எழுதியவர்: தெரிதல்
|
|
|
Sunday, 13 March 2005
நல்ல திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு யாழ்ப்பாணத்தில் (பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தில் தவிர) அரிதாகவே கிடைக்கிறது, மாறாக பொதுப்புத்தியையும் கலை உணர்வையும் அவமதிக்கும், 'மசாலாத் தமிழ்ப் படங்களே' எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன.
உலகின் பல இடங்களில் பாராட்டைப் பெறுமளவிற்கு வளர்ச்சிகண்டுள்ள சிங்களப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அரிதிலும் அரிது!
இச்சூழலிலேயே சென்ற மார்கழி 18 - 19 ஆம் திகதிகளில், யாழ். ப.நோ.கூ. சங்கக் கேட்போர் கூடத்தில், 'சினி யாத்ரா -2' திரைப்பட விழா நடை பெற்றது. 'திரிகோனே கலை மையம்' ஒழுங்குசெய்த இவ்விழாவில் -'மில்ல சொயா', 'பவுறு வளளு', 'சுளங் கிரில்லி' 'அக்னி தாஹய' ஆகிய நான்கு படங்கள் காட்டப்பட்டன, இவை ஏற்கெனவே சில உலகத் திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றவையாகும்.
புகழ்பெற்ற திரைப்பட - நாடக நெறியாளரும், நடிகருமான தர்மசிறி பண்டாரநாயக்காவின் நம்மீதான அக்கறையே இதைச் சாத்தியமாக்கியது, கலை ஆர்வலர்கள் நன்றியுடன் அவரைப் பாராட்டுகின்றனர். |