அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 27 July 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 7 arrow ஒரு வாசகனின் குறிப்புகள்...
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு வாசகனின் குறிப்புகள்...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பா. துவாரகன்  
Sunday, 13 March 2005

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கட்கு,

வந்தனம்!

'தெரிதல்' - ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் வெளிவந்துள்ள ஆறு இதழ்களினூடாகப் பார்க்கையில், ஒரு விடயம் தெளிவாகின்றது, தெரிதல் - ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் காலத்தின் கண்ணாடியாக, குவிவாடியாக (குவிவாடி: தொலைவில் இருந்து வரும் சமாந்தர ஒளிக்கதிர்களை ஓரிடத்தில் குவியச்செய்யும்) விளங்குகின்றது என்பதே அது.

நூல்வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள்; யாழ். பல்கலைக்கழக வாராந்த திரைப்படக் காட்சிகள், மறைந்த எழுத்தாளர் - கலைஞர் அஞ்சலிக் குறிப்புகள்; 2003 சாகித்திய மண்டலப்பரிசு (இதழ்-1), 2004 சாகித்திய மண்டலப்பரிசு (இதழ்-6)... என்றவாறு அனைத்தும் வரலாற்றுப் பதிவாகின்றன! பேணத்தகுந்த ஆவணம் - 'தெரிதல்'!

ஆறு இதழ்களினதும் பிரதான செய்திகளைப் பார்க்கையில் (முதற்பக்கம்), “வடக்கில் நாடகம் காட்டியபோது தமிழ்மக்கள் இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை”, “தமிழரே தமிழை ஒதுக்கலாமா?” (என்னிலும், நண்பனிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.), “தெளிவான எல்லைக்கோடு” (தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்தும் சக்திகளை இனம் காட்டியது), “மலையகத் தமிழர்மீதான தாக்குதல்” (நியாயமான கரிசனை), “பணத்திற்காக கலையில் விபச்சாரம்: இசை நாடகம் வளர்ச்சியடையவில்லை!”, “சமத்துவம் இல்லையேல் சமாதானம் சாத்தியமில்லை” ஆகிய தெரிவுகள் - சிறிய பகுதியாயினும் செய்திகளின் ஆழம் முக்கியத்துவமானதே, மேலும் இவை சிந்தனைக்குரியன.

மொழிபெயர்ப்பு நூல்களை அறிமுகப் படுத்தி, ஜனரஞ்சகப் போலிகளை அடையாளம் காட்டி - முறையே செம்பியன் செல்வனும் இராகவனும் நல்நோக்கோடு எழுதுகின்றனர். இலங்கையில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்ற தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்தும் (ஒருசில விதிவிலக்குகள் உண்டு.) 'தமிழ் சினிமா எமது கலாசாரத்தை அழிக்கின்றது' என்ற செய்தியை - கட்டுரைகளை எழுதிக்கொண்டு, நடுப்பக்கத்தில் வர்ணத்தில் அரைநிர்வாணப்படங்களையும், ஆரோக்கியமற்ற குப்பைகளையும் தருகின்றபோது... 'தெரிதல்' மட்டுமே தமிழ் சினிமாவை வெளிப்படையாக விமர்சித்து, மறுபுறம் நல்ல சினிமாவை அறிமுகப் படுத்துகின்றது (எனது இன்னொரு நண்பரான மருத்துவரும் இதே கருத்தினைத் தெரிவித்துள்ளார்).

'படிப்பகத்'தைப் பார்க்கின்றபோது, ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் நிறையப் புத்தகங்கள் வெளிவருவதை அவதானிக்க முடிகின்றது.

ஆறு இதழ்களினதும் உட்பக்கக் கட்டுரைகளைப் பார்க்கையில், விரிவுரையாளர் செ.திருநாவுக்கரசு எழுதிய, 'காலத்தை வென்ற கானக்குயில் ஜிக்கி' எனக்கு முதலாவது இடத்தில் தெரிகின்றது. இதற்கு ஆசிரியரின் எளிமையான மொழிநடையும், கட்டுரை அமைப்பும் ஒரு காரணம், ஜிக்கி பற்றி நான் அதிகம் அறியாமல் இருந்ததுங்கூட காரணமாகலாம். “தந்தானைத் துதிப்போமே”, “சின்னப் பெண்ணான போதிலே...” போன்ற பாடல்களிற்கு ஜிக்கியின் குரலினிமையே வலுவூட்டியது என்பதனைத் தெரிதலைப் படித்தபின்பே (6ஆவது இதழ்) அறிந்துகொள்ள முடிந்தமை மகிழ்ச்சி ஏற்படுத்துகின்றது! இரண்டாவதாக 'உச்சாலியா' (புத்தக வாசல்வழி) இடம் பிடித்துள்ளது, மொழியும் கட்டுரை அமைப்பும் கவர்கின்றன (5 ஆவது இதழ்).

மொத்தத்தில் நேர்த்தியான தளக்கோலமும், அதிகமான கலை இலக்கியத் தகவல்களும் - தெரிவும் நல்லனவற்றை அறிமுகப்படுத்தி போலிகளை அம்பலமாக்குவதும் (சக்தி ரி.வியின் போலித்தனம்), செய்திகளினூடே தரும் அரசியலும், ஐந்து ரூபாய்க்குக் கிடைப்பதும் தெரிதலின் வெற்றிக்கான தூண்கள் என்றே கூறவேண்டும்! 

பா. துவாரகன்
ஏழாலை.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 27 Jul 2024 10:34
TamilNet
HASH(0x56243eed6d80)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 27 Jul 2024 10:34


புதினம்
Sat, 27 Jul 2024 10:34
















     இதுவரை:  25427323 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4726 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com