அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 26 April 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 7 arrow இலக்கியச் சிற்றேடுகள்: வரத்தும் போக்கும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இலக்கியச் சிற்றேடுகள்: வரத்தும் போக்கும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: செம்பியன் செல்வன்  
Sunday, 13 March 2005

இலக்கியம்காலந்தோறும் தேச, சமூக வேறுபாடுகளின்றித் தாம் வாழும் சூழலின் அரசியல் பொருளாதார சமூக நடப்புகளின் மீது தாம் கொண்டிருக்கும் விமர்சனப் பார்வையினூடாக எழும் திருப்தியற்ற சீற்றத்தின் விளைவாகப் புதிய புதிய அல்லது அத்தியாவசியத் தேவையான சிந்தனை வெளிப்பாடுகளை எல்லாத்துறைகளிலும் பரவவிடும் இளைஞர் கூட்டம் எழுவது சமூக நியதியாகியுள்ளது. சமூக அக்கறையும், தார்மீகக் கோபமும் இதன் உந்துசக்தியாகின்றன. பணமோ, பக்கபலமோ கவனத்தில் கொள்ளப்படாத மனநிலைத் தருணங்கள், செயல்நிலை முனைப்புக்கள்.

இவர்கள் தங்களின் இலக்கியப் பிரகடனங்களாக, பத்திரிகைப் பிரகடனங்களாக சஞ்சிகையின் வெளியீட்டுக் காலங்களைப் பயன்படுத்தும் யுக்தியைப் பெற்றிருந்தனர். 1970 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வெளிவந்த கசடதபற - ஒரு வல்லின மாத ஏடு. 1972 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளிவந்த - பரந்தாமனை ஆசிரியராகக்கொண்ட - 'அஃ' ஒரு முக்கண் மாத ஏடு. இவ்வேடுகளில் சமூக, கலை, இலக்கியப் பண்பாட்டியக்கங்கள் முக்கிய அங்கம் வகித்தன. இவைமட்டுமின்றி உலக இலக்கியப் பரிச்சயமும் தேசியப்பண்புகளினடியாகப் பிறக்கும் சமூக விழுமியங்களும் படைப்பு மனநிலையை நிர்ணயிப்பதும் புலனாகின்றது. இந்நிலையில் மீள்பார்வையும் உலக இலக்கியம் சார்ந்த ஒப்பியல் ஆய்வும் ஒன்றுகலப்பது புதிய இலக்கிய அலைகளின் வீரியத்தையும், புதிய இலக்கிய வரவுகளையும் கொணர்கின்றன. பாரதியின் “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்பது இந்தப் புதிய வரவுகளையே சுட்டிநிற்கின்றது.

வரலாற்றுரீதியாக சிற்றேடுகளின் வரவுகளையும் அவற்றின் பிதாமகர்களையும் நோக்கும்போது, அவர்கள் இலக்கிய அக்கறைகொண்டவர்களாகவும், அதற்காகவே உடம்பெடுத்தவர்களாகவும் விளங்குவதைக் காணலாம். க.நா.சு. - இலக்கியவட்டம், வல்லிக்கண்ணன் - 'கிராமமோஹினி' கிராம ஊழியன், சாந்தி - சிதம்பர ரகுநாதன், சரஸ்வதி, சமரன் - விஜயபாஸ்கரன், சி.சு. செல்லப்பா - எழுத்து, எம். வி. வெங்கட்ராம் - சந்திரோதயம், விந்தன் - மனிதன், ரத்னம் - பரிமாணம், ஞாநி - தீம்தரிகிட, சதங்கை - வனமாலிகை, உதயம் - அஷ்வகோஷ், சிவாஜி - திரிலோகசீதாராம், நடை - கோ. கிருஷ்ணசாமி என்பன கஞ்சியில் காணப்படும் பயறு போன்ற எடுத்துக்காட்டுக்கள். இவர்கள்மூலம் இலக்கியத்தின் பொறுப்பையும் அக்கறையையும் உணரமுடிகிறது. ஆனால், ஜனரஞ்சக ஏடுகளின் போக்கோ மிக மோசமாகி வருவதை நாம் ஒப்புநோக்கவேண்டிய காலம் இது.

‘Best  கண்ணா Best’ என்ற விளம்பரக் கூக்குரலுடன் 'குங்குமம்' என்னும் மு.கருணாநிதியை (பராசக்தி) கொண்ட இதழ் 11,10,800 பிரதிகள் வாரந்தோறும் வெளியாவதாகக் கூறி - பொதுமக்களை ஏமாளிகளாகவும், மடையர்களாகவும் மாற்றிவருகிறது. பரிசுகளும் - இலவசங்களும், சூதாட்ட வெற்றிகளும், அடுப்படித் தட்டுமுட்டுச் சாமான்களும், பற்பசைகளும், தலைக்குளியல் 'சஷே'களும், சாம்போக்களும் கொண்ட'நாடார்கடை' ஓட்டை உடைசல் கழிவுகளுமே இலக்கிய வளர்ச்சி - இலக்கிய முயற்சி என வாய்கூசாது தொலைக்காட்சி, வானொலி மூலமாகப் பறைசாற்றி வரும் சூழலை நாம் எந்தளவுக்கு மனங்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே, தமிழ் இலக்கிய வளர்ச்சியின் போக்கு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் - இருக்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கும் சக்தியுடையவர்களாவோம். குங்குமத்தைப் பார்த்து ஆனந்தவிகடன்கூட 'புதுமை கண்ணா புதுமை' எனப் பாடத்தொடங்கியுள்ளது. இனி என்ன? எல்லாரும் சேர்ந்து நாமும் பாடுவோம்:

“Waste கண்ணா Waste”


1970 ஆம் ஆண்டு 'கசடதபற' முதலிதழில் ஞானக்கூத்தன் ஒரு கவிதை எழுதினார்:

 â€œà®µà®¾à®šà®©à¯ மகனுக்கென்றால் மட்டும்
 à®…ச்சுப் பொறிகள் அடிக்குமோ?
 à®®à¯à®¤à¯à®¤à¯à®šà¯à®šà®¾à®®à®¿ போன்றவர் சொன்னால்
 à®®à®¾à®Ÿà¯à®Ÿà¯‡ னென்று மறுக்குமோ?
 à®•à®¾à®šà¯à®•à®³à¯ ரெண்டு கையிலிருந்தால்
 à®Žà®¤à¯ˆà®¯à¯à®®à¯ எங்கும் நிறுத்தலாம்
 à®•à®¾à®šà¯ படைத்தவன் தமிழைக்
 à®•à¯Šà®£à¯à®Ÿà¯à®ªà¯‹à®¯à¯
 à®Žà®™à¯à®•à¯†à®²à¯à®²à®¾à®®à¯‹ நிறுத்தினான்.”

இச்சிற்றேட்டின் ஆசிரியர் நா.கிருஷ்ணமூர்த்தி, இவருடன் துணை நின்றவர்கள் சா.கந்தசாமி, ஞானக்கூத்தன், ந.முத்துசாமி, வெங்கட் சாமிநாதன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர். இவர்களின் முயற்சிகள் பிற்காலத்தில் 'பிரக்ஞை' போன்ற இதழ் (இது சீனச் சார்புடையது) ஒரு இலக்கியக் குடும்பத்தின் முயற்சியாக வெளிவரக் காரணமாயின. து.ராமமூர்த்தியின் மகன்களான ஆர்.ரவீந்திரன், ஜெயபாரதி, மனைவி சரோஜாராமமூர்த்தி, மருமகன் சுப்ரமண்யராஜு ஆகியோரால் 1974 ஆம் ஆண்டில் 'பிரக்ஞை' வெளிவரத் தொடங்கியது.

கசடதபற முதலிதழ் முன்னுரையில் நா.கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு எழுதினார்: “இன்றைய படைப்புகளிலும், அவற்றைத் தாங்கிவருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும், அதனால் கோபமும் உடைய பல இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஒவியர்கள், திறனாய்வாளர்களின் பொதுமேடைதான் கசடதபற.... இலக்கியத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களைப் பற்றிக் கவலையில்லை. இலக்கியரொட்டியின் எந்தப் பகுதியில் வெண்ணெய் தடவப்பட்டிருக்கிறது என்று ஆராய்பவர்களைப் பற்றிக் கவலையில்லை. இலக்கியத்தை வாழ்க்கையின் அநுபவப் பகிர்தலாக முன்னோட்டமாகக் கருதுபவர்கள் எல்லோரையும் அழைக்கிறது கசடதபற.”

ஈழத்தில் மறுமலர்ச்சி, ஆனந்தன்ஈ ஈழகேசரி பத்திரிகைகள் தோன்றவும் இலக்கிய அம்சங்களை எந்தளவிற்கு கொண்டமைய வேண்டும் என்பதற்கும் - சி.வைத்திலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன் போன்றோரின் எழுத்துக்களை வடிவமைப்பதற்கும் பின்னாளில் அ.செ.முருகானந்தம், எஸ்.டி.சிவநாயகம், தாளையடி சபாரத்தினம் போன்றோர் பத்திரிகை ஊடகங்களில் ஈடுபடவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்துத் தினசரிகளின் ஞாயிறு பதிப்புகள் இலக்கிய அக்கறையுடன் வெளிவரவும் - அக்கால தென்னிந்திய சிற்றேடுகள் முன்மாதிரியாக விளங்கின.

இந்த முன்மாதிரிகள் அரசியல் கட்சிப் பத்திரிகைகளிலும் காணப்பட்டன. தேசாபிமானி, புதியபாதை, செம்பதாகை, தாயகம், ஜனவேகம் - இப்பத்திரிகைகள் சில காலகதியில் கட்சியில் தோன்றும் கருத்துப் பிளவுகளால் வலுவிழந்தும் மறைந்தும் போயின.

குமரன், கலைச்செல்வி, இளம்பிறை, மரகதம், விவேகி, சிரித்திரன், அலை, அஞ்சலி, மலர், சமர், வயல், அமிர்தகங்கை - என்பன இலக்கியப் போராட்டத்தில் தன்முனைப்புக் கொண்ட எழுத்தாளர்களால் எழுந்து தம்மளவில் பணிபுரிந்தவை. இன்று மாற்றமுற்றுவரும் அச்சுத்தொழில், கணினிவருகை புதிய புதிய வடிவங்களிலும் உடனடித்தேவைகளையும் பூர்த்திசெய்யும் இலக்கிய உருவ, உள்ளடக்கங் களைக்கொண்டு வருகின்றன. 'தெரிதல்' மட்டக்களப்பிலிருந்து வெளியாகும் 'மறுகா' முக்கியமாயினும் இவற்றின் முன்னோடி யாழ்ப்பாணத்தின் 'ஆத்மா' ஆகும்.

இச்சிற்றேடுகள், சில முக்கிய பண்புகளைக் கொண்டுள்ளன.

1. தோன்றியவுடனேயே பலத்த விமர்சனங்களுக்கு ஆளாவது.

2. எழுதும் எழுத்தாளர்களும் விமர்சனங்கட்கு ஆளாவது.

3. நோக்கங்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுவது.

4. எழுத்தாளர்களிடையே பிரிவினை தோன்றுவது.

5. இதில் - எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் வெகுஜன - ஜனரஞ்சக - வியாபார கவர்ச்சிப் பத்திரிகைகளால் விலைக்கு வாங்கப்பட, இச்சிற்றேடுகள் நாளடைவில்மறைந்து போவது, (உ-ம்) ஜெயகாந்தன் ஆனந்தவிகடனால் வாங்கப்பட்டமை.

6. வியாபார பத்திரிகைத்தாபனங்களே இலக்கியச் சிற்றேடுகளின் மாதிரிகளில் 'அலி'ப்பிறப்பில் வாசகர்களை மழுங்கடித்து, சிற்றேடுகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பது.

7. எழுத்தாளரின் புதிய விடயத்தில் முடிவு எய்துங்கால், பத்திரிகை நின்றுபோவது.



கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 26 Apr 2024 13:03
TamilNet
HASH(0x5650c48dd3d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 26 Apr 2024 13:03


புதினம்
Fri, 26 Apr 2024 13:03
















     இதுவரை:  24814429 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9293 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com