அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 07 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow பொதுப்புத்தியை வசூலிக்கும் மூன்று படங்கள் குறித்து..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பொதுப்புத்தியை வசூலிக்கும் மூன்று படங்கள் குறித்து..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கார்த்திகா  
Sunday, 13 February 2005

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எப்போதும் அவதானிக்கப்படும் பொதுஇயல்பு, ஒரு நடிகனுக்கான படிமத்தை (Image) அடிப்படையாகவைத்து கதைத்தயாரிப்புகளிலீடுபட்டு ஒரு சினிமாவை வெளிக்கொண்டு வருவதாகும். இவ்வியல்பே சந்தைப்பங்கைத் தீர்மானிக்கும் அல்லது மொத்தவருமானத்தைத் தீர்மானிக்கின்ற அம்சமாகவும் இருக்கின்றது. இங்கே பார்வையாளனின் பணத்துடன் பொதுப்புத்தியும் தன்னிச்சையாக வசூலிக்கப் படுவது குறிப்பிடக்கூடியது. அத்துடன், தனது பொதுப்புத்தி அவமதிக்கப்படுவதை அல்லது வசூலிக்கப்படுவதை எவ்விதத்திலும் உணர்ந்து கொள்ளாதவகையில் விரும்பத்தகுந்த பாலியல் சலனம், மர்மப்பாவனை, வேகச்சலனம், பாவனை உணர்ச்சி வெளிப்பாடுகள் எனும் நான்கு அம்சங்கள் சமவிகிதத்திலும் - தனித்தும், தேவைக்கேற்ப வெவ்வேறு விகிதத்திலுமான ஒரு சந்தைப்படுத்தல் கலவை (Marketing Mix)  அறிமுகப்படுத்தப்படுகிறது. இக்கலவையே பார்வையாளனின் எதிர்பார்ப்பாக்கப்படுவதால், எவ்விதத்திலும் தனது பொதுப்புத்தி அவமதிக்கப் படுவதை அவன் உணரச் சாத்தியமில்லை. இங்கே அறிமுகமான சந்தைப் படுத்தல் கலவையை, அண்மைக் காலங்களில் 'இந்தியாவிலும் இலங்கை யிலும் ஒரேதின வெளியீடாக' வந்திருக்கும் வசூல்ராஜா M.B.B.S., மதுர, அரசாட்சி ஆகிய மூன்று திரைப்படங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

வசூல்ராஜா M.B.B.S.

வசூல:ராஜாகதை - திரைக்கதை - யதார்த்தவாழ்வை எவ்விதத்திலும் பிரதிபலிக்காதது. அடாவடித்தனமாகää தனது கட்சிக்காரர்களுக்கு பணங்கொடுக்க வேண்டியவர்களிடமிருந்து வசூல் செய்யும் ராஜா தனது தந்தைக்கு தன்னை ஒரு M.B.B.S. ஆகக்காட்டிக்கொள்கிறான். அவன் உண்மையில் M.B.B.S. இல்லையென அவருக்குத் தெரியவர - அவனை வெறுத்தொதுக்கிப் பிரிந்துசெல்லும் தந்தையின் அன்பைப்பெற, கோமாளித்தனமாக அடாவடித்தனம் செய்து மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை மடக்கி நுழைவுப் பரீட்சை எழுதி மருத்துவக்கல்லூரிக்குள் நுழைந்து, கோமாளியாக வலம்வருகிறான்.

கதைத்தயாரிப்பு கமலஹாசனின் படிமத்தை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் செய்யப்பட்டுள்ளது, 'நிலைக்கப் போவது யாரு?' பாடல் காட்சியும், பதற்றத்தைக் குறைக்க ராஜா அறிமுகமாக்கும் 'கட்டிப்புடி' வைத்தியம் தொடர்பான காட்சிகளும், உச்சக்கட்டத்தில் பொது அரங்கில் மருத்துவப்பேராசிரியர் அதாவது மருத்துவக்கல்லூரி முதல்வரின் வினாவுக்கு போலி அல்லது மிகையுணர்வு வெளிப்பாடுகளுடன் (அநேக குளோஸ் - அப் காட்சிகளின் உதவியுடன்) ராஜா தத்துவரீதியாக விடையளிக்கும் காட்சியும் - கமலஹாசனுக்கு தமிழ்சினிமாவில் கட்டியெழுப் பப்பட்டுள்ள படிமத்தைபேண திணிக்கப்பட்டிருப்பவை. மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளியை ராஜா பொறுப் பெடுத்து பராமரித்துக் குணப் படுத்துவதாகவரும் காட்சிகளும் இந்நோக்கிலேயே திணிக்கப் பட்டவை.

பார்வையாளனுக்கு அவனது பொதுப்புத்தி வசூலிக்கப்படுவதை உணரச் சாத்தியமளிக்காத வகையில் திணிக்கப்பட்டுள்ள “விரும்பத் தகுந்த” பாலியல் சலனத்தை உண்டாக்கும் காட்சிகள் என்ற வகையில் “மன்மதராசா...” பாடல் பின்னணியில் கல்லூரி மாணவர்கள் பிருஷ்டங்களைக் குலுக்கிக் குலுக்கி ஆடுவதும், 'சிரிச்சு... சிரிச்சு வந்தா... சீனாதானா டோய்' பாடல் காட்சிக்கான அரைநிர்வாணப் பெண்களின் நடனமும், 'பப்பு' என்ற பெண் அறிமுகமாகும் காட்சியும், பத்மினியின் மார்பின் மீதிருக்கும் அவளது அட்டையை அவளின் பெயரைத் தெரிந்து கொள்ள ராஜா குனியும்போது அவன் தனது மார்பகங்களையே குனிந்து பார்க்கிறான் என அவள் கருதும் காட்சியும், அவளுக்கு ராஜா 'நான் பப்புவை ஜட்டியோட பார்த்திருக்கேன்' எனச்சொல்வதான காட்சியும் உள்ளடங்கும். மற்றும்படி இயல்பான உணர்வு வெளிப்பாடு என்று பார்த்தால் ராஜாவின் தந்தையாக வரும் நாகேசும், பத்மினியாக வரும் சிநேகாவும் குறிப்பிடக்கூடியவர்கள். இத்திரைப்படத்தின் கலை இயக்கம் குறிப்பிடக்கூடிய ஒன்று. படத்தொகுப்பு சாதாரணமானதே.

(வசனம் - கிரேஸிமோகன். இயக்கம் - சரண்)


மதுர

மதுரவிஜய் என்ற நடிகனுக்கு இருக்கக்கூடிய 'படிமத்தை' பேணும்வகையில் வெளிவந்திருப்பது 'மதுர' எனும் திரைப்படம். வசூல்ராஜா M.B.B.S. இல் இருந்த கதையின் ஒழுங்குத்தன்மைகூட மதுரவில் இல்லாத அளவுக்கு பலவீனமான கதைத் தயாரிப்பு. மதுரையில் நகராட்சி அலுவலராக சமூகவிரோதச் செயல்களை தடுத்து 'நீதி'யை நிலைநாட்டப் போராடும் நாயகனுக்கு உதவியாளராக இருந்துவரும் பெண் எதிர் நாயகனால் கொல்லப்பட, கொலைப்பழி நாயகன் மீதுவிழ, அவன் தன்னை மரக்கறி வியாபாரியாக உருமாற்றிக்கொண்டு கொலையுண்ட பெண்ணின் தாய் தங்கைகளுடன் சேர்ந்துகொண்டு அவர்களைக் காப்பாற்றிவருவதும் பின்னர் எதிர் நாயகனை பழிவாங்குவதுமான கதையோட்டம். கொலையுண்ட பெண்ணின் தாயை 'அம்மா' என்று அழைத்துக்கொள்கிற நாயகன் எவ்வாறு அவளின் குடும்பத்துடன் நெருக்கமானான் எனச்சொல்லப்படவில்லை. 90களில் வெளிவந்த 'சூரியன்' என்ற படத்தின் தழுவலாக மதுர வந்திருக்கிறது. ஆனால் சூரியனில் படத்தொகுப்பு சிறப்பாக இருந்தது. மதுரவில் படத்தொகுப்பு நேர்த்தியிழந்திருக்கிறது. பார்வையாளனின் பொதுப்புத்தியை வசூலிக்க கொலை, அதிரடிச்சண்டைகள், மர்மம் என ஒருவிதக் காட்சிக்கலவையும் “விரும்பத் தகுந்த” பாலியல் சலனத்தை ஏற்படுத்தும் விதத்தில் அவயவங்களை அசைக்கும் விதத்தில் மூன்று நாயகிகளின் சேர்மானமுமென இன்னொருவிதக் காட்சிக் கலவையும் இடம்பெறுகின்றது. 'மச்சான் பேரு மதுர', 'இலந்தைப்பழம் இலந்தைப்பழம் உனக்குத்தான்' ஆகிய இரு பாடல்காட்சிகளும் மூன்றாந்தரப் பார்வையாளனால் வேண்டப்படும் பாலியல் சலனத்தைப் பூர்த்தி செய்துகொள்ளவென்றே திணிக்கப்பட்டிருக்கும் காட்சிகள். அம்மாவாக வரும் 'சீதா', எதிர் நாயகனாகவரும் 'பசுபதி', மதுரவின் உதவியாளராக வரும் 'சோனியா அகர்வால்' ஆகியோரது உணர்வு வெளிப்பாடுகள் மட்டும் ஓரளவு இயல்பானவை. கலை இயக்கம் நடுத்தரமானது.

(கதை, திரைக்கதை, இயக்கம்: மாதேஷ்)

அரசாட்சி

அரசாட்சிஓடும் புகைவண்டியில் வைத்து, ஓய்வுபெற்ற ஒரு நேர்மையான நீதிபதி கொல்லப்படுகிறராம்! அந்தக் கொலைவழக்கில் ஒரு திறமையான வழக்கறிஞரின் வாதத் திறமையில் குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனராம். கொலையுண்ட நீதிபதியின் குடும்பத்தில் எஞ்சியிருக்கும் நாயகன், குற்றவாளிகளைத் தப்பவிடும் வழக்கறிஞர்களைப் பட்டியலிட்டு வரிசைக்கிரமமாக கொலைசெய்கிறானாம். செத்துப்போய்விட்டாள் என நம்பப்பட்டிருந்த நாயகனின் தங்கை, அவனது கொலைப் பட்டியலில் கொலை செய்யப்படுவதற்கு தயார்நிலையிலிருக்கும் ஒருவனின் மனைவியாக தோன்றுகிறாளாம்... இப்படிப்போகிறது பார்வையாளனின் பொதுப்புத்தியை வசூலிக்கும் 'அரசாட்சி' எனும் திரைப் படத்தின் கதையோட்டம்.

“---பேட்மேன், பேட்மேன் என்று சொல்லி விளையாட்டாகக் கொலைசெய்வதாகட்டும், அமெரிக்க தூதரகத்தில் மனித வெடிகுண்டு என புரளிகிளப்பி அதன்மூலம் கொலை செய்வதாகட்டும்... சபாஷ்போட வைக்கிறார் இயக்குநர். அதேநேரம், கிரிக்கெட் பந்தால் கொல்வது, உருவப்பொம்மைகளுக்கிடையில் இருந்து பறந்துவந்து கொல்வது போன்ற காட்சிகள் பொங்கல் நடுவில்கல்...” என நமது வாரஇதழ்கள் விமர்சனப் பிரசுரம் செய்து பூரித்துக் கொண்டிருக்க ஒரு நீதிவானாக, நாட்டுப் பற்றாளனாக எழுப்பப்பட்டிருக்கும் அர்ஜூன் என்ற நடிகனின் படிமத்தைப் பேணும் வகையில் வந்திருக்கும் மூன்றாந்தர சினிமாவாகவே 'அரசாட்சி' அடையாளப் படுத்தப்படுகிறது.'லாராதத்தா' நாயகியாக வருவது பார்வையாளனை வசீகரிக்கக்கூடிய முக்கியமான விடயம் - பாலியல் சலனத்தை “விரும்பத் தகுந்த” மட்டத்தில் அல்லது அதற்கு மேலாகப்பேண லாராதத்தாவின் அவயவங்கள் முக்கிய கருவிகளாக இயங்குகின்றன. நாயகியின் உதடு இதில் முக்கியமானது. கொலை, திகில், மர்மம் எனும் கலவையும் 'விரும்பத்தகு பாலியல் சலனம்' எனும் கலவையும் பார்வையாளனின் பொதுப்புத்தி வசூலிப்பில் முக்கியபங்கு வகிக்கின்றன. எதிர்நாயகர்களாகவரும் ரகுவரன், பி.வாசு, நாசர் போன்றோரிடம் ஓரளவு இயல்பான உணர்வு வெளிப்பாட்டைக் காணமுடிகின்றது. ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைகிறது. படத்தொகுப்பில் எதிர்பார்க்குமளவுக்கு நேர்த்தியில்லை.

(கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்:   à®®à®•à®¾à®°à®¾à®œà®©à¯)    

 

 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 07 May 2024 15:29
TamilNet
HASH(0x5598ec969638)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 07 May 2024 15:29


புதினம்
Tue, 07 May 2024 15:29
















     இதுவரை:  24863615 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1738 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com