அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 16 June 2025

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 13 arrow ஆசிய சுனாமி குறித்து
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஆசிய சுனாமி குறித்து   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -பீற்றர் சைமன்ட்ஸ்-  
Wednesday, 19 January 2005

ஆசிய சுனாமி குறித்து ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை?

இலங்கையின் கிழக்குக் கரையோரத்தை சுனாமி தாக்கிய பின்னரும் கூட ஏனைய கரையோர மக்களை எச்சரிப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

-பீற்றர் சைமன்ட்ஸ்-

தெற்கு ஆசியாவில், மிகக் கொடூரமான முறையில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கையும் அழிவும் உயர்ந்துவரும் நிலையில், ஒரு சுனாமி பற்றிய எச்சரிக்கை முறை அமைக்கப்பட்டிருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கக் கூடும் என்பது இன்னும் வெளிப்படையாகத் தெளிவாகியுள்ளது. 15 அல்லது 30 நிமிட எச்சரிக்கை காலக்கெடு கொடுத்து எப்படி, எத்திசையில் தப்பியோட வேண்டும் என்ற தெளிவான அறிவுறுத்தலும் கொடுக்கப்பட்டிருந்தால், என்ன நடந்து கொண்டிருக்கிறது, எப்படி எதிர்கொள்வது என்று திகைத்திருக்கும் மக்கள்கூட, பாதுகாப்பான இடத்திற்குச் தப்பிச் சென்றிருக்க முடியும்.

சுனாமியும் அதைத் தூண்டிவிட்டிருந்த நில நடுக்கமும் இயற்கை நிகழ்வுப்போக்கே ஆகும். நிலநடுக்கங்கள் பற்றி முன்கூட்டியே கணிக்கமுடியாவிட்டாலும், மிக விரைவாக அவற்றின் மைய இடம் போன்றவை உறுதிசெய்யப்பட்டுவிட முடியும். மேலும், உரிய விஞ்ஞானக் கருவிகள் உரிய இடத்தில் இருந்திருந்தால், சுனாமி ஏற்படும் வகையும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்க முடியும் என்பதோடு, அது செல்லும் பாதை கணிக்கப்பட்டு, அதன் போக்கைப் பின்பற்றவும் முடியும்.

பசுபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை முறை 1940 களின் கடைசிப் பகுதிகளில் இருந்தே இயங்கி வருகிறது. மிகப் பெரிய நில நடுக்கம் ஒன்றின் விளைவாகப் பெரும் அலைக் கொந்தளிப்பு ஒன்று ஏற்பட்டு அலாஸ்காவில் 100 பேரை 1964 இல் கொன்ற பின்னர், அது நவீனப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம், அதிர்வுகளைப் பதிவுசெய்யும் கருவிகளைத் தவிர, கடல் மட்ட ஆராய்ச்சி பற்றிய பல கருவிகளும், சுனாமீற்றர்கள் என்று அழைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் தன்மை அறியும் கருவிகள், இவற்றின் உதவியுடன் துணைக்கோளால் இருபத்திநான்கு மணி நேரமும் மேற்பார்வையிடும் நிலையங்கள் ஹவாய், அலாஸ்கா, ஜப்பான் ஆகியவற்றில் கொண்டிருந்த தொடர்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டன. கணினி மாதிரியைக் கொண்டு, விஞ்ஞானிகள் சுனாமிகள் பெருகி வளர்தல் அவற்றின் பாதிப்புத் தன்மை இவற்றைக் கணித்துக் கூறமுடியும்.

இந்தியப் பெருங்கடலில் அத்தகைய அமைப்பு ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. கடந்த வார பெருந்துயரத்தில் பாதிக்கப்பட்ட 11 நாடுகளில், தாய்லாந்து, இந்தோனேசியாவும்தான் பசுபிக் பெருங்கடலில் உள்ள சுனாமி எச்சரிக்கை முறைப் பகுதிக்குள் இருக்கின்றன. பெரும்பாலான நாடுகள் நில அதிர்வு பற்றிய கருவிகள் கொண்டுள்ள பிரிவுகளின் மூலம் நில நடுக்கத்தைக் கண்டறிந்தன. ஆனால், எல்லா நிலநடுக்கங்களும் சுனாமியைத் தோற்றுவிப்பதில்லை. போதிய திட்டங்கள், தயாரிப்புகள், கூடுதலான கருவிகள் என்று இல்லாத நிலையில் துல்லியமாகக் கணித்துக் கூறுதல் மிகக் கடினமானதாகும்.அதிலும் இதைப் பொறுத்தவரை காலக் கணிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். ஏனெனில், சுனாமி அலைகள் கடலின் ஆழத்தைப் பொறுத்து மணிக்கு 800 மைல்கள் வேகத்தில் செல்லும் ஆற்றல் உடையவை ஆகும்.

டிசம்பர் 26 இன் நிலநடுக்கம், ரிச்டர் கோலில் 9 ஐப் பதிவு செய்த வகையில், கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நடுக்கங்களில் ஒன்றாக இருந்திருந்த, அலாஸ்கா நிலநடுக்கத்திற்கு அடுத்தாற்போல், மிக அதிக தீவிரத்தன்மையைப் பெற்றிருந்தது. இந்த அதிர்வின் தொடக்கத்துடைய மையப்பகுதி இந்தோனேசியத் தீவான சுமாத்திராவின் வடமேற்குக் கடலோரத்தையொட்டி அமைந்திருந்தது. இதன் பின்விளைவான அதிர்வுகள், வங்களா வளைகுடாவில், வடக்கே அந்தமான், நிக்கோபர் தீவுகள் வழியே தொடர்ந்து கடந்தன. ஆசிய, இந்திய என்று இரு பெரும் நிலப்பகுதிகளின் அடித்தட்டுகள் கிட்டத்தட்ட 20 மீற்றர்கள் அகலத்திற்கு 1,000 கிலோமீற்றர் தூரத்திற்கும் விரிந்து ஹிரோஷிமாவில் 1945 இல் வீசப்பட்ட அணுகுண்டின் சக்தியைப் போல், 20,000 மடங்கு அதிக சக்தியை வெளியிட்டன.

நிலநடுக்கம் சுமத்திரா நேரத்தில் காலை 8 மணிக்குச் சற்று முன்னர் நிகழ்ந்தது (GMT நேரம் காலை 1 மணி). எட்டு நிமிடங்கள் கழிந்தபின்னர், ஹவாயில் இருந்த பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. அதற்கு மூன்று நிமிடங்களுக்குப் பின்னர், பசுபிக்கில் இருந்த மற்ற ஆராய்ச்சிக் கூடங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. 8.14 மணிக்கு இணைப்பில் பங்கு பெறும் அனைத்து நாடுகளுக்கும், நில நடுக்கம் பற்றியும் பசுபிக் பகுதிக்கு சுனாமியினால் எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்ற ஓர் எச்சரிக்கைக் குறிப்பும் அனுப்பப்பட்டது.

ஒரு மணி நேரம் கடந்த பின்னர், மையம் தன்னுடைய நில நடுக்கத்தைப் பற்றிய தொடக்க மதிப்பீட்டைப் பரிசீலனை செய்து, அது 8 இல் இருந்து 8.5 ஆக இருக்கும் என்று கருதி, இரண்டாம் எச்சரிக்கை குறிப்பில் இந்தியப் பெருங்கடலில் சுனாமித் தாக்குதல் ஏற்படக் கூடும் என்ற வாய்ப்பை வெளியிட்டது. பரபரப்புடன் பல தொலைபேசி அழைப்புகள் எச்சரிக்கை பற்றிய அறிவிப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் முறையான தொடர்புடைய அமைப்புகள் இல்லாததால், இது அறியப்பட்டிருக்கலாம் அல்லது அறியாமலும் போயிருக்கலாம்; "யரை அழைத்துக் கூறுவது என்று நாங்கள் நினைக்கத் தொடங்கினோம். அரச திணைக்கள செயற்பாட்டு மையத்திடமும், இராணுவத்திடமும் இதைப்பற்றிப் பேசினோம் துதரகங்களிடமும் இதுபற்றிப் பேசினோம்.இலங்கையில் கடற்படை அலுவலகத்திடம், மற்றும் எந்த உள்ளூர் அரசாங்க அதிகரியிடம் தொடர்பு கொள்ள முடிந்தாலும், அவரிடம் இதுபற்றிப் பேசினோம்" என்று புவியியல்- பௌதீக வல்லுநரான பாரி ஹிர்ஷார்ன் ஏணிணணிடூதடூத அஞீதிஞுணூœடிண்ஞுணூ இடம் தெரிவித்தார்.

சுனாமியின் பாதையில் இருக்கும் நாடுகளில், இது எதிர்கொள்ளப்பட்ட விதம் ஒழுங்கற்றும் சோம்பேறித்தனம் நிறைந்தும்தான் காணப்பட்டது. இதனுடைய பேராபத்துகளை நன்கு அறிந்தவர்கள்கூடதயாரிப்பின்மை, அதிகாரத்துவ முறையின் செயல்பாடு, போதுமான அடிப்படைக் கட்டுமானம் ஆகியவை சரியாக இல்லாததால் தடைக்குட்பட்டனர். மற்றவர்களுக்கு எச்சரிக்கை அடையாளங்களை விளக்கிக் கண்டு கொள்ளுவது என்று தெரியாத நிலை அல்லது அதைப்பற்றிய போதிய அக்கறை இல்லாத நிலை என்றுதான் இருந்தது. வங்கக் கடலைச்சுற்றி இருந்த நாடுகள் எவையுமே அதிகாரபூர்வமான எச்சரிக்கையை விடுக்கவில்லை; இது மில்லியன் கணக்கான மக்களைப் பேரழிவை சுமந்து வரும் அலைகளின் சீற்றத்திற்கு இரையாக்கிவிட்டது.

இந்தோனேசியா

நிலநடுக்கத்தின் மையக்குவிப்பிற்கு வெகு அருகாமையில் வட சுமாத்ரா இருந்தது. அசே மாநிலம் முழுவதும் கட்டிடங்களை உடனடியாகத் தகர்த்த நிலையில், அதைத் தொடர்ந்து அரைமணி நேரத்தில் தோன்றிய சுனாமி மேற்கு கடலோரப்பகுதியைத் தாக்கியது. இது பின்னர் சுழன்று வடக்கு முனையில் சீறி, மாநிலத் தலைநகரான பண்டா அசேயைத் தரைமட்டமாக்கி அதன் பின்னர் கிழக்கு கடற்கரையோரப் பகுதியை அடைந்தது. பொலிஸ் இராணுவம் உட்பட அனைவருமே இந்த எதிர்பாரா தாக்குதலில் திகைப்புண்டனர்.

அசேயின் மேற்குக் கடற்கரையோரத்தில் அதிகாரபூர்வ எச்சரிக்கை பலருக்கும் பலனற்ற வகையில் மிகத் தாமதமாக வந்திருக்கக்கூடும் என்றால், அடிப்படைக் கல்வியற்ற நிலை ஆயிரக்கணக்கான உயிர்கள் கவரப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்ககூடும். நிலநடுக்கத்திற்குப் பின்னர், கடல் திடீரென்று பல நூற்றுக்கணக்கான மீற்றர்கள் பின்வாங்கியது; பலருக்கும் இதன் பொருள் புரியவில்லை. இந்த நிகழ்வினால் திகைத்துக் குழப்பமுற்ற கிராமவாசிகள், குறிப்பாகச் சிறுவர்கள் நீரைத் தொடர்ந்து சென்று, மேலே செல்லமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த மீன்களைப் பிடித்தனர்; ஆனால், தொடர்ந்து உடனடியாகத் திரும்பிய கடல்நீரால் சூழ்ந்து மூழ்கடிக்கப்பட்டனர். பலரும் எதையும் விளங்கிக் கொள்ளமுடியாமல் அங்கேயே நிலைகுத்தி நின்றனர்.அறிவியல் ஏடான Nation இல் வந்த ஒரு கட்டுரையின்படி, இந்தோனேசியாவில் ஆரம்ப எச்சரிக்கை கொடுக்கக் கூடிய ஒரே அதிர்வு பதிவுத் தகவல் கருவி, ஜாவா தீவில்தான் இருந்தது. அது 1996 இல் நிறுவப்பட்டிருந்தது. ஆனால், 2000 ஆம் ஆண்டில் அதன் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், அங்கு தொலைபேசித் தொடர்பு இல்லாமற் போய்விட்டது. பாண்டுங் தொழில்நுட்பக் கூடத்தின் நில அதிர்வுக் கூடப் பிரிவின் தலைவரான நானாங் புஸ்பிடோவின் கருத்தின்படி, அதிகாரிகள் ஜாகார்த்தாவில் நிலநடுக்கம் பற்றி உஷார்படுத்தப்பட்டனர் என்றும் ஜாவா நிலையத்தில் இருந்து சிறப்புத் தகவல்கள் கிடைக்காத நிலை அவர்களை சுனாமி பற்றிய எச்சரிக்கையை வெளியிடத் தடைசெய்து விட்டது.

தாய்லாந்து

நில அதிர்வு பற்றி வல்லுனர்கள் தாய்லாந்தில் சுமாத்ராவின் நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே அதைப்பற்றிப் பதிவு செய்திருந்தனர். தாய்லாந்தின் வானியல் ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் இச்செய்தி வந்தபோது ஒரு கருத்தரங்கில் பங்கு கொண்டிருந்தனர். அவர்கள் உடனடியாக ஒரு அவசரக்கால கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதற்கு துறையின் இயக்குனர் தலைவர் குதணீடச்ணூஞுணூடு கூணூச்ணண்ணூடிணூச்œœச்ணதீணிணஞ் தலைமை தாங்கினார். பெயரிட விரும்பாத நபர்களை மேற்கோளிட்டு, இக்கூட்டத்தில் சுனாமி ஆபத்து பற்றிய விவாதம் இருந்தது என்றும் கூட்டம் அத்தகைய எச்சரிக்கை விடவேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் Nation பத்திரிகை தெரிவிக்கிறது.


அலைகள் மற்ற இயற்கை அசைவுகள் பற்றிக் கண்டறியும் கருவிகள் இல்லாத நிலையில், வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுனாமி வந்து கொண்டிருக்கிறதா என உறுதிசெய்யும் வகையைப் பெற்றிருக்கவில்லை. மேலும் அரசாங்கமும் வணிகமும் இவர்கள் ஒரு தவறான எச்சரிக்கை விடுத்தால் எத்தகைய விளைவுகளைக் கொடுக்கும் என்பதையும் நன்கு அறிந்திருந்தனர். இப்பொழுதுதான் சுற்றுலாப் பயணிகள் மிக அதிகமாக வரும் உச்ச நேரம், பயணியர் விடுதிகள் நிறைந்திருக்கின்றன. Nation  இடம் ஒரு அதிகாரி விளக்கினார்: "நாங்கள் ஒரு எச்சரிக்கையை விடுத்தால், அது எல்லோரையும் வெளியேற்றும் நடவடிக்கைக்கு இட்டுச் சென்றிருக்கும்: (ஒருவேளை ஏதும் நடவிடக்கவில்லை என்றால்) பின்ன என்ன நிகழும்? வணிகம் உடனடியான பாதிப்பிற்குட்பட்டிருக்கும். அத்தகைய நெருக்கடியை வானிலைத் துறையினால் கையாள இயலாது. (சுனாமி வரவில்லை என்றால், எங்களை மூழ்கடித்திருப்பர்.)

இந்தக் கூட்டம் தெற்கு தாய்லாந்து கடலோரப்பகுதி, மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடங்களான புக்கெட், பன்ங்னா ஆகிய பகுதிகளை சுனாமி சீற்றத்துடன் தாக்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு கூட்டப்பட்டிருந்தது.

இலங்கை

இலங்கை, பசுபிக் எச்சரிக்கை முறையின் ஒரு பகுதியாக இல்லாவிடினும், ஹவாய் நிலையத்தின் முயற்சிகளால், ஒரு சுனாமி வளர்ச்சியடைந்து தாக்கக் கூடும் என்ற தகவல் சில அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. பெரும் அலைக் கொந்தளிப்பு வங்க வளைகுடாவைக் கடந்து தீவின் கிழக்குக் கடற்கரையோரத்தை அடைவதற்கு இரண்டு மணி நேரத்தை எடுத்துக் கொண்டது.

இலங்கையின் புவிக் கூற்று அளவியல் மற்றும் சுரங்கங்களின் நிறுவனம், உலக சோசலிச வலைத் தளத்திடம் அவருடைய அலுவலகம், சர்வதேசப் பிரிவுகளில் இருந்து நிலநடுக்கம் பற்றிய ஓர் எச்சரிக்கையைப் பெற்றதாகக் குறிப்பிட்டார். இதை அவர் எவ்விதம் எதிர்கொண்டார் என்று கேட்கப்பட்டதற்கு அவர் சற்று தற்காப்புடன்தான் விடையிறுத்தார். செய்திகளை சங்கேதமொழியில் இருந்து மாற்றுவதற்குச் சற்று கால தாமதமாயிற்று என்று கூறிய அவர் ,அவை எப்பொழுது வந்தன என்று கூற மறுத்துவிட்டார். நிலநடுக்கத்தை, மாரடைப்புடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், சுனாமியைப் பற்றிக் கேட்டதற்குச் சில நேரங்களில் இது பற்றிய முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட முடியும் என்று அவர் தெரிவித்தார். ஆனால், டிசம்பர் 26 ஐ பொறுத்தவரை, "அதைப் பற்றிக் கூறியிருக்க முடியாது" என்று வலியுறுத்தி தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டார்.

Lankadeepa செய்திப் பத்திரிகை கொடுத்த கருத்துகளில் வீரவர்ணகுல எச்சரிக்கை கொடுக்க முடியாத தோல்வியை நியாயப்படுத்தியுள்ளார். தன்னுடைய துறையில் இருக்கும் வசதிகளும், சர்வதேசத் தொடர்புகளும் போதுமானவை என்று கூறிய அவர், நிலநடுக்கம் பற்றிய விபரங்கள் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மையத்திற்கு விளக்கம் காண்பதற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்று விவரித்தார். "அதற்குக் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். ஆனால், அத்தகைய தகவல் ஒரு குறிப்பிட்ட நிலநடுக்கத்தினால் ஏற்படும் அலைக் கொந்தளிப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்று தெளிவாக்க முடியாது என்றார். எங்களுடைய பணியைப் பற்றி எவ்வித குறைகூறல்கள் இருப்பினும், நாள் முழுவதும் திறமையுடன்தான் நாங்கள் உழைத்து வருகின்றோம். எனவே, இக் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரித்துவிடுகிறோம்."

மிக உறுதியுடன் நிரூபிக்கப்பட்டது என்வென்றால், இலங்கையின் எச்சரிக்கை முறைகள், மற்றும் இப்பகுதி முழுவதும் அவற்றின் செயற்பாடுகள் முற்றிலும் போதிய அளவில் இல்லை என்பதுதான். வீரவர்ணகுல இந்த நியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்த முற்பட்டுள்ளது, மிகப் பெரிய நிலநடுக்கம் அதையொட்டிய சுனாமி என்ற சான்றுகளுக்கு எதிராக, தீவில் இருந்த அதிகாரிகள் முடங்கிப்போயினர் என்பதைத்தான் நிரூபிக்கிறது. எவருக்கு, எந்த நேரத்தில், எது தெரிந்திருந்தது என்பது ஒரு வேளை துல்யமான விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியாமலேயே போய்விடக்கூடும். கிழக்குக் கடற்கரையை சுனாமி தாக்கிய பின்னரும் கூட, அதிகார பூர்வமான நடவடிக்கை மற்ற இடத்தில் இருந்த மக்களை எச்சரிப்பதற்கு எடுக்கப்படவில்லை. ஒப்பீட்டளவில் பேரலைகள் அற்ற நீர்பகுதியில் அலைக் கொந்தளிப்பு தீவைச் சுற்றிலும் தாக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டு தெற்கு, மேற்குக் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது.

இந்தியா

மற்ற நாட்டுகளில் தங்கள் நிலையில் இருப்பவர்கள் எதிர்கொண்டிருந்தது போன்ற தடைகளைத்தான் இந்திய அதிகாரிகளும் எதிர்கொண்டனர். ஆனால், இவர்களுக்கு ஒரு நன்மை கூடுதலாக இருந்தது. இந்திய விமானப்படை, வங்கக் கடலின் நடுவில் இருக்கும் இந்தியப் பகுதியான, தொலைவில் இருக்கும், நிலநடுக்கத்தின் மையக்குவிப்பிற்கு அருகில் இருக்கும் அந்தமான், நிகோபார் தீவுகளில் ஒரு படைத் தளத்தைக் கொண்டுள்ளது. சுனாமி ஏற்படுமா அல்லது வராமற்போய்விடுமோ என்ற ஊகத்திற்கு இங்கு இடம் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே அலைக் கொந்தளிப்பு தீவுகளையும், விமானத் தளத்தையும் நோக்கி சீறிப்பாய்ந்து சேதப்படுத்தியது.

Indian Express இல் வந்துள்ள ஒரு தகவலின் படி, சென்னையில் இருக்கும் விமானத் தளம் தென்னிந்தியாவை சுனாமி தாக்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் நிக்கோபார் தீவிலிருந்து தகவல்களை பெற்றிருந்தது. விமானப்படைத் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி செய்தித்தாளிடம் தெரிவித்ததாவது; "கார் நிகோபார் தளத்தில் இருந்து கடைசித் தகவலின் படி, தீவு மூழ்கிக் கொண்டிருக்கிறது என்றும் எங்கு பார்த்தாலும் நீர் நிறைந்

துள்ளது என்பதேயாகும். தலைமை அதிகாரி தன்னுடைய உதவியாளருக்குப் புது டெல்லியில் முன்பிருந்த அறிவியல், தொழில்நுட்ப மந்திரியின் இல்லத்திற்கு Fax மூலம் எச்சரிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டார். இதைத்தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; சுனாமி பற்றிய எச்சரிக்கை சென்னைக்கோ அல்லது வேறு மற்ற தென்னிந்திய சிறுநகரங்களுக்கோ, பெருநகரங்களுக்கோ விடுக்கப்படவில்லை.

எச்சரிக்கை அமைப்பு ஏன் ஏற்படுத்தப்படவில்லை?

பேரழிவிற்கு பின்னர் இந்தியப் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்படுவதற்கான கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இந்திய, தாய்லாந்து அரசாங்கங்களும், கான்பெர்ரா, வாஷிங்டனும் இனிமேல் ஒன்றை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதிமொழி கொடுத்துள்ளன. ஐ.நா.வின் கருத்தின்படி, தேவையான நடவடிக்கைகள் ஓராண்டிற்குள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ஆனால், வெளிப்படையாக விளைந்துள்ள வினா இதுதான்: பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் முறையோடு ஒப்பிடத்தகுந்த வகையில் இங்கும் எச்சரிக்கை முறை ஒன்று முன்னரே ஏன் ஏற்படுத்தப்படவில்லை?

கடந்த வாரப் பேரழிவிற்கு முன்பாக, அத்தகைய முறை ஒன்று கட்டாயம் தேவை என்று கூறியிருந்த விஞ்ஞானிகள் பொதுவாகக் கிறுக்கர்கள் என்ற அவச்சொல்லிற்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது தாய்லாந்தின் வானிலை ஆராய்ச்சித் துறைத் தலைவராக இருந்த சாமித் தாமசரோஜ் என்பவர், நாட்டின் தெற்குக் கடலோரப்பகுதியை ஒரு பேரழிவைத் தரக்கூடிய சுனாமி தாக்குதல் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது என்ற எச்சரிக்கையைக் கொடுத்திருந்தார். சிலர் அவரை "கிறுக்கர்" என்று கூறி ஓரங்கட்டப்பட்டார்.

தாமசரோஜ் Australian என்ற பத்திரிகைக்கு தெரிவித்தார். "அலைகள் கொந்தளிப்பு பற்றிய ஓர் எச்சரிப்பு அளிக்கும் முறை வேண்டும் என்று முன்னரே கோரியிருந்தேன். அத்தகைய எச்சரிப்பு சங்கொலிப்புகள். புக்கெட், பன்க்ம்கா மற்றும் கிராபி கடலோர சுற்றுலா விடுதிகளிலும் இப்பொழுது தாக்கப்பட்டுள்ள மூன்று மாநிலங்களிலும் தேவை என்று கூறியிருந்தேன். இந்த மாநிலங்களின் மூத்த அதிகாரிகளையும் நான் உஷார்படுத்தியிருந்தேன். ஆனால், எவரும் நான் கூறியதைக் கேட்கவில்லை." சில மாநிலங்கள் "அவற்றின் தோற்றப்பொலிவிற்கு வெளிநாட்டுப் பயணிகளிடையே இருக்கும் மதிப்பிற்கு நான் நாசம் விளைவிக்கிறேன்" என்று கருதியதால் அங்கு நான் செல்வதற்கு தடைவிதித்து விட்டன."

மற்ற விஞ்ஞானிகளும் இதேபோன்ற திட்டங்களை முன்வைத்துள்னர். இவைகள் ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டன அல்லது பணம் இல்லாத காரணத்தால் கவனத்திற்குள்ளாகவில்லை. Naturel கூறிய கருத்தின்படி, "இந்தியப் பெருங்கடலில் பசிபிக்கில் இருப்பது போன்ற முறையில் ஒத்திருக்கும் அமைப்பின் தேவை Intergovermental Oceanographic Commission, என்னும் ஐ.நா. அமைப்பின் கீழ் இயக்கும் பிரிவில் பலமுறையும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டது. குறைந்தது 1999 இல் இருந்து பசுபிக் இணைப்பு பொறுப்பைக் கொண்டிருக்கும் இப்பிரிவில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது." அமெரிக்காவில் சுனாமி பற்றிய ஆராய்ச்சி நடாத்தும் வேசிலி டைடோவ் ஒரு செய்தி ஏட்டிற்கு தெரிவித்தார். "அது எப்பொழுதும் செயல்பட்டியலில் உள்ளது... இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட இது பற்றிப் பேசினால் கிறுக்குத்தனம் என்று கூறியிருப்பர். ஆனால், இப்பொழுது ஏற்கத்தக்க திட்டம் என்று கொள்ளப்படும். இதற்குத் தேவைப்பட்டிருக்கும் மில்லியன் கணக்கான டொலர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருந்திருக்கும்."

சமீபத்தில் அக்டோபர் 2003 இல் கூட, ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்டுள்ள நில அதிர்வு ஆராய்ச்சியாளரான டாக்டர் பில் கும்மின்ஸ் சுனாமி எச்சரிக்கை முறை பற்றிய சர்வதேசப் பெருங்கடல் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு தன்னுடைய நேசக்கரத்தை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் நீட்டுமாறு அழைப்பு விடுத்திருந்தார். New York Times இன் கூற்றின் படி, வாஷிங்டனில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நியூசிலாந்து அவரை எள்ளி நகையாடியதோடு, கூட்ட முடிவுகள் பற்றி குறிப்பில் அத்தகைய விரிவாக்கம் குழுவின் வரையறைக்கு அப்பாற்பட்ட தன்மையைக் கொடுக்கும் என்றும் எழுதிவைக்கப்பட்டுள்ளது. மாறாக இக்குழு சிக்கலைப் பற்றி ஆய்வு நடத்துவதற்கு அவ்வப்பொழுது "தற்காலிகக் குழுக்கள்" அமைக்கப்பட்டால் போதும் என்று வாக்களித்துவிட்டது.

கும்மின்சுடைய திட்டத்தின் படி ஏற்பட்டிருக்கக்கூடிய செலவினங்கள் ஒப்புமையில் குறைவுதான் ஒரு கல்வியாளர் Los Angeles Times இல் இத்தகைய உயர் தொழில்நுட்ப முறை, இந்தியப் பெருங்கடலில் மட்டும் இன்றி உலகத்தின் கடல்கள் அனைத்தைப் பற்றியும் ஒருங்கிணைத்துச் செயல்படும் முறை 150 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார் எனக் கூறியுள்ளது. கடல்மட்டத்தை அளக்கும் கருவிகள் தலா 5,000 டொலர் என்றுதான் உள்ளன. சிறந்த முறையில், உயர்வேகத் தொடர்புடையவை இன்னும் கூடுதலான விலைவாய்ந்தவை, கிட்டத்தட்ட 20,000 டொலர் விலையுடையவை ஆகும். சுனாமீற்றர்கள் என்ற பெயருடைய இவை ஒரு சுனாமி கடலின் அடியில் விரைந்து செல்லும் பாதையைக் கண்டறியும் திறனுடையவை. 250,000 டொலர் தான் ஒரு அலகிற்கு என்ற விலை கொண்டவை. ஆனால், தொடர்ந்து பராமரிப்பிற்கு உட்படுத்தப்படவேண்டும்.

அனைத்தையும், நில அதிர்வையும் உணர்ந்து பதிவு செய்யக்கூடிய கருவிகள், நாள் முழுவதும் மேற்பார்வையிடக்கூடிய நிலையங்களுடன் இணைக்கப்பட்டு முறையான பயிற்சி பெற்ற விஞ்ஞானிகளினால் இயக்கப்படவேண்டும். பயிற்சி, இதைப் பற்றிய கல்வியை வளர்க்கும் திட்டமும் இதேபோல் முக்கியமானது அகும். அது அதிகாரிகளையும் பொதுமக்களையும் ஆபத்துகள் பற்றியும் எச்சரிக்கை வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவுறுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கும்.

அத்தகைய அமைப்பை நிறுவுவதில் வெற்றிபெறாதது, குறுகிய பார்வை, செயலற்ற தன்மை, நேரடியான இகழ்வுக் குணம் ஆகியவற்றை அடக்கப்பட்ட தெற்காசிய மக்களிடம் காட்டப்படுவதைத்தான், இவற்றுடன் பிணைந்து நிற்கிறது. குறிப்பாக பெரிய வல்லரசுகள் பால் இவற்றைக் கூறமுடியும். பேரழிவு தரும் சுனாமிகள் இந்தியப் பெருங்கடலில், பசிபிக் பகுதியைவிடக் கூடுதலான முறையில் காணப்படும் தன்மையில் உள்ளன. ஆனால் 8 நாடுகளில் எதுவும் இப்பகுதியின் எல்லையை ஒட்டி இல்லை. ஜப்பானும், அமெரிக்காவும் மில்லியன் கணக்கில், பசிபிக் பகுதியில் தொடர் நிலையங்களைக் கொண்டு சுனாமீற்றர்கள் பற்றியும் கண்காணிப்பு பற்றியும் தங்கள் கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் செலவழித்துள்ளன. ஆனால், கடந்த வாரப் பேரழிவிற்கு முன்பு இரண்டு நாடுகளில் எதுவும் இவற்றின் செயலாக்கம் இந்தியப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதற்குச் செலவழிக்க முன்வரவில்லை.

கடந்த வாரத்தின் பேரழிவு இன்னும் பரந்த முறையிலான வினாக்களையும் எழுப்புகிறது. தெற்கு ஆசியாவில் சுனாமி பற்றி எச்சரிக்கும் முறை இல்லாதது, பொதுவாகவே பேரழிவுகளைத் தரும் வெள்ளங்கள், புயல்கள் என்று இப்பகுதியில் அடிக்கடி நடப்பவை பற்றிய அக்கறையின்மை தன்மையைத்தான் அடையாளம் காட்டுகிறது. சுனாமியின் தாக்குதலால் நிகழ்ந்துள்ள பெருந்துன்பம் உலகம் முழுவதும் உள்ள சாதாரண மக்களின் பரிவு உணர்வைத் தூண்டிவிட்டு, அரசாங்கங்களை, காலம் கடந்தாலும், போதிய தன்மையற்று இருந்தாலும், இதற்கு ஏதேனும் செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. ஆயினும் கூட ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான வறிய மக்கள் ஆசியாவில் இயற்கையின் சீற்றங்களினால், இறக்கின்றனர் அல்லது வீடுகளை இழக்கின்றனர். இந்த நிகழ்வகளைப் பற்றி சர்வதேச செய்தி சர்வதேச செய்தி ஊடகம் அதிகம் குறிப்பிடுவது கூடக் கிடையாது.

தற்போதைய நெருக்கடி பற்றிக் கூறுகையில் இந்திய விஞ்ஞானி ரோட்டாம் நரசிம்மா கடுப்புடன் கேட்டார். "சுனாமி பற்றிய எச்சரிக்கையை இரண்டு மணி நேரம் முன்னரே, அறிவியல் சார்ந்து தெரிவிக்கும் முறை இருந்தாலும், (இந்திய) நிர்வாகம் அதைப்பற்றி என்ன செய்யும்? யார் எவரைக் கூப்பிட்டு, எவ்வாறு இவர்கள் மக்களுக்கு எச்சரிக்கையை கொடுத்துவிட முடியும்? சில ஆண்டுகள் முன்பு ஒரிசாவைத் தாக்கிய பெரும் புயலில் இருந்து எந்தப் படிப்பினையும் புதுடில்லி கற்றுக் கொள்ளவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். "நிர்வாகம் இரண்டு நாட்கள் முன்னரே ஒரிசாவில் வந்த மாபெரும் புயலைப் பற்றிய எச்சரிக்கையைப் பெற்றது ஆயினும் என்ன நடந்தது? எனவே, இரண்டு மணி நேரத்தில், அவர்கள் இரண்டு நாட்களில் செய்யமுடியாததைச் செய்திருப்பார்களா?

நரசிம்மாவின் இகழ்வு நியாயமான முறையில் இந்திய நிர்வாகத்தை எதிர்த்து இலக்கை கொண்டுள்ளது எனினும், அவருடைய கருத்துகள் அப்பகுதியில் இருக்கும் மற்ற அரசாங்கங்கள் மற்றும் பெரிய முதலாளித்துவ முறை சக்திகள் பற்றிய குற்றச்சாட்டும் ஆகும். இவை எப்பொழுதுமே தெற்கு ஆசியாவில் சாதாரண மக்கள் நிலை பற்றித் தங்கள் பொறுப்பை கைகழுவிவிடுகின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியல் சுனாமி எச்சரிக்கை முறை நிறுவுதலுக்கான செலவு அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய பெருநிறுவனங்கள் அப்பகுதியின் குறைவூதியத் தொழிலாளரை சுரண்டிக் குவிக்கும் மகத்தான இலாபங்களோடு ஒப்பிடும் போது அற்பத்தொகையாகும். இறுதி ஆய்வுகளில், போதுமான பேரழிவு நிர்வகித்தல் முறை இல்லாதமை, பில்லியன் கணக்கான மக்களை அன்றாடம் வறிய வாழ்வில் தள்ளி அவர்களுடைய கஷ்டங்களை தவிர்க்க முடியாதவை என்றும் வந்தே தீரும் என்ற கருத்தை கொண்டிருக்கும், இந்த சமூக பொருளாதார அமைப்பின் விளைவேதான்.

நன்றி: தினக்குரல்


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 16 Jun 2025 17:47
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Mon, 16 Jun 2025 17:47


புதினம்
Mon, 16 Jun 2025 17:31
















     இதுவரை:  27045173 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2056 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com