அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 08 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow புத்தக வாசல் வழி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


புத்தக வாசல் வழி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: செம்பியன் செல்வன்  
Sunday, 13 February 2005

ஏழாவது முத்திரை  à®µà¯†à®•à¯à®œà®©à®¤à¯ தொடர்புகளுக்கும், தேவைகளுக்கும், குழுமங்களின் அடையாளங்களுக்கும் எந்தெந்த கலைவடிவங்கள் காலத்தின் தேவையெனத் தோற்றம் கொள்ளுகின்றனவோ அவை நாளடைவில் அக்குழுமங்களின் சிறப்பியல் பண்புகள்கொண்ட வர்த்தகப் பண்டங்களாகி விடுவதை சமூக, பொருளாதார, வரலாற்று இயக்கவியல் விதிகள் நமக்கு நன்குணர்த்தி நிற்கின்றன.  இம்மாறாத உண்மைக்கு மதங்களும், மனிதர்களும், கடவுளர்களும் அவை சார்ந்தமைந்த நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. இன்னமும் ஆழமாகக் கூறப்புகின் 'விதிகள்' நித்தியமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் இடங்கள் ஆலயங்களே.

பல திரைப்படங்கள், இந்த ஆலயங்களையும் தாபன அமைப்புக்களையும் பற்றிய வினாக்களையும் விடைகளற்ற மௌனநிலை களையும் திரைப்படக் கலையாக்கி வெற்றியும் பெற்றிருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது.

இங்மார் பேர்க்மன் (1918) சுவீடன் நாட்டின் தலைசிறந்த திரைப்படமேதை. இவரது ஏழாவது முத்திரை (Seventh Seal),  புதிய ஊற்று (Virgin Spring), காட்டுக் கனிகள் (Wild Strawberries), முகமூடி (The Mask), வங்கே கிராமத்து ரோரேயின் மகள் (The Daughter of the Tore of Vange) என்பன புகழ்பெற்ற திரைப்படங்கள். இவரின் திரைப்பட ஆளுமையை இன்றுவரை எவரும் வெற்றிகொண்டிலர்.

இங்மார் பேர்க்மனின் தந்தை ஒரு தேவாலய பாதிரியார். தந்தையுடன் தேவாலயத்திற்கு அக்கால வழக்கப்படி சென்றுவந்தாலும், அதன் சடங்குமுறைகளின் மீதும் அதுகூறும் விளக்கங்களின்மீதும் அவருக்கு அவநம்பிக்கையே மிளிர்ந்தது. ஆனால், தேவாலயத்தில் வரையப்பட்டிருக்கும் சிலுவையில் தொங்கும் கிறிஸ்து, மதச்சடங்கு ஊர்வலங்கள், சதுரங்கம் ஆடும் மரணதேவன், சாட்டையால் தம்மை வருத்திக்கொள்ளும் மனிதர்கள், மேரி மகதலேனா, நரகத்தில் வேதனையுறும் / தண்டனைபெறும் மனிதர்கள் - என விளங்கும் சுவரோவியங்கள் அவரை ஈர்க்கும். ஏழாவது முத்திரை என்ற திரைப்படமே இச்சுவரோவியங்களின் மறுபார்வை எனக்கூறலாம்.

புத்தக வாசல் வழிஇத்திரைப்படத்தின் மூலக்கரு விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில்> திருவெளிப்பாட்டில் கூறப்படுகிறது. ஏழு தேவதூதர்கள் ஏழு எக்காளங்களுடன் தோன்றுகின்றனர். ஒவ்வொரு தூதுவனாக தனது எக்காளத்தை ஊத, ஏழாவது தூதன் தனது எக்காளத்தை ஊதியதும் விண்ணுலகில் பேரொலிகள் எழுந்து கர்த்தருடைய சாம்ராஜ்யம் தோன்றுவதை அறிவிக்கின்றன. கிறிஸ்துதான் இனி என்றென்றும் ஆட்சிசெய்வார் எனக் கூறுகின்றன. இங்கேதான் இங்மார் பேர்க்மன் என்னும் தத்துவார்த்தவாதி, ஆன்மவிசாரி, கலைஞானி தோன்றுகிறான். எல்லாம் சரிதான் கர்த்தரின் சாம்ராஜ்யம் தோன்றவும் கூடலாம்தான். ஆனால், மனிதன் ஏன் வதைபடுகிறான்? ஏன் நரகத்தில் தண்டிக்கப்படுகிறான்? அவனிடம் ஏன் இந்த அவல ஓலம்? அவன்செய்த தீவினை என்ன? ஏழாவது முத்திரை ஆன்ம விசாரணையாக - நாடக வடிவினதாக தோற்றங்கொள்ளத் தொடங்குகிறது. அவரின் மனம் அடித்துக் கொள்ள ஆரம்பிக்கிறது: “எப்போது பிரார்த்தனையிலிருந்து கலை பிரிக்கப்பட்டதோää அந்தக்காலத்திலிருந்தே கலை தன் ஆதார உந்து சக்தியை இழந்துவிட்டது என்றுதான் கருதுகிறேன்”.
தத்துவார்த்த வரிகள் சினிமாவாகுமா? திரைக்கதை வடிவில் வரிகள் எவ்விதம் தோற்றங்கொள்கின்றன?

புத்தக வாசல் வழிகடற்கரை மணலில், வெட்டிப் போடப்பட்ட மெல்லிய கிளைகள் படுக்கை விரிப்பாகக் கிடக்க, தளபதி அந்தோனியஸ் பிளாக் உறங்கிக் கொண்டிருக்கிறான். எட்டி அவன் உதவியாளன் ஜான்ஸ் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருப்பதுடன் காட்சி/ திரைப்படம் ஆரம்பமாகிறது.

12ஆம் 13ஆம் நூற்றாண்டு காலத்தில் கிறிஸ்து பிறந்து வாழ்ந்த யூதா நாட்டை முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க - சிலுவைப்போர் - புனித மதப்போர்கள் நடந்து கொண்டிருந்தன. ஐரோப்பிய நாடுகளிலிருந் தெல்லாம் வீரர்கள் தம்மிச்சையாக பெருவிருப்புக்கொண்டு ஜெருசலேத்தை மீட்க இஸ்ரேல் நோக்கிச் சென்றனர். அவ்வாறு சென்ற வீரர்களில் ஒருவர்தான் அந்தோனியஸ் பிளாக் - அவருடன் அவர் உதவியாளன் ஜான்ஸ் கூடச் செல்கிறான். அவனும் சாதாரணமானவனல்ல. பெருநிலக்கிழார்.
 
10 ஆண்டுகாலம் புனிதப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பிளாக் இறுதியாக - 'எனக்கு கடவுள்மீது நம்பிக்கை வேண்டாம். அவர்தரும் ஞானம்தான் வேண்டும்' - என்ற அனுபவ முடிவோடு, உதவியாளன் ஜான்ஸடன் போர்முனையிலிருந்து திரும்புகிறான். இதிலொரு வேடிக்கை என்னவென்றால் யுத்தபூமியிலிருந்து திரும்பும் பிளாக்கை மரணதேவன் பின் தொடருவதுதான்.

இந்த இடத்தில் திரைப்பட மேதை இங்மார் பேர்க்மனின் கருத்தும் கவனம் கொள்ளப்பட வேண்டும்: “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புனிதத்துவம் உறைந்து கிடக்கிறது. அவன் எங்கும் எப்போதும் அதனைச் சுமந்துகொண்டுதிரிகிறான். அவன்மேல் படிந்திருக்கும் மதம், சடங்கு இவற்றை யெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தால், உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் புனிதத்துவம் புலனா கும்”.

புத்தக வாசல் வழிஇவ்விரு கருத் துக்களின் பிணைப் பாலும் இத்திரைப்படம் உருவாகியிருக்கலாமோ என்ற எண்ணம் ஆங்காங்கே எழுவது தவிர்க்க இயலாதது. அதேவேளையில் மரணதேவன் பிளாக்கிற்கு தன்னை இனங்காட்டுவதுடன்ää அவன் சதுரங்கச் சூது விளையாட்டு ஒன்றினை ஆரம்பிக்கிறான். பிளாக் அச்சூதிற்கு நிபந்தனை விதிக்கிறான்: "நான் உன்னிடம் தோற்காதவரை (Draw) என்னை வாழவிடவேண்டும்; நான் உன்னை வென்று விட்டாலோ, நீ என்னை முற்றாக விட்டுவிட வேண்டும்." இதுவும் இத்திரைப்படத்தின் அடிஊற்றுத் தொகுதியில் ஒன்றுதான்.

தளபதி பிளாக் ஜான்ஸடன் தனது பயணத்தைக் குதிரையில் ஏறித் தொடர்கிறான். மரணதேவனும் அவனறியாமல் பின் தொடர்கிறான். வழியில் ஜஃப் அவன் மனைவி மியா, குழந்தை மைக்கேல் கொண்ட சிறிய நாடோடி வித்தைக் கூட்டம். கோடை வெப்பத்தில் எல்லாம் - உணவுப்பயிர்கள் - எரிந்து சாம்ப லாகிவிட்ட நிலை. ஆயினும் வரண்ட கோடையில் கற்பனையின் வாயிலாக உன்னத வசந்தகாலப் பறவைகளின் கீதங்களையும், மேரி மாதாவின் தரிசனங்களையும் காண்பதாக ஜஃப் கூறுகிறான். மனைவி கேலிசெய்வாள். இவர்களைச் சந்திக்கும் பிளாக்கிற்கு இவர்களுடன் கழிக்கும் நேரங்கள் அர்த்தம் மிகக்கொண்டவையாக விளங்குகின்றன. இந்த ஜஃபை மையமாகக்கொண்டு கன்னிமேரியின் தரிசனங்கள்ää மரணதேவனுடன் சதுரங்கம் விளையாடுவது, இவர்கள் மட்டுமே மரணதேவனின் மரணப்பிடிக்குள் இறுதிவரை ஆளாகாதிருப்பது என்பவை ஜஃ பின் நாடோடிக் குடும்பத்தை இறுதிவரை தத்துவார்த்த - கிறிஸ்தவ வாழ்க்கை முறையின் சிறந்த உருவகமாக்குகின்றன.

வழியில் திருக்கோயிலின் மதிய வரண்ட இருட்டுப் போர்வையில் மரணதேவன் - பாவமன்னிப்பு வழங்கும் போலிவேடத்தில் -பிளாக்கிடமிருந்து சதுரங்கத்தின் போக்கை உணர்வது, ஜான்ஸ் தேவாலய ஓவியனிடம் உரையாடுவது - சோக சித்திரம் ஏன்? - துல்லியமாக உண்மையின் கூர்முடியாக அமைகிறது. படத்தில் ஜான்ஸ் - ஒரு பெண் - பயணம் என ஆரம்பிக்கிறது. கோயிலில் குழந்தைமுகம் மாறாத சிறுமியை துறவியொருவர் பாவம்செய்தாள் என கொலைசெய்கிறார். மரணதேவனின் சதுரங்க விளையாட்டில் தளபதி அவனை வெல்வதற்காக காலதாமதம் செய்கிறார். எல்லா இறுதிக்காட்சிகளும் (Climax)  ஏதோவொரு வகையில் மானுடத்தின் வாழ்க்கை முறையை சமயச் சடங்குகளும் முறைமைகளும் வாழ்க்கை என்றால் என்ன என்பதனை யதார்த்தரீதியாக உள்வாங்கிக்கொள்ளாமல் இருப்பதுபற்றி விளக்கம்கூற முற்படுவதுதான், இப்படைப்பின் முரணியாகும்.

இப்படைப்பை - திரைப்படச் சுவடியை - வெங்கட் சாமிநாதன் சிறந்தமுறையில் மொழிபெயர்த்துள்ளார்; சென்னையிலுள்ள 'தமிழினி' பதிப்பகம் அழகிய நூலாக வெளியிட் டுள்ளது.       


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 08 May 2024 00:38
TamilNet
HASH(0x55f4b487f0d0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 08 May 2024 00:38


புதினம்
Wed, 08 May 2024 00:38
















     இதுவரை:  24864335 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1968 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com