எழுதியவர்: அப்பால் தமிழ்
|
|
|
Saturday, 30 April 2005
பெயர்: டாக்டர் கிக்கோ ஆர். ருசாந்தன் தொழில்: விலங்கியல் மருத்துவர் பிறந்த திகதி: 30.12.1972 முகவரி: 569, பார் வீதி, மட்டக்களப்பு
மறந்துபோன அல்லது மறக்கப்பட்ட அனைத்து வடிவங்களையும் திரும்பத்திரும்ப நினைவுக் கொண்டுவருவதும் அடையாளங்களை மீள நிர்மானிப்பதுமே எனது நோக்கம் எனக் கூறும் ஓவியர் கிக்கோ ஈழத்துச் சூழலில் பரவலாக அறியப்பட்டவர் தவிர ஈழத்து ஓவிய உலகில் தனக்கென தனியானதொரு அடையாளத்தையும் பெற்றிருப்பவர். இவரது இயற்பெயர் ருசாந்தன். தொழில்ரீதியாக இலங்கை நிர்வாக சேவைiயில் பணியாற்றும் இவர் எவரது வழிகாட்டலும் இன்றி தனது சுய தேடலின் ஊடாக ஓவிய உலகில் காலூன்றியவராவார். தீவின் பலபகுதிகளிலும் குழுவாகவும் தனிநபராகவும் பல்வேறு ஓவியக் கண்காட்சிகளை நடாத்தியுள்ளார். இவரது ஓவியங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல தனிநபர்களிடமும், அமைப்புக்களிடமும் சேகரிப்பில் உள்ளன.
இவர் சமீப காலமாக நிகழ்வோவியம், ஒழுங்கமைப்பு ஓவியம் போன்ற பிற ஓவியச் செற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஓவியர் "கிக்கோ"வின் ஓவியங்கள் |