அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 26 April 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow தகவற் களம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தகவற் களம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Saturday, 12 February 2005

சாகித்திய மண்டலப் பரிசுகள் - 2004

1. கவிதை: இருத்தலுக்கான அழைப்பு
    (முல்லை முஸ்ரிபா)
2. சிறுகதை: தரை மீன்கள்
    (ச. முருகானந்தன்)
3. நாவல்: வானும் கனல் சொரியும்
    (செங்கை ஆழியான்)
4. சிறுவர் இலக்கியம்: வெள்ளைக் குதிரை
    (ஓ.கே.குணநாதன்)
5. மொழிபெயர்ப்பு: தேயிலைத் தேசம்
    (மு. சிவலிங்கம்)
6. ஆய்வு: மலையகத் தமிழர் வரலாறு
    (சாரல் நாடன்)
7. பல்துறை: மின்னியக்க பத்திரிகையியல் ஓர் அறிமுகம்
    (அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை)

வாரந்தோறும் நல்ல திரைப்படங்கள்

ஒவ்வொரு ஞாயிறு காலையும் யாழ். பல்கலைக்கழகத்தில், நல்ல திரைப்படங்கள் இலவசமாய்க் காட்டப்பட்டு வருகின்றன; அங்கு காட்டப்பட்ட படங்கள் சிலவற்றின் விபரங்கள்:

29.08.2004 சிவப்புக் கதவு - வங்காளம் - புத்தாடெப் தாஸ்குப்தா.

05.09.2004 முத்துக்காதணி அணிந்த பெண் - ஆங்கிலம் - பீற்றர்  à®µà¯†à®ªà®°à¯

03.10.2004 றொபேட்டோ சூக்கோ: பிரெஞ்சு - செட்ரிக் கான்.

10.10.2004 தமிழகக் குறும்படங்கள்: சிறகுகள் - சீனிவாசன், வெளிச்சம்  - சி.எம்.ரமேஷ்: காய்ச்சமரம் - சுஹாசினி: கல்மண்டபம் - à®œà®µà®¹à®°à¯: ஜனனம் - தியாகராஜன்: தக்கையின்மீது நான்கு  à®•à®£à¯à®•à®³à¯ - வசந்த்.

17.10.2004 இந்த வழியால் வாருங்கள் (முதலாம் பகுதி) - சிங்களம்,  à®¤à®®à®¿à®´à¯ - அசோகா ஹந்தகம.

நமது நூல் வெளியீடுகள்

ஈழத்து நூல்களிற்கு ஆதரவு வழங்குவது எமது கடமை. அவற்றை வாசிப்போம்: பணம் கொடுத்து வாங்கி ஊக்குவிப்போம்.

28.08.2004 தமிழ்க்கவியின் 'இருள் இனி விலகும்' நாவல் - பண்பாட்டு  à®®à®£à¯à®Ÿà®ªà®®à¯, கிளிநொச்சி.

08.09.2004 முகமாலை சேகரின் 'கொட்டுக்கடப்பு' சிறுகதைத் தொகுதி  - யாழ். கைலாசபதி கலையரங்கு.

12.09.2004 ஆதித்தநிலாவின் 'எங்கே மனக்கண்ணையும் திறவுங்கள்',  à®…ருமை கல்விக்கூட  வெளியீடான 'முதற்பயணம்' ஆகிய  à®‡à®°à¯, சிறுகதைத் தொகுதிகள் - பண்பாட்டு மண்டபம்,  à®•à®¿à®³à®¿à®¨à¯Šà®šà¯à®šà®¿.

13.09.2004 பேராயர் எஸ்.ஜெபநேசனின் 'பழையதும் புதியதும்' -  à®¯à®¾à®´à¯à®ªà¯à®ªà®¾à®£à®•à¯ கல்லூரி பட்டப்படிப்புகள் பிரிவு மண்டபம், à®¯à®¾à®´à¯à®ªà¯à®ªà®¾à®£à®®à¯.

19.09.2004 திருக்குமரன் கவிதைகள் - யாழ். நாவலர் கலாசார மண்டபம்.

19.09.2004 ச.முருகானந்தனின் சிறுகதைத் தொகுதி 'இன்று எங்கள்  à®¤à¯‡à®šà®®à¯' - கொழும்புத் தமிழ்ச்சங்கம்.

02.10.2004 மு.சிங்கராயர் எழுதிய 'மடு அன்னை பிள்ளைத்தமிழ' -  à®ªà¯à®©à®¿à®¤ சவேரியார் குருத்துவக் கல்லூரி, கொழும்புத்துறை.

03.10.2004 தாமரைச் செல்வியின் 'பச்சைவயல் கனவு' நாவல் - கிளிநொச்சி மகாவித்தியாலயம்.

பரிசு பெற்ற நூல்கள்

வடக்குக் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுää 2003 இல் வெளியான சிறந்த நூல்களிற்கான பரிசுகளை வழங்கியுள்ளது. 11.10.2004 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் இலக்கியப் பெருவிழாவில் இவை வழங்கப்பட்டன.

1. கவிதை - இருத்தலுக்கான அழைப்பு (முல்லை முஸ்ரிபா),  à®¤à¯†à®©à¯à®©à®¿à®²à®™à¯à®•à¯ˆà®•à¯ கவிதைகள் (சோ.பத்மநாதன்).

2. சிறுகதை - ஒப்பனை நிழல் (வி.கௌரிபாலன்).

3. நாவல் - புயல் பறவை (மலரவன்), வீதியெல்லாம்  à®¤à¯‹à®°à®£à®™à¯à®•à®³à¯ (தாமரைச் செல்வி).

4. சிறுவர் இலக்கியம் - வெள்ளைக் குதிரை(ஓ.கே.குணநாதன்).

5. பல்துறை - பனையியல் (மு.பாக்கியநாதன்), மொஸ்கோ  à®…னுபவங்கள் (ஆரையம்பதி க. செபரத்தினம்), ஈழத்து  à®®à®¾à®£à¯à®ªà¯à®±à¯ மகளிர் (பத்மா சோமகாந்தன்), கொட்டியாரப்பற்று à®µà®°à®²à®¾à®±à¯ (எம்.ஏ.சமது).

6. உயர் கல்வி - அழகியற் கல்வி (சபா ஜெயராசா), சூழல் à®ªà¯à®µà®¿à®¯à®¿à®¯à®²à¯ (எஸ்.அன்ரன் நோபேட்).

7. நாடகம் - நெஞ்சுறுத்தும் கானல் (தே.தேவானந்), பண்டார  à®µà®©à¯à®©à®¿à®¯à®©à¯ குருவிச்சி நாச்சியார் (அருணா செல்லத்துரை).

8. ஆய்வு - மருதத்திணை (வாசுகி நடேசன்), ஈழத்தமிழ்  à®…ரங்கில் பெண் (ஜெயரஞ்சினி ஞானதாஸ்).

வெள்ளைத்தோல் வீரர்கள்

மூன்றாவது மனிதன் வெளியீடான - திசேராவின் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' சிறுகதைத் தொகுதி அறிமுகமும் விமர்சனமும், மொழிவரதன் தலைமையில், 26.09.2004 ஞாயிறு அன்று லிண்டுல 'மரியா' தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மனித உரிமைக்கும் மேம்பாட்டிற்குமான அமைப்பு, விழா ஏற்பாட்டினைச் செய்திருந்தது. அமைப்பின் தலைவர் K.S.S.A. பிரான்சிஸ் வரவேற்புரையையும், ஆசிரியர் என்.விஜயகுமாரன் நூலறிமுகத்தினையும் நிகழ்த்தினர்.

எழுத்தாளர் எம்.சிவலிங்கம் நூல் விமர்சனத்தினைச் செய்தார். அவர் தனதுரையில்ää திசேராவின் எழுத்து ஆழமான, நுண்ணிய, கூரிய, பழம்பெரும் எழுத்தாளனுக்குரிய ஆளுமைகளுடன் வெளிப்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று என்றும், அவரது கதைகள் பல்தரப்பட்ட விடயங்களைக் கருக்களாகக்கொண்டு பரந்த நோக்குடன் புலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மலையகம் அல்லது வடக்குக் கிழக்கு என ஒரு வட்டத்திற்குள் நில்லாது காணப்படுவதாகவும் கூறினார்.

பாடசாலை அதிபர் நூலாசிரியருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். நுவரெலிய பிரதேசசபைத் தலைவரும் உரையாற்றியதுடன், ஓர் எழுத்தாளனுக்குக் கௌரவம் செய்யவேண்டியது அவசியம் என்று கூறிப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

ஏற்புரையை திசேரா என்ற ச.தியாகசேகரன் நிகழ்த்தினார். நன்றி உரையை ஆசிரியர் P.தேவகாந்தன் நிகழ்த்தினார். கூட்டத்தில் பாடசாலை ஆசிரியர்கள்ää மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்மக்களின் சமாதான வேணவா

“--- தமிழ்மக்களும் அவர்களது தலைமையும் இன்று நெகிழ்ச்சித்தன்மை இல்லாதவர்களென்றும், தீர்மானம் எடுக்கத் தயங்குபவர்கள் என்றும் அநீதியாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பிரிவினையை அடிப்படையாக வைத்து ஓர் விடுதலைப் போராட்டத்தை நடத்திய தமிழ்த்தலைமை, சாத்தியமான மாற்று வழிகளை ஆராய்வதற்கென பேச்சுவார்த்தை முயற்சிக்குள் பிரவேசித்து நிற்கின்றது.

இதுவே நெகிழ்வுத்தன்மை.
இதுவே சமாதானத்திற்கான வேணவா.

அடக்குமுறையும் அடிப்படை மனிதஉரிமை மறுப்புமற்ற கௌரவத்துடனான சமாதானத்தை உலகில் நிலைநிறுத்துவதற்கு வேண்டிய சகல முயற்சிகளையும் செய்வதற்குää தங்களுக்குச் சமாதானத்தை வேண்டிநிற்கும் தமிழ்மக்கள்ää ஐ.நாவுடனும் ஏனைய சமாதானத்தை நேசிக்கும் மனிதகுலத்துடனும் இணைந்து உழைக்கக் கரம்கோத்து நிற்கிறார்கள்.”

       - தமிழீழ விடுதலைப் புலிகளின்
      சமாதானச் செயலக அறிக்கை (21.09.2004).


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 26 Apr 2024 14:03
TamilNet
HASH(0x55f907ebf258)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 26 Apr 2024 14:03


புதினம்
Fri, 26 Apr 2024 14:03
















     இதுவரை:  24814498 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9311 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com