அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 08 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow தகவற்களம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தகவற்களம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஆசிரியர் குழு  
Sunday, 19 September 2004

13 யாழ்ப்பாணத்து ஓவியர்களின ஓவியக்காட்சி

தமிழ்ப் பிரதேசங்களில் ஓவியக் காட்சி என்பது அரிதாகத்தான் நிகழ்கிறது. ஆனால, ஓவிய இரசனை பரவலடைய இத்தகு காட்சிகள் இன்றியமையாதன.

யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் 'கலைவட்டம்' யாழ். பிரான்சிய நட்புறவுக் கழகத்துடன் இணைந்து ஒழுங்குசெய்த ஓவியக்காட்சி ஆடி 19 - ஆவணி 18 வரை நடைபெற்றது.

காட்சியின்போது விற்பனை செய்யப்பட்ட காட்சி விபரக் குறிப்பேட்டில், நுண்கலை விரிவுரையாளர் தா.சனாதனன் எழுதியுள்ள முக்கிய கருத்துக்களிற் சில: “எல்லாப்பண்பாடுகளிலும் உள்ளது போல யாழ்ப்பாணத்திலும் 'படம்' - Picture என்பது பல தேவைகளையும், நோக்கங்களையும் அடிப்படையாகக்கொண்டு புளங்கிவருகிறது. இதன் பல்வேறுபட்ட வடிவங்களாக கோயில் படங்கள், விளக்கப்படங்கள், விளம்பரப்படங்கள், கேலிச்சித்திரங்கள், பிரச்சாரப்படங்கள், அலங்காரங்கள், சுயவெளிப்பாட்டு ஓவியங்கள் என்பன அமைகின்றன. ஒரு பிரதேசத்தின் காட்சிப் பண்பாடு பற்றிய கருத்தாடலில் இவை அனைத்துமே சமனான கவனத்துக்குரியன. எனினும் இவை வேறு பிரிக்கப்படாமல் 'ஓவியம்' என்கின்ற விரிந்த சட்டகத்துள் நோக்கப்படுவது என்பது கலை வரலாறு, விமர்சனம், இரசனை ஆகிய மட்டங்களிலும் பயிற்சி, பயில்வு ஆகிய தளங்களிலும் பாரிய குழப்பங்களுக்கும் மயக்கங்களுக்கும் வழிவகுத்துள்ளது என்பதை எமது அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே இந்த ஓவியக்காட்சியானது இப்போதைக்கு ஓவியத்தை சுயவெளிப்பாடாகக் கருதும், அவ்வாறு கருதி கணிசமான அளவு படைப்புடலை உருவாக்கியுள்ள படைப்பாளிகளின் படைப்புக்களின் காட்சிப்படுத்தலாக அமைகிறது.

... மிகவும் இயல்பான முறையில் ஒவ்வொருவரினதும் தனித்துவமான வெளிப்பாடுகளாயும் இவை அமைகின்றன. மொத்தத்தில் யாழ்ப்பாணத்து ஓவியத்தின் தடம் மாற்ற காலம் ஒன்றை இவை பிரதிநிதித்துவம் செய்கின்றன.”

ஜேம்ஸ் தொம்சன்

ஜேம்ஸ் தொம்சன்ஜேம்ஸ் தொம்சன் 'மன்செஸ்ரர் பல்கலைக்கழக' விரிவுரையாளர். 'பிரயோக அரங்கு' என்ற தலைப்பிலான அவரது உரையினையும் கலந்துரையாடலையும், 29.07.2004 இல், யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில், 'செயல் திறன் அரங்கு' அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். தமிழ் மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டது.
 
தொம்சன் தனது உரையில், “மரபை - நியம அரங்கை அறிந்து பிரயோக அரங்கு பயன்படுத்தும். அதனை அது உடைப்பதில்லை. மரபின் அம்சங்களைப் பயன்படுத்துவதால் மக்கள் நெருங்கி வருகின்றனர்.

சமூகத்திலிருந்து தனிமைப்பட்டிருந்த அரங்கிற்கு எதிராகத்தான் பிரயோக அரங்கு வந்தது. பிரயோக அரங்கு ஒரு வடிவமல்ல. அது ஒரு கருத்து - மனப்பாங்கு.பார்வையாளரைப் பேசவிடுதல் - அவர்களிற்கும் திறனுள்ளதால் தங்கள் பிரச்சினைகளை அரங்கில் வெளிப்படுத்துவர்” எனத் தெரிவித்தார்.

கலந்துரையாடலின்போது, 'பொங்கு தமிழ்' நிகழ்வை பிரயோக அரங்கு என்பதுடன் தொடர்புறுத்தி ஒருவர் கேள்விகேட்டார். அதற்குப் பதிலாக ஒரு கதை சொல்வதாகத் தொம்சன் தெரிவித்து, பிறேசில் நாட்டுக் கிராமமொன்றில் ஒகஸ்ராபோலின் நாடக நிகழ்வின் பின் நடந்த சம்பவத்தை விபரித்தார். அது 'பொங்கு தமிழ்' அமைப்பாளர்களைக் கொச்சைப்படுத்துவது போல் இருந்ததால், அதனைக் கண்டித்து மேலும் பலர் கேள்வி எழுப்பினர். தொம்சன் தெளிவான பதிலைத் தரவில்லை! நிகழ்ச்சி அமைப்பாளர்களும் அவசரமாய் நிகழ்வை முடித்து வைத்தனர்!


வெங்கட் சாமிநாதனுக்கு 'இயல்' விருது

சாமிநாதன்கனடாவிலுள்ள ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசிய கல்வி மையமும், கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் இணைந்து வழங்கி வரும் 'இயல் விருது' இவ்வாண்டு, தமிழகத்தைச் சேர்ந்த கலை - இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. ரொறொன்ரோ பல்கலைக்கழக ஆசியப்பிரிவின் இயக்குநரான பேராசிரியர் மைக்கல் டானலி, ஆனி 10 ஆம் திகதி விருதை வழங்கினார்.

கனடாவில் வெளிவரும் 'காலம்' இதழ், பின்வருமாறு குறிப்பிடுகிறது : “1960 இன் பின், நவீன தமிழ் விமர்சனச் சூழலில் அழுத்தமான, தீவிர அதிர்வலைகளை உருவாக்கியவர்களில் வெங்கட் சாமிநாதன் முன்னணியில் நிற்கிறார். இலக்கியத்தின் வகைமைகள் அத்தனையிலும் தன் கூர்மையான விமர்சனத்தை வைத்த அதேவேளை பிற நவீன கலைகளான ஓவியம், திரைப்படம், நாடகம், நாட்டார் கலைகள் என்பவற்றிலும் அதேயளவு அக்கறைகாட்டி விமர்சித்தவர். வாழ்வும் கலை இலக்கியங்களும் சமரசங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதில் அசையாத நம்பிக்கையுள்ளவர்.”

இதுவரை வெங்கட் சாமிநாதன் எழுதிய 'பாலையும் வாழையும்', 'ஓர் எதிர்ப்புக்குரல்', 'கலை, அனுபவம், வெளிப்பாடு', 'அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை', 'அக்கிரஹாரத்தில் கழுதை', 'திரை உலகில்', 'பாவைக்கூத்து', 'என் பார்வையில்', 'விவாதங்கள் சர்ச்சைகள்' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.


வாரந்தோறும் நல்ல திரைப்படங்கள்   

யாழ். பல்கலைக்கழக புவியியற்றுறை மண்டபத்தில் வாரந்தோறும் இலவசமாகக் காட்டப்பட்டு வரும் படங்களின் விபரங்கள்:

26.06.2004 சென்ட்ரல் ஸ்ரேஷன் - ஸ்பானியம் - வோல்ரர் சலெஸ்.
24.07.2004 அகன்துக் - வங்காளம் - சத்யஜித் ரே.
01.08.2004 ஓஸாமா - ஈரான் - செடிக் பர்மக்.
08.08.2004 கனூறு ஹெக்கடித்தி - கன்னடம் - கிரீஷ் கர்னாட்.
15.08.2004 சுமைதாங்கி - தமிழ் - ஸ்ரீதர்.

காட்சி முடிவில் கலந்துரையாடலும் நடைபெறுகிறது


நமது நூல் வெளியீடுகள்

அவ்வப்போது நமது எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப் படுகின்றன. தேசியப் பற்றுணர்வுடன் இவற்றிற்கு ஆதரவு காட்டவேண்டியது நமது கடமையாகும்.
 
20.06.2004 கோப்பாய் சிவத்தின் 'தார்மீகக் கோபங்கள்' சிறுகதைத் தொகுதி    - இணுவில் மத்தியகல்லூரி.
17.07.2004 பொன். கணேசமூர்த்தியின் 'துளித் துளி வைரங்கள்' கவிதைத்   தொகுப்பு - யாழ்ப்பாண ப.நோ.கூ.ச. மண்டபம்.
24.07.2004 'தேவன் - யாழ்ப்பாணம் சிறுகதைகள்' - நல்லை ஆதீன    மண்டபம், யாழ்ப்பாணம்.
24.07.2004 ந. செல்வராஜாவின் 'நூல் தேட்டம் தொகுதி 2' தொகுப்பு நூல்    - பொதுநூலக கேட்போர்கூடம், யாழ்ப்பாணம்.


கே.கணேஷ் நினைவு அஞ்சலிக் கூட்டம்

மலையக எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களிற்கான அஞ்சலிக் கூட்டமொன்று, 18.07.2004 இல், மு.அநாதரட்சகன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தெ.மதுசூதனன், சொக்கன், செ.திருநாவுக்கரசு, தெணியான், சா.தியாகலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். இருவரைத் தவிர ஏனையோரிற்கு கணேஷ் அவர்களுடன் தொடர்பேதும் இருக்கவில்லை. எனினும் அவர்பற்றிய விபரங்களைத் திரட்டி அஞ்சலி உரையாற்றினர்.

'சர்வதேச மார்க்சிய குழு' என்ற பெயரிலான உதிரிகளே தற்போது, 'சமூக விழிப்புணர்வு மன்றம்' என்ற பெயரில் இக்கூட்டத்தை ஒழுங்கு செய்தனர். இதற்கு முன்பு இவர்கள் ஜே.வி.பியை நியாயப்படுத்தும் கூட்டமொன்றையும் நடாத்தினர். இலக்கிய அக்கறை இல்லாத இக்குழு இக்கூட்டத்தை நடாத்தியதற்கு, கணேஷ் மீதான 'மதிப்பு' காரணமல்ல. வேறு உள்நோக்கங்களே அடிப்படை.
 
ஒரு 'ஜனரஞ்சக' எழுத்தாளரும் கூட்டத்தில் பேசவேண்டுமென இக்குழுவினர் முயற்சியெடுத்தனர் (எனினும் அவர் பங்குபற்றவில்லை). ஆனால், கணேஷ் அவர்களுடன் நீண்ட காலம் பழகிய - தொடர்பு வைத்திருந்த - 'தெரிதல்' ஆசிரியர் பேச்சாளராக இடம்பெறக்கூடாது என்பதில், அக்கறையாயிருந்தனர். இது இவர்களது 'குறுங்குழுவாத' சீரழிவு மனப்பாங்கின் வெளிப்பாடு!

கூட்ட மண்டபத்தில் எல்லாமாய் (பேச்சாளருடன்) பத்தொன்பது பேர் அமர்ந்திருந்தனர் - 'தெரிதல்' ஆசிரியர் உட்பட!


சிரித்திரன் சுந்தர் சிறப்பிதழ்

சிரித்திரன்24.08.2004 இல், 'காலம்' சஞ்சிகையின் 'சிரித்திரன் சுந்தர் சிறப்பிதழ்' அறிமுக நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக புவியியற்றுறை மண்டபத்தில் நடைபெற்றது. தெ. மதுசூதனன் தலைமை வகிக்க, காலம் இதழ் அறிமுக உரையை 'தெரிதல்' ஆசிரியர் நிகழ்த்தினார். பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டார். பின்னர் 'காலம்' ஆசிரியர் செல்வத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 08 May 2024 14:47
TamilNet
HASH(0x55c20ce5e2a0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 08 May 2024 14:47


புதினம்
Wed, 08 May 2024 14:47
















     இதுவரை:  24867887 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4376 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com