அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 20 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow பார்வை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பார்வை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தேவேந்திரன்  
Sunday, 19 September 2004

பார்வை

கரவெட்டிக்கு வாறதுக்காக ஞானாவின் மோட்டச்சைக்கிளில் தொத்தி யாழ்ப்பாண பஸ்ரான்ட்டுக்கு வந்திறங்கினேன்.

பஸ்ரான்ட்டுக்குள் நுழைந்து பத்தடி நடந்திருப்பன் வெடிவிழுந்த சத்தம் கேட்டுது.

இப்ப வெடிச்சத்தத்தை பெரிசுபடுத்த வேண்டிய தேவையில்லாட்டிலும் திரும்பிப் பாத்தன். ஒரு பொடியன் பேப்பர் கட்டை நிலத்தில  விழுத்தியிட்டு மினிபஸ் நிப்பாட்டுற பக்கமாக ஓடுறான். இன்னொருத்தன் பாட்டத்தை விழுந்துபோய் பிறகு எழும்பேக்க பாத்தன் முதுகுப்பக்கம் தெப்பலா நனைஞ்சு ரத்தம் கொழ கொழவென்று ஒழுகுது.

ஆமிக்காரன் ஒருத்தன் துவக்கை நீட்டிக் கொண்டு நிக்கிறான். பிறகு அங்கால நிண்ட ஓட்டோவைக் கூப்பிட்டு வெடிபட்ட பொடியனை ஏத்தச்சொல்லுறான் - பொடியன் நடந்து போய்த்தான் ஓட்டோவில ஏறிது. அதோட இரண்டு பேர் சேர்ந்து போறாங்கள்.

பிறகு அதில சனங் கெம்பத் தொடங்கியிடுத்து. ஆமிக்காரர் துவக்கை நீட்டிச் சனத்தை வெருட்டுறாங்கள். எனக்கு முதல்ல ஒண்டும் விளங்கேல்ல அதிலயே நிண்டு அங்காலபோன ஓராளைக் கேட்டன்.

“என்ன நடந்தது?”

“பேப்பர் வித்த பொடியனுக்குச் சுட்டது தவறி மினிபஸ் கிளினருக்கு விழுந்துபோச்சு”.

நான் அங்கால இஞ்சால அசையேலாமலுக்கு அதிலயே நிக்க, எனக்கு பெர்ஸ்ற் இயரில எக்னமிக்ஸ் எடுத்த உதயன்ஸேர் மோட்டச்சைக்கிள்ள வந்து புதினம் பாத்திட்டு என்னக் கண்டிட்டு கூப்பிட்டு, என்ன நடந்தது எனக்கேட்டார்.

நான் கேள்விப்பட்டதை அவருக்கு சொல்லிக்கொண்டிருக்கேக்க தலை கிறுகிறுக்கத் தொடங்கியிட்டுது. கிறுதிவந்து அதிலயே விழுந்திடுவன்போல இருக்கு. ஒருமாதிரிச் சமாளிச்சு 750, 751 பஸ் எடுக்கிற சனம் நிக்கிற இடத்துக்கு வந்து ஆக்கள் இருக்கிறதுக்கு கட்டின சீமெந்து மேடையில கையைக்கால எறிஞ்சு கொண்டு சரியிறன். எல்லாம் சுத்திற மாதிரியிருக்கு. கண்ணை மூடியிட்டன். கொஞ்ச நேரம் போனாப்போல ஆரோ ரண்டு பேர் எனக்குக்கிட்டவா நிண்டு கதைக்கிறது கேக்குது.

“இஞ்சைபார் ஒண்டு மூக்கு முட்டக் கசிப்படிச்சிட்டு மல்லாந்து கிடக்குது.”

“உதுகளுக்கெல்லாம் பச்சை மட்டையளால விளாசவேணும்.”

எனக்கெண்டா கண்திறக்கேலாமக் கிடக்கு. ஒரு பஸ் வெளிக்கிடுகிற சத்தமும் கேக்குது.

எழுநூற்றம்பதோ? ஐம்பத்தொண்டோ? தெரியேல்ல...     


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 20 May 2024 04:25
TamilNet
HASH(0x55572645dbb8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 20 May 2024 04:25


புதினம்
Mon, 20 May 2024 04:25
















     இதுவரை:  24909662 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3393 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com