அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 03 October 2023

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 7 arrow நன்றியுடன் - 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு ...'
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நன்றியுடன் - 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு ...'   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Sunday, 13 March 2005
தெரிதல்"நான் சொல்கிறேன் என்பதாலேயே நீ ஏற்றுக்கொள்ளாதே; உன் பகுத்தறிவினால் நான் சொல்வதையெல்லாம் கேள்விக்கு உரியதாக்கு; உனக்கு நீயே ஒளியாக இரு!" - புத்தர்


இந்த ஏழாவது இதழுடன், இரண்டாம் ஆண்டில் ‘தெரிதல்’ கால்பதிக்கிறது.

“புதிய வாசகரை - குறிப்பாக இளைஞர்களைச் சென்றடைந்து அவர்களுடன் தொடர்பாடல் செய்யும் முயற்சி.

கலை - இலக்கியத் தகவல்களை, இரசனையை, விமர்சனப் பார்வையை வழங்கி புதிய வாசகர்களாக, விழிப்புநிலை கொண்டவர்களாக உருவாக்கும் ஓர் எத்தனம்.
 ...சமூக உணர்வுடனும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடனும் எமது இந்தப் பயணம் தொடரும்” என முதலிதழிற் குறிப்பிட்டதற் கமைவாகச் செயற்பட்ட நிறைவு இருக்கிறது, அவ்வப்போது பலரும் வெளிப்படுத்திய கருத்துக்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன.

எதிர்பாராதவகையில், இரண்டாவது இதழிலிருந்து இரண்டாயிரம் பிரதிகள் அச்சிட இயலுமானது. இலங்கையில் பல இடங்களிலும் - மூன்று விற்பனை நிலையங்கள் தவிர -ஆர்வலராலேயே விநியோகிக்கப்படுகிறது. பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், கனடா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும் செல்கிறது, 'அப்பால் தமிழ்' இணையத்தளத்திலும் (http://www. appaal- tamil. com) வெளியாகிறது.
 
தனிமனித உழைப்பல்ல - பலரின் கூட்டு முயற்சியே இதனைச் சாத்தியமாக்கியது, இணைந்த அனைவருக்கும் நன்றிகள்.

எனினும் எதிர்மறைத் தாக்கங்களும் உள்ளன. அதிகரித்த தபாற்செலவு - அச்சுச் செலவு, சுனாமி விளைத்த அனர்த்தம் என்பன 'தெரிதலை'யும் பாதிக்கின்றன, 50 பிரதிகள் வரை மட்டக்களப்பில் விநியோகித்துதவிய ஆசிரியை சியாமளாவும் வாசகரான மாணவர் பலரும் பலியாகியுள்ளனர்.

தமிழ்த் தேசியவாதிகளைக் கொச்சைப்படுத்தி வரும் 'புதிய பூமி' என்னும் இடதுசாரிப் பத்திரிகை 'நோட்டீஸ்' எனக் கிண்டல்(!) பண்ணுகிறது, பொய்களையும் எழுதுகிறது. இன்னுமொருபுறம், தமிழ்த் தேசிய அரசியற் சார்புநிலை காட்டும்(!) 'பத்திரிகையாளன் - எழுத்தாளன்' என்னும், சில சுயநலமிகள் மேற்கொள்ளும் மறைமுக இடைஞ்சல்கள் (எதிர்மறைகளின் ஒற்றுமை!)...
இவை போன்றவற்றை எதிர் கொண்டபடியேதான் “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்ற எமது கவிஞனின் கூற்றிற்கிசைவாகத் 'தெரிதல்' உங்களிடம் வருகிறது!

'தெரிதல்' இல் வெளியாகும் விடயங்களிற்கு சன்மானம் வழங்கப்படுகின்றது. கட்டுரைகள், குறிப்புகள், கவிதைகள், சிறிய கதைகள் வரவேற்கப்படுகின்றன. ஆக்கங்கள் கையெழுத்தில், A - 4  அளவு தாளில் இரண்டு பக்கங்களுக்குள் அமைதல் வேண்டும். 'படிப்பகம்'  பகுதியில் வெளியிடவேண்டுமானால் நூலின் ஒரு பிரதியை அனுப்பவேண்டும்.

ஆறு இதழ்களுக்கான சந்தா ரூபா 50. அனைத்துக் காசுக்கட்டளைகளும் அ. யேசுராசா என்ற பெயரில், வண்ணார்பண்ணை அஞ்சலகத்தில் மாற்றும் வகையில் எடுக்கப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

'தெரிதல்'
இல. 1, ஓடைக்கரை வீதி,
குருநகர், யாழ்ப்பாணம்.

 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 03 Oct 2023 11:50
TamilNet
HASH(0x55a366c11760)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 03 Oct 2023 11:03


புதினம்
Tue, 03 Oct 2023 11:50
















     இதுவரை:  24070741 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5014 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com