அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 26 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 02
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 02   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 21 February 2005

(இருவாரத்திற்கு ஒரு முறை இத்தொடர் புதிப்பிப்பதாக எம்மால் அறிவிக்கப்பட்ட போதும் நோக்கர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது வாரம் ஒருமுறை புதிப்பிக்கப்டுகின்றது என்பதை அறியத் தருகின்றோம்.)

2. 

மண்ணை வாரி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு வந்த கரடி, பின்னங்கால் இரண்டிலும் எழுந்து காடே அதிரும்படி அதட்டியது.

இந்தச் சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த கதிராமன், கண் இமைக்கும் பொழுதுக்குள் தனது பலமனைத்தையும் ஒன்றுகூட்டிக் கரடியின் நெற்றிப்பொட்டு வெள்ளையில் கோடரியினால் ஓங்கியடித்தான். அணுவளவும் இலக்குத் தப்பாத அந்த அசுர அடியைத் தாங்கமுடியாமல் கரடி நிலத்தில் சரிந்தது. அவ்வேளையிலும் அது தனது முன்னங்கால்களை நீட்டி இறாஞ்சியபோது, கூரிய நகங்கள் கதிராமனுடைய வலது தோள்பக்கம் ஆழமாகப் பிய்த்துவிட்டன. அதைச் சற்றும் சட்டை செய்யாமல் கதிராமன் சாய்ந்துபோன கரடியின் தலையில் மீண்டும் ஓங்கியடித்தான். அவனுடைய மூன்றாவது அடியை வாங்கிக்கொள்வதற்கு கரடி உயிரோடு இருக்கவில்லை. குப்புற வீழ்நதுவிட்ட அதன் வாயினூடாகக் குருதி கொப்பளித்தது.

காட்டை ஒருதடவை சுற்றி அவதானித்த கதிராமன் பதஞ்சலியின் பக்கம் திரும்பினான். பயத்தினால் விக்கித்துப்போய் விழிகள் பிதுங்க அவள் நின்றுகொண்டிருந்தாள். 'என்ன பதஞ்சலி! பயந்து போனியே?" என்றவாறு அருகில் சென்று அவன் கேட்டதும், பதஞ்சலி அப்படியே அவனுடைய மார்பில் சாய்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். நடுங்கும் அவளுடைய உடலைத் தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு, 'இதுக்கெல்லாம் அழுறதே!" என்று அவளின் முதுகை வருடிக்கொண்டு தேற்றினான் கதிராமன்.

அவனுடைய கைகளின் அணைப்பிலே ஆதரவு நிறைந்த பாதுகாப்பிலே சொல்லமுடியாத ஒரு நிம்மதியையும் சுகத்தையும் கண்டாள் பதஞ்சலி! அவளுடைய அழுகை அடங்கிச் சற்று நேரத்தின் பின்னர்தான் கதிராமனுடைய தோளில் ஏற்பட்ட காயம் அவளின் கண்களில் பட்டது. பதறிப்போய் அவனுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு 'ஐயோ! நல்லாய் விறாண்டிப் போட்டுது! கொஞ்சம் பொறுங்கோ சீலையாலை கட்டிவிடுறன்!" என்றவாறு குனிந்து தன் பாவாடையின் கரையைச் சரேலெனக் கிழித்தாள்.

சற்றுமுன் பயத்தால் துவண்டு குழந்தையைப்போல் வெம்பிய அவளை மறுபடியும் பழைய பதஞ்சலியாகப் பார்க்கையில் கதிராமனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது.  அங்கு நின்ற முடிதும்மைச் செடியைப் பிடுங்கிக் கசக்கி கதிராமனுடைய காயத்தின்மேல் வைத்து பாவாடையில் இருந்து கிழித்த துண்டால் பதஞ்சலி மளமளவென்று கட்டினாள். பம்பரம்போல் சுழன்று காரியம் செய்வதில் அவளுக்கு இணை அவளேதான்!

பதஞ்சலி எட்டு வயதுச் சிறுமியாக உமாபதியாருடன் தண்ணிமுறிப்புக்குக் குடிவந்த காலந்தொட்டு அவள் அடிக்கடி கதிராமன் வீட்டுக்கு வந்து போவாள். அவன் என்றுமே அவளைக் கூர்ந்து கவனிக்கச் சந்தர்ப்பம் எழவில்லை. இன்று இருண்ட காட்டின் நடுவே ஒரு பயங்கர ஆபத்தின் விளிம்பில் அவள் தன்னுடைய மார்பில் முகம் பதித்து வெம்பியபோதுதான் கதிராமனால் பதஞ்சலியைப் பதஞ்சலியாகக் காணமுடிந்தது. தண்மை நிறைந்த அவளுடைய சிவந்த கைகளினால் அந்த முரட்டுக் கரங்களைத் தூக்கிப் பிடித்துக் காயத்துக்குக் கட்டுப் போடுகையில் அவள் அவனுக்கு மிகவும் அண்மையில் இருந்தாள். எருக்கும்பியில் முளைக்கும் தளதளவென்ற செங்கீரையின் குளிர்மை நிறைந்த அவளுடைய ஸ்பரிசம் அவனுக்குப் புதியதோர் அனுபவம்!

பரபரவென்று கட்டைப் போட்டுவிட்டு நிமிர்ந்தவள் தன்னையே ஊன்றி நோக்கும் தீட்சண்யம் நிறைந்த அவனுடைய விழிகளைச் சந்தித்தாள். அவன் முகத்தில் சதா தவழும் அந்த இளமுறுவல்! 'உங்களுக்கு கொஞ்சமெண்டாலும் பயமில்லையே?" என்று வியப்புடன் கேட்ட பதஞ்சலியைப் பார்த்து அவன் கடகடவென்று நகைத்தபோது அவனுடைய கரிய முகத்தில் உறுதியான வெண்பற்கள் பளிச்சிட்டன. 'வாருங்கோ அப்புவிட்டைப் போவம்! அது பாவம் என்னமாதிரிப் பயந்துபோச்சுதோ!" என்று கூறிவிட்டு பாதையை நோக்கி ஓடிய பதஞ்சலியைத் தொடர்ந்தான் கதிராமன். எதற்குமே பரபரப்படையாத அவன்ää நிதானமாக மீண்டும் காட்டைக் கூர்ந்து நோக்கியவாறே நடந்து கொண்டிருந்தான்.பதஞ்சலியைக் கண்ட உமாபதி பாய்ந்துவந்து கட்டிக்கொண்டார்.

 -வளரும்


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 26 Apr 2024 11:03
TamilNet
HASH(0x55b65eb4ccc0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 26 Apr 2024 11:03


புதினம்
Fri, 26 Apr 2024 11:03
















     இதுவரை:  24813840 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9068 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com