அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 27 July 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow மகரந்தம் arrow ஓ மாமனிதனே
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஓ மாமனிதனே   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஹீரா பன்ஸோடெ  
Wednesday, 18 May 2005

ஒ மாமனிதனே
உனது பாதையில் முட்களைத் தூவியவர்கள்
இன்று உனக்கு மலர்களை வழங்குகிறார்கள்
உனது புகழ்பாடுகிறார்கள்
- à®‡à®¤à¯ என்ன விநோதம்
காலத்தின் இருண்ட ஊர்வலத்தின் போது
நீ விளக்கு மலர்களை ஏற்றினாய்
ஆனால் அந்த நடிப்புப் போலிகள், அந்தக் கொடியவர்கள்
அந்த மலர்களை நசுக்கி அணைத்தனர்
இன்று அந்த மலர்கள் ஒரு காட்டுத்தீயாய் மாறியுள்ளன
அந்தக் கொடியவர்கள் அதற்குக் காற்று வீசி வளர்க்கின்றனர்
- à®‡à®¤à¯ என்ன விநோதம்
ஒரு கோட்டைக் கதவை உடைத்தெறியும் யானையைப்போல
கோயில் கதவை நீ பலமாகத் தட்டினாய்
கோயிலின் கற்கள் அதிர்ந்தன
மதம் என்ற புனிதப் பெயரின் கீழ்
அவர்கள் நெடுங்காலத்திற்கு முன்பே
கடவுள்களை அடிமைப்படுத்தி விட்டனர்
கடவுள்களைக் காண வேண்டும் என்ற
உனது நேர்மையான, வேதனை மிக்க கோரிக்கை
நசுக்கப்பட்டுத் தூக்கியெறியப்பட்டது
கிராமத்திற்கு வெளியே.
இப்போது அவர்கள் அந்த இடத்தில்
முளைத்து வளர்ந்த பெரிய மரத்தை அலங்கரிக்கிறார்கள்
- à®‡à®¤à¯ என்ன நியாயம்.

இயற்கை எல்லார்க்கும் சொந்தமானது
என்பதைச் சொல்லத் தேவையில்லை
ஆனால் அவர்கள் அதையும் வாங்கிவிட்டார்கள்
சவ்தார் குளத்தின் ஒவ்வொரு சொட்டு நீரிலும்
அவர்கள் தங்கள் முத்திரையைக் குத்திவிட்டனர்
இந்தக் கலாச்சாரத்தின் எச்சரிக்கை மிகுந்த காவலாளி
சிறைப்பிடிக்கப்பட்ட தண்ணீரைப் பாதுகாத்தான்
நீ தொட்டால் தண்ணீர் நஞ்சாகிவிடும் என்று
அவர்கள் அஞ்சினார்கள்
நீ தாகத்தால் செத்துக் கொண்டிருந்தபோது
உன்னுடைய ரத்தத்தால் உனக்குத் திருமுழுக்காட்டினர்
இப்போதோ அவர்கள்
கல்லில் வடித்த உன் கொடும்பாவியின் வாயில் தண்ணீர் ஊற்றுகிறார்கள்
- à®‡à®¤à¯ என்ன நியாயம்

 

(அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளன்று, ‘தலித்துகளின் வாக்கு வங்கிகள’; என்ற ஒரே ஒரு நினைப்புடன் மட்டும் அவரது சிலைக்கு மாலையணிவிக்கும் சடங்குகளை மறக்காது செய்கின்றனர். ஆதிக்க சாதிக் கட்சித் தலைவர்கள். அது மட்டுமல்ல, மாலை அணிவிப்பதிலும் கூட ‘முதல் மரியாதை’ தங்களுக்குத்தான் வேண்டும் என்று நிலப்பிரத்துவ எசமானர்கள் போலத் தங்கள் அதிகாரத் திமிரையும் காட்டிக் கொள்கிறார்கள். சென்ற 14.4.2002 அன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்று  மராத்தியப் பெண் கவிஞர் ஹீரா பன்ஸோடெவின் கவிதையை நினைவூட்டியது. அதன் விளைவே இத் தமிழாக்கம்.; மராட்டிய மாநிலம் மஹட் நகரிலுள்ள சவ்தார் குளத்திலிருந்து குடி தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக 1927 டிசம்பரில் அண்ணல் அம்பேத்கர் நடத்திய சத்தியாகிரகப் போராட்டம்தான் அவரை அனைத்திந்திய அளவில் தலித்துகளின் ஒரே ஒப்பற்ற தலைவராக ஆக்கியது. ஹீரா பன்சோடெவின் மராத்தியக் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள் : ஜெயந்த் கார்வே, எலியானர் ஜெல்லியோட்.
ஆங்கிலம் வழி தமிழாக்கமும் குறிப்பும்
:

எஸ்.வி. ராஜதுரை.

நன்றி : Culture,Religion and Society, CISRS, Bangalore, 1996

 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 27 Jul 2024 05:32
TamilNet
HASH(0x55cdcd715110)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 27 Jul 2024 04:33


புதினம்
Sat, 27 Jul 2024 04:33
















     இதுவரை:  25425568 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3986 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com