அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 03
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 03   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Sunday, 27 February 2005

3.

முல்லைத்தீவுக்குத் தென்புறமாகக் கிடக்கும் அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருந்த தண்ணிமுறிப்புக்குளம் மிகவும் பழமையானது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன், அக்ரபோதி என்ற மன்னனினால் வெட்டிக் கட்டப்பட்டிருந்த இக் குளத்தின்கீழ் ஒரு காலத்தில் பலநூறு ஏக்கர் நிலங்கள் வயல்களாகச் செழித்திருந்தன. பெரியதொரு கிராமமே இந்தக் குளத்தையண்டி இருந்தது. காட்டுக் காய்ச்சல் காரணமாகவும், அந்நியர் ஆதிக்கத்தில் குளங்கள் புறக்கணிக்கப்பட்டதனாலும் அந்தக் கிராமம் அழிந்தொழிந்து போயிற்று. முன்பு செந்நெல் கொழித்த வயல்களில் மீண்டும் பாலையும், வீரையும் பலவகை மரங்களும், செடிகளும் மண்டி வளர்ந்தன. காடு மூடிக்கொண்டது. நாளடைவில், சிதைந்துபோன குளக்கட்டைப் பெரியதொரு காட்டாறு முறித்துச் சென்றதனால், தண்ணிமுறிப்பு என்று பெயர்பெற்றுத் தற்போது அழைக்கப்படுகின்றது.

கதிராமனுடைய தந்தையான கோணாமலையரே முதன் முதலில் தண்ணிமுறிப்புக்கு வந்து குடியேறியவர். அச் சமயத்திற்றான் குளத்தைப் புனருத்தாரணம் செய்யும் வேலைகள் ஆரம்பித்திருந்தன. கோணாமலையர் ஒரு முன்கோபி! பிடிவாதக்காரர்! அவருடைய சகோதரர்கள் அவருக்குச் சேரவேண்டிய சொத்தை அபகரித்துக் கொண்டார்கள் என்ற ஆத்திரத்தில், வண்டியைக் கட்டிக்கொண்டு கைக்குழந்தையாயிருந்த கதிராமனையும், மனைவி பாலியையும் அழைத்துக்கொண்டு தண்ணிமுறிப்புக்குப் புறப்பட்டு வந்தவர் அவர்.

சிறந்த உழைப்பாளியான அவருக்குக் காடுவெட்டிக் கழனியாக்கவும், மாடுகட்டிப் பலன்பெறவும் வெகுகாலம் எடுக்கவில்லை. அவருடைய மனைவி பாலி தண்ணீருற்றில் பிறந்தவள். கோணாமலையருடைய ஆக்கேராஷமான முன்கோபத்திற்கு ஈடுகொடுத்து நடக்கும் அவளுடைய ராசியினாற்றான் மலையருக்கு மனைவிமக்கள், மாடுகன்று முதலிய செல்வங்கள் பெருகியதென்பர்.

குளக்கட்டையடுத்த ஒரு மேட்டுநிலத்தில் மலையரின் வீடு அமைந்திருந்தது. மாலும், மாட்டுக் கொட்டகையும், நெல்போடும் கொம்பறையுமாக விளங்கியது அவருடைய மனை. வீட்டைச் சுற்றிச் செழிப்பான தோட்டம். அவருக்கு வேண்டிய புகையிலை முதல் காய்கறிவரை அங்கு தங்கமாக விளையும். தோட்டத்தை ஒட்டியிருந்த இரு வேறு அடைப்புக்களுக்குள் பசுக்கன்றுகளும் எருமைக்கன்றுகளும் துள்ளி விளையாடும்.

பொழுது புலருமுன் மலையர் வீட்டில் மத்தின் ஓசை கேட்கும். பாலியார் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு ஆடை நசிக்கும் அந்த வேளையில் கோணாமலையர் எழுந்து சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கதிராமனுடனும், அவனுக்கு அடுத்தவனான மணியனுடனும் அன்றாட வேலைகளில் இறங்கிவிடுவர். கடைக்குட்டி ராசு காலம் பிந்திப் பிறந்தவன். அவனுக்கு இப்போ ஏழு வயது. இருப்பினும் தகப்பனுக்கும் தமையன்மாருக்கும் உதவியாக இருப்பான்.


000

வளவுக்கு எதிரே பாதையின் மறுபக்கத்தில் இருந்த வயலில் களளை பிடுங்கிக் கொண்டிருந்த கதிராமனின் தம்பி ராசுää வண்டில் வருவதைக் கண்டதும் வரம்பில் ஏறித் துள்ளிக் குதித்துக்கொண்டு, வண்டிலை நோக்கி ஓடினான். வழக்கமாக கும்மாளம் அடித்துக்கொண்டு ராசுவை வம்புக்கு இழுக்கும் பதஞ்சலி அமைதியாகக் காணப்பட்டது அவனுக்குப் புதினமாக இருந்தது. வண்டிலை நெருங்கியதும் கதிராமனுடைய தோளில் போடப்பட்டிருந்த கட்டைக் கண்டான்.

'மூத்தண்ணையின்ரை கையிலை காயம்! கறடி விறாண்டிப் போட்டுதாம்!" என்று உரக்கக் கத்திய ராசுவின் குரல் கேட்டு, பாலியார் படலையைத் திறந்;துகொண்டு, வண்டிலடிக்கு வந்தாள். பின்னால் கோணாமலையரும் நின்றுகொண்டிருந்தார். நிலைமையை அறிந்தபின் இருவரும் ஆறுதலடைந்தனர்.

'ஏதோ குருந்தூர் ஐயன்ரை துணையிலை இண்டைக்குத் தப்பீட்டியள்!" என்று மகிழ்ந்துகொண்ட பாலியார் மறுபடியும் பதஞ்சலியையும், வளர்ச்சியடைந்திருந்த அவளுடைய உடலையும் கவனித்தாள். என்றுமே அவளுக்குப் பதஞ்சலியின்மேல் கொள்ளை ஆசை! தனக்கொரு பெண் இல்லையே என்ற குறையைப் பதஞ்சலி தண்ணிமுறிப்புக்கு வந்தபின்தான் அவள் மறந்திருந்தாள்.

'உமாபதி! இனிமேல் இவளைக் கண்டபடி காடுவழிய திரியவிடாதை! பக்குவப்படுற வயசிலை அங்கை இஞ்சையெண்டு போகவிடாதை!" என்றாள். பாலியார் கூறியதைக் கேட்ட பதஞ்சலிக்கு முகம் ஓடிச் சிவந்துவிட்டது. ';அப்பு! நான் வளவுக்குப் போறன், நீ வாணை!" எனக் கூறிவிட்டு பதஞ்சலி அங்கிருந்து தன் குடிசையை நோக்கி ஓடினாள்.

உமாபதியார் முரலிப்பழச் சாக்கைத் தலையில் ஏற்றிக்கொண்டே கோணாமலையரிடமும், பாலியாரிடமும் விடைபெற்றுக் கொண்டார். அவருடைய தலையை முரலிப்பழச் சுமை அழுத்தியது. அதைவிடää பாலியார் குறிப்பிட்ட விஷயம் தனக்கிருக்கும் பெருஞ்சுமையை அவருக்கு உணர்த்தியது.

இவ்வளவு காலமும் பதஞ்சலிக்குத் தாயும் தந்தையுமாகவிருந்து வளர்த்துவிட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர், எட்டே வயதான பதஞ்சலியுடன் அவர் தண்ணிமுறிப்புக்குக் குடிவந்தார். இப்போ அவளுக்குப் பதின்மூன்று வயது. பதினைந்துக்குரிய மதமதவென்ற வளர்ச்சி! அவளை உரிய பருவம்வரை வளர்த்து, ஒருவனுடைய கையிற் பிடித்துக் கொடுக்கும்வரை தனக்குள்ள பொறுப்பை நினைத்து நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டே தலையிற்; சுமையுடன் நடந்தார் உமாபதியர். வயதேறிய காரணத்தினால் உடல் சற்றுத் தளர்ந்திருந்தாலும், அவர் நடையில் உறுதியும்ää வேகமும் இருந்தன. அப்பு! அப்பு! என்று  தன்னை வாஞ்சையுடன் சுற்றிவரும் தன் பேத்தி பதஞ்சலியை நினைக்கையில்ää கூடவே  அவளுடைய தாயின் ஞாபகமும் ஓடி வந்தது. மகள் முத்தம்மாவையும் அவளுடைய அவச்சாவையும் எண்ணிய அவருடைய விழிகள் கவலையினால் கலங்கின.

(வளரும்)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Apr 2024 23:22
TamilNet
HASH(0x55bf353deea8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Apr 2024 23:30