அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 20 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow தெறிப்புகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தெறிப்புகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஆசிரியர்குழு  
Sunday, 19 September 2004

படைப்பாக்கற் களம்

கப்டன் வானதி வெளியீட்டகம் ஒழுங்குசெய்த, இளம் பெண் படைப்பாளர் களுக்கான 'படைப்பாக்கற் களம்', 11.07.2004 இல், கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
'சிறுகதையின் அடிப்படைப் பண்புகளும் மொழியும்' பற்றி அ.யேசுராசாவும், 'சிறுகதையின் உருவமும் உள்ளடக்கமும்' பற்றி செம்பியன் செல்வனும், 'புதிய படைப்புக்கள்' பற்றி போராளி மலைமகளும் உரையாற்றினர். இளம் படைப்பாளிகள் எழுதிய சிறுகதைகள் தொடர்பான குழுக் கலந்துரையாடலும் இடம்பெற்றது. 'சிறுகதை' தொடர்பான பல அம்சங்களைப் புதிய படைப்பாளிகள் அறிந்துகொள்வதற்கு, இப்பயிலரங்கு உதவியாய் அமைந்தது. ஒவ்வொரு இலக்கிய வடிவம் பற்றியும் இத்தகைய பயிலரங்குகள் அடிக்கடி ஒழுங்கு செய்யப்படுவது, இளந்தலைமுறைப் படைப்பாளிகளின் திறன் வளர்ச்சிக்குத் துணை செய்யும்!



ஜனரஞ்சக வாசிப்பு!

“எழுத்தாளர் கல்கி, "தினத்தந்தி ஆதித்தனார்" ஆகியோர் தமது எழுத்துக்களால் வாசிப்புப் பழக்கத்தைத் தமிழ்நாட்டில் அதிகரித்தனர். தினத்தந்தியில் ஆழமற்ற - மிகை எளிமையான மொழிநடையே கையாளப்பட்டது. இப்போது பார்க்கையில், இத்தகைய ஜனரஞ்சக வாசிப்புப் பழக்க அதிகரிப்பு நிகழ்ந்திருக்கவேண்டியதில்லை எனத் தோன்றுகிறது”.

ஆடி 22 இல், யாழ். கைலாசபதி கலையரங்கில் உரையாற்றிய தமிழகப் பேராசிரியர் வீ. அரசு, இவ்வாறு தெரிவித்தார்.


மௌனமும் அக்கறையும்!

தமிழ்த் தேசியவாதத்தையும் தமிழ்த் தேசியவாதிகளையும் கொச்சைப்படுத்தும் கருத்துக்கள், இலங்கையிலும் தமிழகத்திலும் வெளிவரும் தமிழ் வெளியீடுகள் சிலவற்றில் அவ்வப்போது வருகின்றன.
தம்மைத் தமிழ்த் தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் எழுத்தாளர் பலர், இவற்றைக் காணாதவர்கள்போல் மௌனித்துள்ளனர்; ஆனால், தமது கட்டுரை, மொழிபெயர்ப்புகள், சிறுகதை, கவிதை போன்றவற்றை இந்தவெளியீடுகளில் வரச்செய்வதில் மட்டும் அக்கறையுடனுள்ளனர்! இது பரிகாசத்திற்குரிய அல்லது பரிதாபத்திற்குரிய நிலைமை அல்லவா?
“போர் நீண்டகாலம் நடைபெற்றதன் காரணமாக யுத்தநிறுத்தத்தால் வந்த போர்ப் பயமின்மை காரணமாக யுத்தத்திற்கு முன்னிருந்த சகஜ வாழ்க்கைநிலைக்கு மக்கள் போக விரும்பினர். இதனை அரசாங்கமும் பெரிதாக ஊக்குவித்தது. ஆனால், இந்தநிலையில் எதற்காகப் போராட்டம் நடந்ததோ அந்த விடயத்தைப் பற்றிய அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படத் தொடங்கின. எல்லோரும் சமாதானம் சமாதானம் என்பதை பேசத்தொடங்கினரேதவிர, சமாதானம் எப்படி வரவேண்டுமென்பது பற்றியோ எவை எவை தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டால் தமிழ்ப்பகுதிகளில் சமாதானம் இயல்பாக வரும் என்பது பற்றியோ கவனம் செலுத்தப்படாமல் யுத்தநிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள் பற்றியே விதந்து கூறினர்.”

பீஷ்மர்
(தினக்குரல் 15.08.2004)



வயர் வழியே வரும் சாத்தான்!

“1995 இற்கு முன் பாரம்பரியக் கலை நிகழ்வுகளுக்கு இருந்த மக்கள் ஆதரவு, தற்போது குறைந்துவிட்டது. மின்சார வசதியினால் தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள், விடியோப் படங்களில் மக்கள் மூழ்கியுள்ளனர். "தற்போது சாத்தான் வயர்வழியாக வந்து தொலைக்காட்சிப் பெட்டிக்குள் புகுந்துள்ளான்" என, ஒரு குருவானவர் அண்மையில் கூறினார்.”

இசைத்தென்றல் ம.யேசுதாசன்


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 20 May 2024 00:23
TamilNet
HASH(0x5612e4964b08)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 20 May 2024 00:23


புதினம்
Mon, 20 May 2024 00:23
















     இதுவரை:  24909086 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3271 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com