தனது சாதனையை 4-08-2004 தொடக்கம் 6-08-2004 வரையிலான 53 மணி நேர உலக சாதனையை மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தமிழரான செல்வன்-துஸ்யந்தன் இதனை முறியடிக்கும் வகைகயில் 9 மணி 15 நிமிடங்கள் கூடுதலான நேரமெடுத்து பழைய சாதனை முயற்சியை முறியடித்து புதிய உலக சாதனையாளராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இவரின் ஆரம்ப கால சுரத்தட்டு இசை ஆசிரியராக திரு மகேஸ் ஆசிரியர் இருந்துள்ளார். அவரிடம் முறையாகப் சுரத்தட்டு இசையை பயின்றார். அத்துடன் யேர்மன் பாடசாலையிலும் இதை ஒரு பாடமாகப் பயின்று இன்று ஒலி இசைத்துறையில் உயர் படிப்பை மேற்கொண்டுவருகிறார்.
தனது கல்வியை யேர்மன் மொழியில் பயின்றாலும் தற்போது தமிழ் ஆங்கிலம் டொச் மொழிகளை எழுத பேச வாசிக்க ஆற்றல் படைத்துள்ளார்
இவரின் இந்த உலக சாதனை வெற்றி பெறுவதற்கு இவரின் பெற்றோரின் பெரு முயற்சியும் முக்கிய காரணமாகும். இவர் சாதனை முயற்சியில் ஈடுபட இராட்டிங்கன் நகர அரச அரசசார்பற்ற தாபனங்களும் யேர்மன் பத்திரிகைள் தொலைக்காட்சிகள் வானொலிகளும் யேர்மனிய மக்களும் துருக்கிய மக்களும் நிறைந்த ஆதரவு கொடுத்து உதவினார்கள். ஆனால் நமது தமிழ் மக்களின் ஆதரவு குறைவாக இருந்தது.
இவரது முயற்சிகளாக:
1.யேர்மனி, சுவீஸ்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளில் பல பாடல் போட்டிகளில் கலந்துகொண்டதுடன் பல பரிசுகளையும் வென்றுள்ளார்.
2.பல இசைக்குழுக்களுடன் சேர்ந்து இசை அமைத்துப் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்
3.தானே மெட்டமைத்துப் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.
4.எட்டுப் பாடல்கள்கொண்ட அழகே!..அழகே!.. என்ற இசைப் பேழையை வெளியீடு செய்துள்ளார்.
5.சுவீஸ் நாட்டில்; தேசிய மட்டத்தில் நடைபெற்ற சுவீஸ் பொப் ஸ்ரார் (