அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 07 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow அரங்கம் - கெளரவிப்பு - பரிசு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அரங்கம் - கெளரவிப்பு - பரிசு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Tuesday, 15 February 2005
மலையகக் கலைஞர் கௌரவிப்பு!

கொட்டகலை இலக்கியவட்டம் தனது மூன்றாண்டு நிறைவினைக் குறித்து ஒரு நிகழ்ச்சியை 2004.08.29 பௌர்ணமி தினத்தன்று, ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
சின்ன வயதில் ஜீவாவின் சிந்தனையில் முகிழ்ந்த சிறுவர் நாவல் 'திருந்திய அசோகன்' நூலறிமுகம் அன்று இடம்பெற்றது. மேலும், 'கலா பூஷணம்' விருது பெற்ற வூட்டன் இரா. à®….  இராமன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், மணிவிழாக் காணும் மலையக ஜீவா எனும் அந்தனி ஜீவாவின் இலக்கிய சேவையைப் பாராட்டும் நிகழ்வும் ஒருங்கே நடைபெற்றது.
கலைஞர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். வாழ்த்துரையை மொழிவரதனும், கல்வி வெளியீட்டுத் திணைக்கள உதவி ஆணையாளர் திரு. ஜெ. லெனின் மதிவாணமும் நிகழ்த்தினர்.
கவிஞர் சு. முரளிதரன், மூத்த எழுத்தாளர் சாரல்நாடன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




அகம் புறம்

சேது காண்பியக் கலைக்கான கற்கைப்புலமும், தீர்த்த சர்வதேசக் கலைஞர்களின் கூட்டிணைப்பும் இணைந்து 'அகம் - புறம்' என்ற சமகாலக் காண்பியக் கலைக்காட்சியை ஒழுங்குசெய்திருந்தது, யாழ். பொதுநூலகத்தில் புரட்டாதி 5 முதல் ஐப்பசி 5 வரை இது இடம்பெற்றது.
இதன் ஒழுங்கமைப்பாளரில் ஒருவரான தா. சனாதனன் இக்காட்சிபற்றிக் கூறுகையில், “எமது சமகாலப் போர் அனுபவங்களை எவ்வாறு காட்சிமொழியினூடு பகிரலாம் என்பதற்கு இது ஒருவகையில் விடை தருவதாகப்படுகிறது. எமது வெளிப்பாட்டுச் சூழலை மேலும் வலுவான இயங்குநிலைக்குக் கொண்டளுசெல்வதற்கும், உள்ளுரிலுள்ள இளங்கலைஞர்களுக்கு தங்களின் முன்னே விரிந்துகிடக்கும் சாத்தியப்பாடுகளைப் புரியவைக்கவும் இது உதவும்” என்றும் தெரிவித்தார்.



இந்திய அரங்கு

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில், நாடகத்துறையில் தனது மேற்படிப்பினை மூன்றாண்டுகள் மேற்கொண்ட செ. சுந்தரேஸ் அண்மையில் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார்.
'சமகால இந்திய அரங்குகளின் போக்கு - ஒரு அனுபவப் பகிர்வு' என்ற தலைப்பிலான உரையினை 22.09.2004 இல், யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் அவர் நிகழ்த்தினார். அதில் அவர் கூறிய கருத்துக்கள் சில:
“இந்தியா முழுவதற்குமான அரங்கு என்று இல்லை. தமிழகத்திலேயே வடபகுதிக்கும் தென்பகுதிக்கும் வேறுபாடு உண்டு. பிரதேச அரங்கு நூற்றுக்கணக்கிலுண்டு, அங்குதான் இந்திய ஆன்மா உள்ளது.
தமிழ்நாட்டில் 'கூத்துப்பட்டறை' ஆரம்பத்தில் கூத்தை வளர்ப்பதை நோக்காகக் கொண்டிருந்தது, இன்று நவீன நாடகங்களை மட்டும் போடுகிறது. வேலு சரவணனின் 'ஆழி' சிறுவர் நாடகங்களை மட்டும் போடுகிறது. 'கூட்டுக்குரல்கள்' குழு தலித் பிரச்சினைகளை மட்டும் பேசுகிறது. மங்கை, பிரஸன்னா ராமசாமி, நளாயினி ஆகியோர் பெண்ணிய அரங்கில் செயற்படுகின்றனர்.”   





இலக்கிய நோபல் பரிசு

2004 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்துறை நோபல் பரிசு, "எல்பிரைட் ஜெலினெக்" என்னும் பெண் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது; இவர் ஒஸ்திரியாவைச் சேர்ந்தவர்.
காதலியாகப் பெண் (1975), அற்புதமான காலங்கள் (1980), பியானோ ஆசிரியர் (1983) முதலிய நாவல்களை இவர் எழுதியுள்ளார்.




ஆளுநர் விருது - 2004

ஓவியர் மு. கனகசபை, விமர்சகர் கே. எஸ். சிவகுமாரன், எழுத்தாளர்களான குந்தவை - எஸ். எல். எம். ஹனிபா, ஒப்பனைக் கலைஞர் பி. ஸ்ரனிஸ்லாஸ், பதிப்பாசிரியர் வ. சிவசுப்பிரமணியம்ää நாட்டுக்கூத்துக் கலைஞர் அரியான்பொய்கை கை. செல்லத்துரை ஆகியோர் வடக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் விருதினைப் பெற்றனர்.
நாடகத்துறைக் கலைஞர் குழந்தை ம. சண்முகலிங்கம் விருதைப்பெற மறுத்துவிட்டார்.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 07 May 2024 10:23
TamilNet
HASH(0x559e37735ed0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 07 May 2024 10:23


புதினம்
Tue, 07 May 2024 10:23
















     இதுவரை:  24863222 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1477 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com