அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 07 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow தமிழ் இலக்கியப் பெருவிழாவை முன்வைத்து..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழ் இலக்கியப் பெருவிழாவை முன்வைத்து..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பாலன்  
Sunday, 13 February 2005

தமிழ் இலக்கியப் பெருவிழாவை முன்வைத்துச் சிலகருத்துக்கள்

தமிழ் இலக்கியப் பெருவிழாவடக்குக் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் 'தமிழ் இலக்கியப் பெருவிழா - 200' அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
பாராட்டுதல்களிற்குரிய அம்சங்களையும் சில குறைபாடுகளையும் அது கொண்டிருந்தது. ஆண்டுதோறும் பெரும் நிதிஒதுக்கீட்டில் நடைபெறும் இவ்விழா, இன்னும் கூடிய பயனைத்தருவதாய் அமையவேண்டுமென்ற நல்நோக்கில் சில கருத்துக்கள்:

1. 'கல்வி' முதலிய தலைப்பைத் தவிர்த்து, தமிழ் 'இலக்கிய விழா' விற்குப் பொருத்தமான தலைப்புக்களிலேயே ஆய்வரங்கு அமைய வேண்டும். சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், கலை - இலக்கியக்கோட்பாடுகள், படைப்பாளுமை போன்றவற்றை ஆராயலாம். மூன்று நாள்களும் ஒரே பொருளை ஆராய்வது சலிப்பினைத்தரும்: எனவே, வெவ்வேறு பொருள்களில் ஆய்வுசெய்யலாம்.

2. பல்வேறு மாவட்ட எழுத்தாளரிற்கிடையிலான சந்திப்புகள், எழுத்தாளரிற்கும் வாசகரிற்கு மிடையிலான உரையாடல் நிகழ்ச்சிகள்.

3. 'சிறந்த தமிழ் இலக்கிய நூல்களிற்கான பரிசுகள்' என்ற தலைப்பில் மாற்றம் செய்யப்படவேண்டும்: ஏனெனில் பனையியல், கொட்டியாரப்பற்று வரலாறு, சூழல் புவியியல் என்பன 'இலக்கியம்' என்ற தலைப்பின் கீழ் வரமுடியாது.

4. இலக்கிய விமர்சனம், இரசனைக் குறிப்புகள், கலை - இலக்கியப் பத்தி எழுத்துக்கள் என்பவற்றை ஒரு தனிப்பிரிவாகக் கொள்ளலாம் அல்லது பல்துறைப் பிரிவில் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

5. பரிசுத்தொகை குறைந்தது பத்தாயிரம் ரூபா வாக்கப்படவேண்டும். தற்போதைய தொகை மிகக் குறைவானது.

6.
தேர்விற்கு அனுப்பப்படும் நான்கு பிரதிகளிற்குரிய பெறுமதி கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

7. ஈழத்து நூல்கள் பற்றிய அக்கறையினையும், விழிப்புணர்வையும் எம்மக்களிடையில் பரவலாக்கும் நிகழ்ச்சிகள் தொடரப்பட வேண்டும். உ+ம் ஈழத்துச் சஞ்சிகை - நூற்காட்சி, விற்பனைப்பிரிவு, இவைபற்றிய உரைகள், சிறுவெளியீடுகள்.

8. கலை நிகழ்ச்சிகளின் 'நெரிசலை'த் தவிர்க்க எண்ணிக்கையைக் குறைக்கலாம். விழா நடக்கும் மாவட்டத்திலுள்ள கலைஞர் களையே பயன்படுத்தலாம். இவற்றால் விழாச் செலவும் பெருமளவில் குறைக்கப்படும்.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 07 May 2024 09:22
TamilNet
HASH(0x559243a739d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 07 May 2024 09:22


புதினம்
Tue, 07 May 2024 09:22
















     இதுவரை:  24863054 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1374 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com