அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 07 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow இந்த ஜனரஞ்சகப் போலி எழுத்தாளாகள்...
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இந்த ஜனரஞ்சகப் போலி எழுத்தாளாகள்...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ச.இராகவன்  
Sunday, 13 February 2005

(5 ) எண்டமூரி வீரேந்திரநாத்

போலி எழுத்தாளர்கள்ரமணிசந்திரனின் நாவல்களுக்கு இருப்பதைப் போன்றே, கன்னட ஜனரஞ்சக எழுத்தாளராக அறியப்படும் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதி சுசீலா கனகதுர்கா தமிழில் மொழிபெயர்த்து வரும் நாவல்களுக்கும் கணிசமான அளவில் பெண்வாசகிகள் இருந்து வருகின்றனர்.

இந்நாவல்கள் வெறும் பொழுதுபோக்குக் கருவிகளாகவும், உணர்வுகளை மலினப்படுத்துவதாகவும், பொதுப்புத்தியை அவமதிப்பனவாகவும் இருந்தாலும் உன்னதமான மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் எனும் மாயையை வாச(கி)கர் களுக்கு ஏற்படுத்தி வருவதால், சாதாரணமட்ட வாசிப்புச் சூழலில் ஓர் அபாயகரமான சமன்பாட்டை அறிமுகமாக்குகின்றன.

மர்மநாவல், சமூகநாவல் என வகைப்படுத்தி நோக்கக்கூடிய இவரது 'தயாரிப்புக்களின்' தலைப்புக்கள், வணிகமயப்பட்ட கவர்ச்சியைத் தருவனவாகும். எடுத்துக்காட்டுக்கள் சில: 'பாரீஸில் விபரீதம்', 'சிவதாண்டவம்', 'நாலாவது தூண்', 'மௌனப் போராட்டம்', 'இருள் நிலவாகிறது', 'ஒரு பறவையின் விடுதலை', 'இதயத்தின் வாசல்', 'ஆலமரத்து நிழல்', 'இரும்பு மனிதன்', 'தர்மயுத்தம்', 'கண்சிமிட்டும் விண்மீன்கள்', 'பர்ணசாலை', 'அக்கினிப்பிரவேசம்',  'மூன்றாம் ஆள்', 'மனைவி குணவதிசத்ரு', 'பனிமலை', 'புஸ்பாஞ்சலி', 'விலகியமேகம்', 'இதுதான் உன் கடைசி நேரம்', 'நச்சுவளையம்', 'வாழ்க்கைப்படகு', 'இன்னும் 23 நிமிஷங்கள்', 'கார்த்திகை தீபம்', 'விடிவெள்ளி', ',ப்ரொஃபசனல் கில்லர்', 'பெயர்பலம்", 'மீண்டும் துளசி', 'காகித பொம்மை', ',வெள்ளைரோஐா', 'எல்லைக்கோடு', 'நெருப்புக்கோழிகள்', 'வித்தியாசமான தண்டனை', 'நியாயத்தீர்ப்பு', 'ராஜமுத்திரை'.

இந்நாவல்களில் கையாளப்படும் மொழி ஐதானது: மேலோட்டமானது. இதில் எதுவித கலைத்துவ நேர்த்தியையும் எதிர்பார்க்கவியலாது. வாசிப்போர் பரபரப்படைவதும்ää திடுக்கிடுவதும், கண்ணீர்மல்கிக் கசிந்துருகுவதும், மனநிறைவடைவதுமே இக்கதைத் தயாரிப்புக்களின் பிரதான நோக்கமாக இருக்கின்றது. அதற்காக கொலை, கொள்ளை, வன்புணர்வு, சரசம் என என்னென்ன அம்சங்கள் தேவையோ அவையெல்லாம் சேர்க்கப்படுகின்றன. அநேகமாக பக்கங்களை அதிகமாக்கும் நோக்குடனேயே கதை தயாரிக்கப்படுகிறது. இதனால், கதை பொருத்தமில்லாத விதத்தில் தொடக்கப்படுகிறது. அதனால் வாசகர் வித்தியாசமான நல்ல இலக்கியத்தைப் படிப்பதான மாயையை தங்களையறியாமலேயே உருவாக்கிக் கொள்கின்றனர். உண்மையில், உணர்வுகளை மலினப்படுத்தும் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களான இவரது கதைத் தயாரிப்புக்களால் வாசகர் மனம் முதிர்வடைவதில்லை.

ஒரு மாதிரிக்கு இவரது 'ராஜமுத்திரை' எனும் தயாரிப்பை எடுத்துக்கொள்வோம். வாகீஸ்வரனின் கைக்கு வந்துசேரும் 'ராஜமுத்திரை' எனும் கலைநூதனப் பொருளை சுவிஸ் வங்கியில் உள்ள பெட்டகத்தில் வைத்து விடுகிறார். தமிழ்நாட்டில் வசிக்கும் அவர் குதிரைப் பந்தயத்தில் தனது பணம் முழுவதையும் இழந்துவிட்டு, தனது நண்பரின் உதவியுடன் தனது மகள் சந்தியாவுக்கு பின்உரிமம் காட்டும் கடிதத்தை எழுதுவித்து, கொன்டினென்டல் வங்கியில் உள்ள பெட்டகத்தை வாடகைக்கு எடுத்து வைத்துவிட்டு வரும்போது, வாகனம் மோதி இறந்துவிடுகிறார். பின்உரிமக் கடிதம் அந்த வங்கியின் பெட்டகத்தில் இருப்பது முக்கியமாக சந்தியாவுக்கு தெரியாது. இடையில் வேலைதேடி அலைந்து கிடைக்காது விரக்தியுற்ற அர்ஜூனன் என்பவன் கொள்ளையர் கூட்டத்தில் சேர்ந்து நிலக்கீழ் சுரங்கம் தோண்டி கொன்டினென்டல் வங்கியைக் கொள்ளையிடும் போது, பின்உரிமக் கடிதம் அவன் கையில் சிக்குகிறது. இந்நிலையில் 'ராஜமுத்திரை' 74 கிராம் தங்கத்தினால் ஆனது என்பதையறிந்த ராம்பிரசாத் என்ற மந்திரியின் கையாள் செரியனும் பிரதாப் என்ற மந்திரியின் கையாள் ஹரிராமும், வெவ்வேறு திசைகளில் ராஜமுத்திரையைக் கைப்பற்ற முயல்கின்றனர். காவல்துறை அதிகாரியாக வரும் செரியன் ராஜமுத்திரையைத் தேடிச் செல்கையில், சில பெண்களை வன்புணர்வுக்குள்ளாக்கிக் கொல்கிறான். இறுதியில் செரியன், ஹரிராம் இருவரும் கொல்லப் படுகின்றனர். செரியனின் கையாள் கனகராஜிடம் சிக்கும் ராஜமுத்திரை அவன் தீயில் கருகி இறக்க, அவனுடனேயே போய்விடுகிறது. அர்ஜூனனுக்கு வங்கியில் வேலைகிடைக்கிறது. ராஜ முத்திரையைப் பெற சந்தியாவுக்கு அவன் உதவியதில் இருவரும் காதலர்களாக... கதை முடிகிறது.

கன்னடத்தில் இருந்து மொழிபெயர்க்கப் படும் இந்நாவல்கள்(?) அப்பிரதேசங்களின் இயல்பு வாழ்க்கையை பிரதிபலிக்கவில்லை. அதன் கலை, கலாசாரம், பண்பாடு, விழுமியம் சார்ந்த எதுவித அடையாளப்படுத்தல்களையும் கொண்டிருக்கவில்லை. கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களை நீக்கி விட்டுப்பார்த்தால், தமிழ்வாணனின் கதைத் தயாரிப்புக்களுக்கும் இவரது கதைத் தயாரிப்புக்களுக்கும் மொழிக்கையாளலில் கூட எதுவித வேறுபாடும் இல்லை.
'ராஜமுத்திரை' தொடர்பான கதையில் சுவிஸ் வங்கியின் வரலாறு இவ்வாறாக கதையின் தொடக்கமாகிறது: “1938 ஆம் வருடம் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் அவ்வறைக்குள் நுழைந்தான். ஹிட்லரைப்பார்த்த சேனைத்தலைவர்கள் பணிவோடு எழுந்து நின்றார்கள்...” இத்தயாரிப்புக்கு எவ்விதத்திலும் இத்தொடக்கம் அவசியமற்றிருந்தபோதிலும், புதுமையை அறிமுகம் செய்வதாக வாசகருக்கு ஒரு மாயையை ஏற்படுத்த இவர் பிரயோகிக்கின்ற உத்தி இதுவாகவிருக்கின்றது. தவிரவும் “...அவள் பயந்துபோய் அவன் சொன்னபடி செய்தாள். அழுதுகொண்டே ஜாக்கெட்டை அவிழ்த்துப் பக்கத்தில் வைத்தாள். 'ஒரு நிமிசம்' - செரியன் கத்தியை அவள் மார்பிற்கு நடுவே பிராவிற்குக் கீழாய் நுழைத்து சட்டென்று மேலே இழுத்தான். பிரா பட்டென்று கிழிந்தது. கொஞ்சநேரம் அங்கே கண்கொட்டாமல் பார்த்தான்...” என்பதாக வாசகரின் உணர்வுகளை மலினப்படுத்தும் வரிகள் பக்கத்துக்குப் பக்கம் திணிக்கப்படுகின்றன.
நமது பொது நூலகங்கள் யாவற்றிலும் மிகுந்திருக்கும் எண்டமூரி வீரேந்திரநாத்தின் நாவல்கள் வாசிப்புப் புரள்வில் முன்னணி வகித்து வருகின்றன. இந்நிலையில்ää “இலக்கியம்” என்ற பெயரில் போதையூட்டும் இந்த வியாபாரக் குப்பைகள் தொடர்பான விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய செயற்பாடுகள் முனைப்புப் பெறவேண்டியது அவசியம்!          


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 07 May 2024 20:36
TamilNet
HASH(0x5650d4a34770)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 07 May 2024 20:36


புதினம்
Tue, 07 May 2024 20:36
















     இதுவரை:  24864038 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1842 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com