அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 03 May 2024

arrowமுகப்பு arrow சமூகம் arrow உள்ளொளி arrow ஆக்க சக்தியின் விடுவிப்பே தியானம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஆக்க சக்தியின் விடுவிப்பே தியானம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கந்தையா நவரேந்திரன்  
Friday, 10 June 2005

கந்தையா நவரேந்திரன்திரு. கந்தையா நவரேந்திரன்:  எழுத்தாளராகவும், கவிஞராகவும், வழக்கறிஞராகவும் அறியப்பட்டவர். இவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளின் சாரத்தை தமிழில் வெளியிட்டதன் 'விழிப்புணர்வு பற்றிய விளங்கங்கள்' எனும் நூலாக வெளியிட்டதன் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தை பெற்றார். இந்நூல் சென்னையில் உள்ள நர்மதா பதிப்பகத்தின் ஊடாக பல பதிப்புகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஆங்கிலப் பத்திரிகைகளில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை புனைபெயரில் எழுதியவர். தற்போது பாரிசில் வாழ்ந்துவரும் இவர் ஈழமுரசு பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அப்பத்திரிகையில் எழுதியும் வருகி்ன்றார். அவர் தனது கவிதைகளை 'மெளன முகாம்', 'ஊறும் அமைதி' என இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். தற்போது எமது தளத்திற்கு எழுத இசைந்துள்ளார். அவரது எழுத்துகள் 'உள்ளொளி' என்னும் தலைப்பில் இருவாரங்களுக்கு ஒரு முறை எமது தளத்தில் இடம்பெறும் என்பகதை மகிழ்ச்சியுடள் நோக்கர்களுக்கு அறியத் தருகின்றோம்.

1.

Disciple என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சீடர் - மாணக்கர் - வழிநிற்பவர் - பண்பு மேற்கொள்பவர் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். இச் சொல்லிலிருந்தே discipline என்ற சொல் வந்தது discipline என்றால் உளப்பயிற்சி - ஒழுங்குமுறை - ஒழுக்கப்பயிற்சி என்று பொருள். புதிதாகக் கற்றுக் கொள்ளும் கற்றுணரும் - பயின்று திறம் கைவரப் பெறும் மனத்தைக்கொண்ட மாணாக்கர், தனது இதயத்தையும், மனத்தையும் கூர்ந்து அவதானிப்பதன் மூலமும், தான்செய்யும் செயல்களை அவதானிப்பதன் மூலமுமே உண்மையாகக் கற்றுக் கொள்கின்றார். ஒரு குருவிடமிருந்தோ, ஒரு யோதகரிடமிருந்தோ, நூலிலிருந்தோ அவர் கற்பதில்லை, கற்றலுக்கு ஒரு குறிப்பிட்ட உளப்பயிற்சிதான் தேவையேயன்றி , இணக்கமும், ஒத்துப்போதலும் , இசைவும் தேவையில்லை. இணக்கமும், இசைவும், கீழ்ப்படிதலும் , போலி செய்தலும் புறத்தோற்றங்களேயாகும். உள்ள அகப்பண்பில்லாது, போலியான நடிப்பை மட்டும் கொண்டிருக்கும் ஒருவனால்  கற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் அவனால் பின்பற்றலைச் செய்யமுடிகின்றது. ஆனால் discipline என்ற சொல்லைப் பொதுவாக உபயோகிக்கும்போது, அச்சொல்லோடு இணைந்திருக்கும் பிணக்கும், கண்டிப்பும், கடும் பயிற்சியும், தண்டிப்பும், தன்னெர்றுப்பும், கட்டுப்பாடும், கடும் பயிற்சி தரும் துன்பமுமே எங்களுக்கு நினைவுவரும். இது சீருடையினருக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், பொருந்துவதாக இருக்கலாம். ஆனால் நாங்கள் அச்சொல்லை இங்கே கற்றல் என்ற அர்த்தத்தில் மட்டுமே உபயோகிக்கின்றோம் என்பதை எமது மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டும்.

ஒருவன் தனது மிகவும் சிக்கலான மனத்திலிருந்தும், தனது வாழ்க்கையின் நாளாந்த இருப்பிலிருந்தும் , மற்றவர்களுடன் அவன் கொண்டுள்ள உறவுகளிலிருந்தும் தான் அவன் கற்றுக் கொள்கிறான், அந்தக் கற்றுக்கொள்ளுதலைத்தான் நாங்கள் discipline என்கின்றோம். எங்கு ஒத்துப்போதலும், இணக்கமும், ஒப்புதலும் நிகழ்கின்றதோ அங்கு உளவியல் உராய்வும் , அதன் விளைவாக உளவியல் ஆற்றல் விரயமாகிறது. பிணக்கில் இருக்கும் ஒருவரது மனத்தாலும், அதயத்தாலும் ஒரு போதும் தியானிக்க முடியாது. சாதி, சமயம், உயர்வு- தாழ்வு, குலம்- கோத்திரம், குறிச்சி - வட்டாரம், அந்தஸ்த்து, ஊர், பரம்பரை, திசை -திக்கு, மூலை - முடுக்கு என்று மீளமுடியாத பல அடிமட்டப்பிணக்குகளுடன்  வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரால்  கடைசிவரை தியானம் செய்யவே முடியாது. அப்படிப்பட்ட நினைவிலிருப்பவர், தான் தியானம் செய்வதாகச் சொல்லிக்கொள்வாரேயானால் அவர் பொய்யுரைப்பதோடு தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டுமிருக்கின்றார் என்றே சொல்லவேண்டும். இத்தகைய மாயைக்குள் சிக்குப்பட்டவர்களே தம்மைப் போதகர்களாகவும், பக்திமான்களாகவும் இறையடியார்களாகவும் காட்டிக் கொள்கின்றார்கள்.

நாங்கள் ஆயிரமாயிம்  ஆண்டுகளாகப் பிணக்குகளுடனும், ஒப்புதலுடனும், கீழ்ப்படிவுடனும், பிறர்சொல்வதை - புனித நூல்கள் சொல்வதைத் திருப்பித்திருப்பிச் சொல்வதுடனும் - செய்துகொண்டிருப்பதுடனும் எங்களது வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றோம். இந்தப் புரிகளுக்கிடையே அகப்பட்டு- நெரிபட்டு அல்லற்படும் எமது மனம், தனது சொந்த செயற்பாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் ஆற்றலையும் சக்தியையும் இழந்துவிட்டது. எமது இந்த மன ஆற்றலின் இழப்பிற்கும் - விரயத்திற்கும் நாமே பொறுப்பேயன்றி, அரசியல்வாதிகளோ, குருமார்களோ, சித்தாந்த வாதிகளோ, புனித நூல்களோ, சமூகமோ, சூழ்நிலைகளோ பொறுப்பல்ல, ஒவ்வொரு மனித மனத்திற்குள்ளும் சிக்கலான சோகக்கதைகளும், வரலாறுகளும் இருக்கின்றன. அதற்குள் மனித விசாரம், கவலை, ஏக்கம், தனிமை, மனக்கசப்பு , மனமுறிவு , விருப்பமுறிவு பற்றிய ஏமாற்றம், எனப்பல உள்ளன. மனம் என்னும் நூலை எங்களால் சரியாக வாசிக்கத் தெரிந்தால், நாங்கள் தொழில்நுட்ப நூல்களைத்தவிர வேறு எந்த நூலையும் வாசிக்கத்தேவையில்லை. ஆனால் நாங்கள் எங்களிடமிருந்தும் எங்களது செயற்பாடுகளிலிருந்து கற்பதில் ஏனோ தயக்கம் காட்டுகின்றோம். இதனாலேயே எங்களது ஒவ்வொரு செயற்பாட்டிற்கும், உலகில் நடைபெறும் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும்  நாங்களே பொறுப்பு என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. நாங்களே உலகம் உலகமே நாங்கள்.

என்னுடைய வீடு ஒழுங்கீனமானதாகவும் , அசுத்தமாகவும், தாறுமாறாகவும் இருக்குமானால் அதனைப் பூமியிலிருக்கும் எந்தவொரு குருவாலும் சுவர்க்கத்திலிருக்கும் எந்தவொரு குருவாலும் - தேவதையாலும் ஒழுங்குபடுத்தமுடிளாது. சுத்தப்படுத்த முடியாது. அதுபோலவே எனது விரதத்தாலும், சபதத்தாலும், பக்தி பூசைகளாலும் அந்த ஒழுங்கைச் செய்ய இயலாது.

நாம் சிந்திக்கும் முறையும், நாம் வாழும் முறையும், நாம் செயற்படும் முறையும் ஒழுங்கற்றே உள்ளது என்ற யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒழுங்கில்லாத மனத்தால் ஒழுங்கைக் காணுவது என்பது முடியாத காரியமாகும். முனத்தால் - எண்ணத்தால் உருவாக்கப்படும் சடங்காலும் மரபாலும் ஒழுங்கைக் கொண்டுவர இயலாது. தியானிப்பதற்கு மிகவும் பெரிய ஆற்றல் தேவை. ஆற்றலை ஆற்றல் இல்லாக்குவது உராய்வு. எமது தவறான சிந்தனைகளாலும் வாழ்க்கை முறைகளாலும் நாம் ஒவ்வொரு கணமும் எமது உளவியற் சக்தியை சிதறடித்துக் கொண்டும் விரயமாக்கிக் கொண்டும் இருக்கின்றோம். எமுள் இருக்கும் ஆக்க பூர்வமான சக்தியை வெளிக்கொண்டு வருவதே தியானம். நாங்கள் கடைப் பிடிக்கும் சடங்குகளையும் ஆச்சாரங்களையும் புனிதமானவை என்று சொல்லுவதன் மூலம் எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றேம. ஏனெனில் அவையாவும் எண்ணத்திதன் கண்டுபிடிப்புகளே எண்ணத்தால் படைகப்பட்டவற்றைப் புனிதமானவை என எங்களை நம்பவைத்துக் கொண்டிருப்பதும் எண்ணமே. மனிதனுடைய எண்ணம் மனிதனை ஏமாற்றும் விந்தையிது.

உலகிலுள்ள சமயங்கள் யாவும் அவற்றின் அர்த்தத்தை அறவே இழந்துவிட்டன.  சுநடபைழைளெ என்ற பெயரடைச் சொல்லின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு அதனுடைய மூலச் சொல் தெளிவாக இல்லை. எந்த மனம் சகல விதமான பற்றுக்களிலிருந்தும், முடிப்புக்களிலிருந்தும், கோட்பாடுகளிலிருந்தும் முற்றுமுழுதாக விடுபட்டு, உண்மையாக என்றும் உள்ள நிலையைத் தானாக தன்னுள் சேமிக்க்கூடிய காணுகிறதோ, அந்தமனமே உண்மையான தரிசனத்தைத் தன்னுள் மலரவைக்கும் வல்லமைபெற்ற மனமாகும்.அந்த வல்லமைக்குத் தேவையான உளவியற் சக்தியை சேமிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற மனமே சநடபைழைளெ மனமாகும்.அந்த மனத்தாலேயே காலத்தைக் கடக்கமுடியும்.

அரசியல்வாதியின் மனத்திற்குள் அரசியல் குடியிருக்கும். குடும்பத்தலைவியின் மனத்திற்குள் அடுத்தவேளை சாப்பாட்டிற்கு என்ன உணவைச் சமைப்பது என்ற எண்ணம் குடியிருக்கும். வணிகனுடைய மனத்திற்குள் இலாப நட்ட கணக்கு இருக்கும். ஞானி ஒருவரது மனத்திற்குள் கடவுள், வழிபாடு என்பவை குடியிருக்கும். எமது மனங்களுக்குள் எல்லா நேரங்களிலும் ஏதாவது குடியிருந்து கொண்டேயிருக்கும். இதன் காரணமாக மனிதமனத்தில் வெளி (space) இருப்பதில்லை. வெளியென்றால் வெறுமைதானே?. வெறுமையில் (emptiness) தான் அமைதி உள்ளடங்கியிருக்கும். இந்த வெறுமையிலிருக்கும் அமைதிக்குப் பெரிய ஆற்றல் இருக்கும். இந்த வெறுமையில் - அமைதியில் தான் வெளி இருக்கும், பிரபஞ்சத்தில் உள்ள வழக்கு மீறிய பொது நிலை கடந்த பொதுமுறை விலக்கான – பொது அளவு கடந்த – வியக்கத்தக்க மா பெரிய சக்தி எம்முள் இருக்கும் அமைதியில் இருக்கும்.  பிரபஞ்சத்தின் இருப்புக்குக் காரணம் - ஏது – காரண விளக்கம் கிடையாது. ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டுமே காரண விளக்கங்களில் ஈடுபட்டுள்ளோம்.

வறுமைக்கான காரணத்தை நாம் காணலாம். சுனத்தொகைப் பெருக்கத்திற்கான காரணத்தை நாம் காணலாம். மனித இனம் எதற்காகச் சமய ரீதியாகப் பிரித்திருக்கின்றார்கள் என்றகாரணத்தை நாம் காணலாம். மனித இனம் எதற்காகச் சமய ரீதியாகப் பிரித்திருக்கின்றார்கள் என்ற காரணத்தை நாம் கண்டுபிடிக்கலாம். இப்படி எல்லா வற்றிற்கான காரணங்களை கண்டுபிடிக்க எங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதேயன்றி, காரணமாம் நிலையிலிருந்து – காரணகாரிய தொடர்பிலிருந்து விடுபட மட்டும் எங்களால் முடியாதிருக்கின்றது. ஏங்கள் செயற்பாடுகள் யாவும் ஏதாவது ஒரு வெகுமானத்தையோ தண்டனையையோ அடிப்படையாக கொண்டவையாகவே இருக்கின்றன. ஆகவே எங்கள் செயற்பாடுகள்யாவும் ஏதாவது காரண விளக்கத்தைக் கொண்டவையாகவே இருக்கின்றன.காரணம் இல்லாத பிரபஞ்சத்தின் ஒழுங்கைப் புரிந்து கொள்வதற்கு, எங்களால் காரணம் இல்லாமல், எங்களது நாளாந்த வாழ்க்கையை எங்களால் வாழமுடிகிறதா?.அப்படி வாழமுடியுமானால் அதுவே உயர்வான ஒழுங்காக அமையும்.அந்த ஒழுங்கில் (order) நாம் ஆக்கசக்தியை (creative energy)ப் பெறுவோம்.அந்த ஆக்க சக்தியின் விடுப்பே தியானம் (meditation) ஆகும்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 03 May 2024 17:19
TamilNet
HASH(0x559953654310)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 03 May 2024 17:19


புதினம்
Fri, 03 May 2024 17:19
















     இதுவரை:  24855377 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1801 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com