அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 27 March 2023

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 7 arrow சி.வி.வேலுப்பிள்ளையின் தீர்க்கதரிசனம்!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சி.வி.வேலுப்பிள்ளையின் தீர்க்கதரிசனம்!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சாரல்நாடன்  
Sunday, 13 March 2005

மலையகத்தின் ஆற்றல் மிகுந்த இலக்கிய வாதிகளுள் சி.வி.வேலுப்பிள்ளைக்கு (1914 - 1984) தனியானதோர் இடமுண்டு.

சி.வி.வேலுப்பிள்ளைஇருபது வயதில், இலங்கைத்தீவின் புகழ்மிகுந்த 'நாளந்தா'வில் கல்வியில் தனது கடைசியாண்டைப் பூர்த்திசெய்துகொண்டிருந்த 'சி.வி.', இலங்கைக்கு வருகைதந்திருந்த கவியரசர் தாகூரின் பார்வைக்கு, தான் படைத்த  Vismadgenee என்ற 64 பக்கங்களில் அமைந்த ஆங்கில நாடகத்தைக் கையளித்தார்.

கவியரசர் தாகூர், நோபல் பரிசு பெற்ற தகுதியுடன், உலகப் பெருங்கவிஞராகக் கருதப்பட்ட ஒருகாலத்தில், சி.வி.வேலுப்பிள்ளை தன் ஆங்கில நூலை அவரிடம் சமர்ப்பித்து அவரது வாழ்த்துக்களைப் பெறநேர்ந்தது உண்மையில் அவருக்குக்கிடைத்த ஒரு அரிய வாய்ப்புதான். தாகூர் தன் பயணத்தில் டபிள்யூ.ஏ.சில்வாவின் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி பம்பாய்க்குப் போய்வந்ததும், அதன் பின்னரே சிங்களப் பெண்கள் இந்தியச் சேலையில் நாட்டம் கொண்டதுவும் நடந்தன என்பதை, டி.ஆர்.விஜேவர்தனாவின் வாழ்க்கைச் சரித்திரத்தில் காணலாம்.

தாகூர்வயமாகியிருந்த உலகில், மலையகத்தைச் சார்ந்த 'சி.வி.'யும், முதலில் 'விஸ்மாஜினி' என்ற நாடகத்தையும் (1934), பின்னர் ‘Way Farer’ என்ற கவிதைத் தொகுதியையும் (1949) வெளியிட்டது, உண்மையில் அவர் கருத்தூன்றிக்கைக்கொண்ட கவிதைக் கன்னியின் வெளிப்பாடாகும்.

ஐம்பதுக்குப்பின்னர் அவருக்கு ஜோர்ஜ் கீட்டுடன் அறிமுகம் ஏற்படுகிறது. சாம்ராஜ்ய நாடுகளில் முதன்மையிடம் வகிக்கும் ஓர் ஓவியரும் கவிஞருமாவார் அவர். “அவரது ஆலோசனைகளைக் கேட்டதன் பின்னால், மலைநாட்டு மக்கள்ää அவர்களது சுகதுக்கம், பழக்கவழக்கம், நாடோடிப்பாடல்கள் போன்றவற்றில்” தான் ஈடுபாடு கொண்டதாக 'செய்தி' பத்திரிகையில் (09.05.1965) அவர் எழுதிய 'மலையக இலக்கியக் கணிப்பு' கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினராக 1947இல் தெரிவான 'சி.வி.' 1948இல் நடைமுறைப் படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் தன் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமையைஎண்ணி மனங் குமுறினார். ஜோர்ஜ் கீட்டின் அறிவுறுத்தலால் 'In  Ceylon’s  Tea  Garden' நூல் (1952) பிறந்தது, அது அவரின் புகழை அகிலமெல்லாம் எடுத்துச் சென்றது.

நாடாளுமன்றம் புகுந்து உறுதிமொழி எடுத்தபோது, “இந்தநாட்டில்தான் நான் பிறந்தேன், இங்குதான் என் கண்கள் ஒளியைத் தரிசித்தன, இறுதியில் என் கண்கள் மூடப்போவதும் இங்குதான்” என்று (ஹன்சாட் - தொகுதி 1 - 1947) அவர் கூறியிருப்பது, தன் சமூகத்துக்கு, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளிலிருந்து இந்தநாட்டில் மெது மெதுவாக வியாபித்துவருகிற இனத்துவேஷத்தையும்; முப்பதுகளிலிருந்து வேர்விட்டு வளர ஆரம்பித்த இந்தியத் துவேஷத்தையும் உள்வாங்கிக் கொண்டதால்தான் என்பதை, இலங்கையில் இந்திய வம்சாவளியினரிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை - ஏதோ ஒரு காரணத்தால் மீண்டும் அளிக்கப்பட்ட காலத்தில் (1948 - 1988) நடந்தவைகளை, தீர்க்கதரிசனத்துடன் கவிஞரான அவர் உணர்ந்திருந்ததால்தான் என்பதை இன்று நம்மால் கூறமுடியும்.

இப்படி ஒரு எதிர்வுகூறலைத் தமது பதவிப் பிரமாணத்தில் எடுத்துக்கூறிய வேறொரு தமிழரை நம்மால் இதுவரையில் காண முடியாதிருக்கிறது, ஏனென்றால், 'சி.வி.' 1984 இல் அமரராகிவிட்டார்.

'சி.வி.' பொருள் வளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தமையால், தம் இளம் வயதில் ஆங்கிலக் கல்வியில் சிறப்புற்றார், ஆங்கிலத்தில் கவிபுனைந்து பேர் பெற்றார், தன் எழுத்துக்களை ஆங்கிலத்திலேயே வடித்தார்.

1956இல் இலங்கையில், சுதேசக் கலைகளுக்கு புத்துயிர்ப்புத் தரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கேற்ப அவரும் தம்படைப்புகளைத் தமிழில் தருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அதை அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டார் என்பதற்கு அவர் தமிழிலே எழுதி வெளியிட்ட 'வீடற்றவன்', 'இனிப்படமாட்டேன்' நாவல்களும், தமிழ்ப்படுத்தி வெளியிட்ட 'வாழ்வற்ற வாழ்வு' நாவலும் சான்றாக இருக்கின்றன.

அவர் கவிஞராகவே இன்னும் நினைவுபடுத்தப்பட்டாலும், நல்லதொரு நாவலாசிரியராகவும் இன்று வரையில் விளங்குகிறார் என்பதே அவரது பெருமை.

“நூறாண்டு காலமாய்
 à®¨à¯à®´à¯ˆà®¨à¯à®¤ இவ்விருட்டை
 à®µà¯‡à®°à¯‹à®Ÿà®´à®¿à®•்க
 à®Žà®©à¯à®¤à®®à®¿à®´à¯ மக்கள்
 à®•ூறுவர் சிகர
 à®‰à®šà¯à®šà®¿à®¯à®¿à®²à¯ ஏறிக்
 à®•ூறுவர் திடல்கள்
 à®¯à®¾à®™à¯à®•நு மடுக்கவே
 à®µà®¿à®Ÿà¯à®¤à®²à¯ˆà®•் குரலது
 à®µà¯†à®±à¯à®±à®¿à®•் குரலது
 à®µà¯€à®°à®•்குரலது
 à®µà®¿à®°à¯ˆà®¨à¯à®¤à¯†à®´à¯à®®à¯ கேட்பீர்!"

- சி.வி.
  (தேயிலைத் தோட்டத்திலே)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 27 Mar 2023 15:54
TamilNet
HASH(0x55baa86d41d0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 27 Mar 2023 15:54


புதினம்
Mon, 27 Mar 2023 15:54
















     இதுவரை:  23460476 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1893 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com