எழுதியவர்: த. அஜந்தகுமார்
|
|
|
Monday, 21 March 2005
என் உள்ளங்கைகளிரண்டுக்குள்ளும் ஒளிக்கீற்றொன்றைச் சிறைப்பிடித்திருந்தேன் ஒளி வியாபகமாயிருந்த ஏதோவொரு கணப்பொழுதுள் ஒளிக்கீற்றினைச் சிறைப்பிடித்திருந்தேன் அப்போது உள்ளங்கைகளைத் திறந்து பார்த்தேன் உள்ளே ஒளி வசித்துக்கொண்டிருந்தது. ஒளி களவுபோன இந்தப் பொழுதில் உள்ளங்கைகளை விரித்தேன்ää வெளிச்சம் இல்லா வெறுமை. என் உள்ளங்கை வெளிச்சத்துக்கு என்ன நடந்தது? இருளைச் சபித்து எனது நாள்கள் நகர்கின்றன..... |