அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 04 May 2024

arrowமுகப்பு arrow சமூகம் arrow உள்ளொளி arrow அவதானிப்பில் 'நான்'
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அவதானிப்பில் 'நான்'   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கந்தையா நவரேந்திரன்  
Thursday, 21 July 2005

அவதானிப்பில் 'நான்' என்ற மையம் விலகிவிடும்.

தான் என்பது எம்முடைய எண்ணத்தின் உருவாக்கம். அந்த எண்ணமே எம்முள் 'தான்' 'தனக்கு'  என்ற வரையறைகளை உண்டாக்குகின்றது. அந்தத் தான் சுதந்திரமாக இயங்குவதற்கான தன்னுரிமையைக் கொடுப்பதும் எண்ணமே. இயல்பாய் அமையாப்பெறாத அறிவைப் பெறச்செய்வதும் எண்ணம்தான். இறந்த காலத்திலிருக்கும் 'தான்' ஐ, நிகழ் காலத்தின் ஊடாக இழுத்துச் சென்று எதிர்காலமாக மாற்றியமைப்பதும் எண்ணம் தான். தன்னால் உருவாக்கப்பட்ட 'தான்' ஐ தன்னில் தங்கியிராமல் சுதந்திரமாய் இயங்குவதற்கான ஆற்றலைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருப்பதும் எண்ணமே. தான்க்கு எண்ணம் ஒரு பெயரைச் சூட்டும், ஓர் உருவத்தை அளிக்கும், அதற்கு கிருஷ்ணன் என்றோ முகமது என்றோ அல்லது யேசு என்றோ பெயர் - தலைச்சின்னம் உண்டு.அந்தத் 'தான்' தன்னை ஒரு பெயரோடு, ஒர் உருவத்தோடும், ஒரு பின்பற்றத்தக்கச் சிந்தாந்தத்தோடும், சீர்மையோடும் அடையாளப்படுத்தும். சிலவேளைகளில் அந்தத் 'தான்', தன்னை இன்னொரு தானாக மாற்ற விரும்பி அதற்கு வேறு ஒரு பெயரைச் சூட்டுவதும் உண்டு. 'தான்' என்பது எண்ணத்தின் விளைவு என்று சொல்லும் போது, அது காலத்தின் விளைவு என்று தானே பொருட்படும்?
'தான்' என்பது வெறுமனே ஒரு சொல்லே. இந்தச் சொல்லை நீக்கிவிட்டால் மிஞ்சுவது எது? .என்னுள்ளும் உங்களுக்குள்ளும் துயருற்றுக்கொண்டிருப்பது எதுவோ, அதுவே இந்தத் 'தான்' என்றவரையாகும். என்னுள் இருக்கும் நானும், உங்களுக்குள் இருக்கும் தானும் வெவ்வேறானது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் என்னுள் இருக்கும் நானும் உங்களுக்குள் இருக்கும்  தானும் இரண்டு வெவ்வேறானவை அல்ல.அவை இரண்டும் ஒன்றே. அது ஒவ்வொரு மனிதனுடைய பொதுவான உள்ளியல்பு அடிப்படைச்சாரம். நீங்கள் என்னை விட உயரத்திலோ, நிறத்திலோ, முகத்தோற்றத்திலோ, கெட்டித்தனத்திலோ, குணத்திலோ, ஒழுக்க நெறியிலோ வேறுபட்டிருக்கலாம். இவையாவும் நாகரீகத்தின் வட்டப்பரப்பின் சுற்றுக்கோட்டுத் தளங்களேயாகும். ஆனால் ஆழ்தடத்தில் நாமிருவரும் அடிப்படையில் ஒரேமாதிரியானவர்களே. பேராசை, தன்னலம், அச்சம், ஏக்கம், கவலை, பற்றார்வம் போன்றவற்றைக் கொண்ட நீரோட்டத்தில் எங்களுடைய 'தான்' என்பது அசைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.நாங்கள் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ இந்த நீரோட்டத்தில் அகப்பட்டுள்ளோம். இந்த நீரோட்டமே எங்களது வாழ்க்கையோட்டம் எனச் சொல்லவேண்டும். ஏனெனில் அந்த நீரோட்டத்திலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே இந்த நீரோட்டத்தில் அகப்பட்டு விடுகிறோம். எனவே எங்கள் வாழ்வின் விளைவாகவே நாம் இந்த நீரோட்டத்தில் அகப்பட்டு அல்லற்பட்டு கொண்டிருக்கின்றோம். சுருங்கக்கூறின் நாமனைவரும் 'தன்னலம்' என்ற நீரோடையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.நாம் இறக்கும்போது எமது உயிர் பொருள் மரணிக்கும். ஆனால் 'தன்னலம்' என்ற நீரோட்டம் மட்டும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.எங்களது உறவு நிலைகளிலும் நாம் இதனையே காண்கின்றோம். நாங்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும, நாங்கள் வாழும் சூழ்நிலைகளின் அழுத்தங்களால் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, அடிப்படையில் இந்த அசைவு இருந்துகொண்டிருப்பதைக் காணலாம். உடல் மரணித்தாலும், இந்த அசைவு தொடர்ந்துகொண்டிருக்கும். இந்த அசைவு தனக்குத் தோதான கடவுளையும் சுவர்க்கத்தையும் மேலும் பலவற்றையும் கண்டுபிடித்து, அவற்றுள் தன்னிருப்பை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கும். காலமே அந்த நீரோட்டம் , எண்ணத்தின் அசைவே துயரத்தினை – தானை – உருவாக்குகிறது.பின்னர் அது, தான் சுதந்திரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காகவும், வலியுறுத்துவதற்காகவும் தன்னை எனது நானிலிருந்து பிரிவு படுத்துகிறது. 'தான்' என்பது எண்ணத்தின் கற்பனையான உருவமைப்பாகையால், தன்னளவில் அது புறவுலகில் இருக்கின்ற ஓர் உளதாம் பொருளல்ல. தனக்குப் பாதுகாப்பும் ஐயுறவிலா உண்மைத்தன்மையும் வேண்டும் என்பதாலேயே எண்ணமானது எம் ஒவ்வொருவருக்குள்ளும் 'நான்'ஐ உருவாக்கியது, அந்தத் தனக்குள் துயரம் உட்பட எம்மை அல்லற் படுத்தும் அனைத்துமே இருக்கின்றன.
இந்த நீரோட்டம் முடிவுக்கு வருமா? அதாவது, பல ஒப்பனைகளையும் நுட்ப நுணுக்கங்களையுங் கொண்ட தன்னலம் முற்று முழுதாக முடிவுக்கு வருமா?...அதன் முடிவு, காலத்தின் முடிவேயாகும்.எனவே அதன் முடிவுக்குப் பின்பு, சுயநலமின்மை என்ற முற்று முழதான வேறு ஒரு வெளிப்பாடே நிகழும்.
'துயரம்' என்பது இருக்கும்போது 'நீ ' என்னும், 'நான்' என்னும் வேறு வேறு தனிநபர்கள் உள்ளோமா, அல்லது வெறுமனே துயரம் மட்டுமே எம்மிருவருக்கும் பொதுவாக உள்ளதா?. துயருற்றிருக்கும் போது, நான் அத்துயரத்தை 'எனது துயரம்' என்று அடையாளப் படுத்துகின்றேன்.எனது எண்ணமே இவ்வடையாளத்தை எனக்கு தருகின்றது.இங்கே ஒரு முக்கியமான உண்மையை நாம் உணரவேண்டும். நீங்கள் எப்படித் துயரப் படுகின்றீர்களோ அது போலவே நானும் துயரப்படுகின்றேன். நீங்கள் உங்களது துயரத்தோடு இருக்க, நான் தனியாக வேறுபட்ட ஒரு துயரத்தோடு இருப்பதில்லை.அங்கே எம்மிருவருக்கும் பொதுவான 'துயரப்படுதல்' என்பது மட்டுமே நிகழ்கிறது.
இவ்வுண்மையை நாம் சரியா உணரும் போது என்ன நிகழ்கிறது?
'எனது துயரம்','உங்களது துயரம்' என்று பாகுபடுத்தப்படாத ஆள் சாராத – என்னோடோ உங்களோடோ அடையாளப்படுத்தப்படாத – அடையாளப்படுத்தப்பட முடியாதபோது அந்தத் துயரத்திலிருந்து மிகப்பெரிய கருணை வெளிவரும்.
துயரம் என்பதற்கு ஆங்கிலத்தில் 'suffering' என்று கூறுவர். இந்த 'suffering'  என்ற சொல் 'passion'  என்ற சொல்லிருந்து வந்தது. 'passion'  என்றால் உணர்ச்சி, அடங்காக் கோபம், போரார்வம், வெளிஉணர்ச்சி, மிகு காமம் என்றெல்லாம் பொருட்படும். ஒருவர் என்னை இகழ்ந்துரைக்கிறார் என்றால், நான் அவரது உறவைத் தவிர்கின்றேன் அல்லது நிராகரிக்கின்றேன்.அதன் விளைவாக நட்புக் கொள்வதற்கும், உறவாடுவதற்கும் அவரை விடுத்து வேறு ஒருவரை எனது மனம் நாடுகின்றது.
.நான் மகிழ்ச்சியாக இருப்பதை எனது மனம் உணரும்போது என்னிடமிருந்த மகிழ்ச்சி என்னையும் அறியாமல் விலகி விடுகின்றது. ஆனால் எனது மனதில் ஒரு காயமேற்படும் போதோ, அதனை நான் உணரும் போதோ, அக்காயம் எனனிடமிருந்து நீங்கிவிடுவதில்லை. வேறு ஏதாவொரு வழியில், அல்லது வேறு சில வழிகளில் உணர்ச்சியற்றிருந்தாலலொழிய, நான் அக் காயத்தை உணரும்போது அதனைத் தணிப்பதற்கோ, அதிலிருந்து விலகிச் செல்வதற்கோ எதையோ ஒன்றைச் செய்கின்றேன். இது புலனுணர்வின் இன்னொரு பகுதியாகும்.
விழிப்புணர்வுக்கும் கவனத்திற்குமிடையே உள்ள வித்தியாசத்தை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வுக்கு மையம் கிடையாது. 'நான்' என்ற மையமற்ற நிலையே விழிப்புணர்வு நிலை. ஆனால் 'நான் உணர்கின்றேன்' என்று நான் கூறும் போது, நான் எனது ஆசைகளாலும், பாரபட்சங்களாலும், அச்சங்களாலும், வரையறைகளாலும், வேறு பலவற்றாலும் உருவாக்கப்பட்ட மையத்தினூடாகவே அந்த உள்ளுணர்ச்சியை வெளிப்படுத்துகின்றேன். இத்தயை மனத்தின் உணர்வு நிலையில் - விழிப்பு நிலையில் (conscisusness) ல் 'நான்' என்ற மையம் (center)  இருக்கும். ஆனால் பூரண அவதானிப்பு (total observation)  நிலையில் மையம் இருக்காது. இங்கு கண்பவனும் காணப்படும் பொருளும் என்ற இரு முனைப்பக்கங்கள் இரா.
'நீங்கள் கூறுவது பற்றி நான் ஏற்கனவே அறிந்துள்ளேன்.வாசித்துள்ளேன்.கேள்விப்பட்டுள்ளேன். இப்பொழுது நீங்கள் கூறுவது, நீங்கள் முன்பு கூறியதைவிடத் தெளிவாக இருக்கிறது அல்லது கடுமையாக இருக்கிறது அல்லது மயக்கமாக இருக்கிறது' என்றெல்லாம் எண்ணவோ சொல்லவோ தோன்றாது, ஏனெனில் அவையெல்லாம் முடிந்து போனவை பற்றிய கருத்துக்களே.ஒன்றை நினைவுபடுத்துவதற்கு 'தான்' என்ற மையம் தேவை.அந்த மையம் இல்லாமல் மனதிலிருக்கும் எதனையும் வெளியிட முடியாது. ஆனால் பூரண அவதானிப்பு நிலையில் - விழிப்பு நிலையில், 'தான்' என்ற மையத்துக்கு இடமேயில்லை.மையமில்லாத நிலையில் அதற்கு கரையோ எல்லையோ இருக்காது.மையம் பற்றிய விழிப்பு எம்முள் ஏற்படும்போது, அந்த மையம், அவதானிப்புக்கு இடமளிக்கும் வகையில் அகன்று போய்விடும்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 04 May 2024 03:31
TamilNet
HASH(0x56099b5e2640)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 04 May 2024 03:31


புதினம்
Sat, 04 May 2024 03:31
















     இதுவரை:  24856074 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1583 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com