்சத்தக்கனவாகவோ இழித்துரைக்கத் தக்கனவாகவோ அமைகின்றன. மனிதர்களிடம் எதற்காகத் தனிப்பட்ட சிறப்பியல்புகள் இருக்கின்றன? அவற்றின் விளைவுகள்தான் என்ன?
தனிப்பட்ட சிறப்பியல்பை ஆங்கிலத்தில் 'Values' என்று அழைக்கின்றோம். 'Values' என்ற சொல்லின் மூல அர்த்தம் 'Valour' ஆகும். 'Valour' என்றால் வீரம் என்று பொருள். எனவே 'Value' என்ற சொல்லின் மூலக்கருத்து வலிமை, ஆற்றல், உறுதி என்பதாகும். வலிமை என்பது ஒரு சிறப்பியல்பு ஆகாது. ஆனால் பலவீனத்திற்கு எதிரானது எதுவோ, அதுவே சிறப்பியல்பு ஆகிறது. தெளிவின் - துவக்கத்தின் சாரமே வலிமை. தப்பெண்ணமும், பொல்லாங்கும், எதிர்சார்பும், முற்சாய்வும், நெறிபிறழ்வும், வருத்திரிப்பும் தெளிவான சிந்தனையில் இரா. ஒரு பயிரை வளர்ப்பது போல் சிறப்பியல்பை நாம் எம்முள் வளர்த்துவிடமுடியாது. சிறப்பியல்பு ஒரு பெறுபேறல்ல. எந்த ஒரு பெறுபேறுக்கும் காரணமிருக்கும். காரணியாய் இருக்கும் எதுவும்  ஒரு பலவீனத்தையே சுட்டிநிற்கும். இனிமேல் நான் எனது மனைவியிடம்  அன்பாக நடந்துகொள்ள வேண்டுமென நான் முடிவெடுப்பேனேயானால், அப்படியான ஒரு முடிவுக்கு நான்வருவதற்குக் காரணமாக இருந்தது அவரிடம் இதுவரை காலமும் நான் காட்டிவந்த மூர்க்கத்தனமே. எனவே எந்த ஒரு செயலுக்கும் காரணமாக அமைவது பலவீனமே. காரணத்தை நான்தெரிந்து  கொண்ட பின்னர். அந்தப்பலவீனம் மீண்டும் ஏற்படாதபடி நான் என்னுள் அதனை தடுக்கும் ஆற்றலை - எதிர்ககும் ஆற்றலை - இடைமறிக்கும் ஆற்றலை. வளர்க்க வேண்டும்.  அன்றேல் அப்பலவீனத்திற்கு நான் விடடுக் கொடுக்க வேண்டும். தெளிவுக்கும் துலக்கத்திற்கும் காரணம் கிடையாது. தெளிவு என்பது எந்த ஒரு எமது எண்ணத்தையும், அதனுடைய பூரண செயற்பாட்டையும் சுத்தமாக அவதானிப்பதே தெளிவாகும் - துலக்கமாகும். இந்த தெளிவே எமது வல்லமை. இளம் வயதினர் தாம் வாழும் சமூகத்தின் அழுத்தங்களாலும், தமது பெற்றோரது அழுத்தங்களினாலும், தமது தனிப் பண்புகளாலும் வரையறுக்கப்படுகின்றனர். தமக்கென தம்மாலேயே உருவாக்கப்பட்ட இலக்குகளினால் வரையறுக்கப்படுகின்றனர். அந்த வரையறுப்புக்களே அவர்களுடைய சிறையாகிறது. இந்த உளவியல் சிறைகளிலிருந்தும் - பிரச்சினைகளிலிருந்தும் அவர்கள் விடுதலை பெறவேண்டும். இந்த விடுதலைக்கு  ஆசரியர்களும் பெற்றோர்களும் உதவி செய்யவேண்டும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் தத்தமது சிறைகளில் தம்மைத்தாமே அடைத்துக் கொண்டிருப்பார்களேயானால்  அவர்களால் எப்படி மற்றவர்களது விடுதலைக்கு உதவமுடியும்?
இன்றைய மாணவர்களுக்குச் சிக்கலான அறிவுசார் பிரச்சினைகளையே கல்லூரிகளில் போதிக்கின்றார்கள். அவர்களுடைய கல்விமுறைகள்யாவும் தொழில்நுட்ப ரீதியாகவே அமைக்கப்பட்டுள்ளன. அவர்களது மூளைகளுக்குள் கூடுதலாக பண்பியலான - கோட்பாட்டளவான - கருத்தியலான பலதரப்பட்ட தகவல்களே திணிக்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் அவர்களை உளவியற் சிறைகளுக்குள்ளேயே தள்ளிவிடுகின்றன. இன்றைய இளவயதினரை உளவியற் பிரச்சினைகள் இல்லாதவர்களாக - உளவியற் சுதந்திரத்தைத் தம்முள் அனுபவிப்பவர்களாக மாற்றாத எக்கல்விமுறையும் அவர்களுக்குள் அடிப்படை மாற்றத்தைக்கொண்டு வரப்போவதில்லை. அன்பு, தயாளகுணம், கருணை ஆகியவை அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கொண்டே போகின்றன.
தமது அவாக்களினதும் எதிர்வினைகளினதும் இயல்பையும் தன்மைகளையும் அவர்கள் தாமாகவே அவதானிக்கும் நிலைமையே உண்மையான உளவியற் சுதந்திரமாகும். அந்தச் சுதந்திரத்தில் தெளிவு இருக்கும். அந்தத் தெளிவில் வல்லமை இருக்கும்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 03 May 2024 23:25
TamilNet
HASH(0x560ce3402678)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 03 May 2024 23:25


புதினம்
Fri, 03 May 2024 23:25
















     இதுவரை:  24855826 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1565 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com