அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 13 June 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 7 arrow இரண்டு கவிதைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இரண்டு கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சண்முகம் சிவலிங்கம்  
Sunday, 13 March 2005

மாயவிளக்கும் மந்திரக் கோல்களும்

மாயவிளக்கு
தவத்தின் வலிமையால் கிடைத்தது
சுரண்டியபோது
புதிய உலகம் சுடர்ந்தது

நெடுஞ்சாலை திறந்தது
கொட்டு கொட்டென்று
கொட்டிற்று ஜிம்கானா
சிறகு முளைத்தது
திசைகள் விரிந்தன
கடல் விமானங்களும் கரையை தொட்டன
ஹெலிகொப்டர்கள் பறந்தன கீழும் மேலும்.

தேவர் உலகிலும் ஆசனம் கிடைத்தது
திருமாலும் சிவனும் கைகுலுக்கினர்
சகுனி மாத்திரம் சறுக்கிக் கொண்டான்
வலிமையின் தவத்தால் வாய்த்த விளக்கை
உயர் கொம்பு சாத்தான்
உடைக்கப் பார்க்கிறான்.

மந்திரக்கோல் ஒன்றை
மேசையில் வைத்துள்ளோம்
மடியில் உள்ளன மற்றைக் கோல்கள்
இவையெலாம் கண்டு
ஆப்பிழுபட்ட குரங்கு
அலறித் துடிக்கிறது. 

- 2003


தீக்கனா

நான் வளர்த்த கிளி
பருந்தாகி பறந்தது காண்.

எனது அர்ஜுனன்
தேரைவிட்டிறங்கி
குரு ஷேத்திர
தெருவில் நடந்தான் காண்.

எனது அபிமன்யூவை
கௌரவர்கள்
தமது அணியில்
மாலைபோட்டு வரவேற்றுக் கொண்டார்கள்.

பாண்டவர்கள் தமக்குள்
பகைப்போர் முடிப்பதற்கு
ஆள் தேர் அணியுடன்
அலைந்தனர் காண் அஸ்தினாவில்

மலை முகட்டில் தந்தை
மகன் வருவான் என
தாடி வளர்த்து
தலை நரைத்து போனார் காண்.

நான் வரைந்த காவியத்தின்
நடுப்பக்கம் கரியாகி
போனது காண்....போனது காண்....
போனது காண்....போனது காண்....

தீக்கனா கண்டு
திடுக்கிட்டு
கண் விழித்த நள்ளிரவில்
என் ஆக்காண்டிப் பறவையிதோ
விண் முழுவதும் கதறி
வேகிறதே....வேகிறதே ....

- 2004


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 13 Jun 2024 11:10
TamilNet
HASH(0x559bca814d40)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 13 Jun 2024 11:10


புதினம்
Thu, 13 Jun 2024 11:10
     இதுவரை:  25114892 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5569 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com