அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 19 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow நேர்காணல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Sunday, 19 September 2004

எங்களுக்கு நவீன ஓவியம் புரிவதில்லை!

உங்களுக்கு மரபு ஓவியம் புரிகிறதா என்று ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள். ஒருசிலருக்கு மட்டுமே அதன் தத்துவமும் கோட்பாடும் தெரிந்திருக்கின்றன. நீங்கள் சொல்லக்கூடியதெல்லாம் மரபு ஓவியம் உங்களுக்குப் பரிச்சயமானது என்பதுதான் - நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதல்ல. நவீன ஓவியத்துடன் நமக்குப் பரிச்சயம் இல்லை. உண்மையில் அதுதான் பிரச்சினை. மரபு ஓவியத்துடன் எவ்வளவு பரிச்சயப்பட்டிருக்கிறீர்களோ அவ்வளவு பரிச்சயத்தை நவீன ஓவியத்துடன் ஏற்படுத்திக்கொண்டால், இப்பிரச்சினை மறைந்துபோகும். அப்படியும் நீங்கள் அதைப் புரிந்துகொண்டவர்கள் ஆகிவிடமாட்டீர்கள். அதை நாம் விமர்சகர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் விட்டுவிடுவோமே.


நவீன ஓவியத்தை விளக்க முடியுமா?

முடியாது. கர்நாடக இசையை விளக்கமுடியுமா? முடியாது. அதை நீங்கள் ரசிக்கத்தான் முடியும். அதேபோல்தான் நவீன ஓவியமும். ஏன், எல்லாக்கலைகளும்தான். இவற்றை ரசிக்கக்கூடிய அளவிற்கு ஒருவருக்கு உதவலாம்; ஒருவரைப் பயிற்றுவிக்கலாம். ஆனால் இதற்கு முயற்சியும் கட்டுப்பாடும் தேவை. அதற்குப்பிறகு நீங்களாகவேதான் இதில் ஈடுபடவேண்டும்.

- ஜோசப் ஜேம்ஸ்
(புகழ்பெற்ற ஓவிய விமர்சகர்)


சுயமாக படைப்பாக்கம் செய்ய முடியாதவர்கள்தான் விமர்சனத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும், விமர்சனம் என்பதும் படைப்பாக்கத்திற்கு நிகரானதுதான் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதைப்பற்றி உங்கள் கருத்து....

“இம்மாதிரி கேள்விகளை, பட்டுக் கொள்ளாத பாவனையில் கேட்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இம்மாதிரியான "படைப்பாக்கம் செய்ய முடியாதவர்கள்தான் விமர்சனத்தில் ஈடுபடுகிறார்கள்" என்ற கருத்து, அறிவார்ந்த பலம் இல்லாதவர்களின், தங்கள் படைப்பின் மீது தமக்கு நம்பிக்கை அறவே இல்லாதவர்களின் புலம்பல். இவர்கள் கருத்தை ஒரு பொருட்டாகவே கொண்டிருக்கக்கூடாது. படைப்பாக்கம் செய்ய முடியாதவர்கள் புகழ்ந்து  கூறியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? "உன் வேலையைப் பார்த்துட்டுப் போ. முதலில் ஏதாவது படைப்பு செய்து காண்பி. பின் என்னைப் புகழலாம்" என்று சொல்லியிருப்பார்களா? இம்மாதிரியான கருத்துக்களை யாரும் சொல்வதும், அதைப் பெரிய கேள்வியாக என்னிடம் கொண்டுவருவதும் ஒரு நோய்க்கூறான சமூகத்தின் அடையாளங்கள். இப்படியான கருத்துக்களை உதிர்த்தவர்கள் யாரும் அவர்களுக்குச் சமையல் தெரியாவிட்டாலும் "சாம்பாரில் உப்பு சற்றுத் தூக்கலாக இருக்கிறது" என்று சொல்வார்களா மாட்டார்களா? இல்லை, "முதல்லே சாம்பார் வைக்கத் தெரிஞ்சிகிட்டு வா. அப்புறம் நொள்ளை நொட்டம் பேசலாம்" என்று பதில் வந்தால் என்ன செய்வார்கள்?

- "காலம்" இதழில் (ஆனி 2004) வெளியான நேர்காணலில், வெங்கட் சாமிநாதன்.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 19 May 2024 23:21
TamilNet
HASH(0x55d82e216fa0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 19 May 2024 23:21


புதினம்
Sun, 19 May 2024 23:21
















     இதுவரை:  24908877 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3195 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com