அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 July 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow தெரிவு: முரணியா ? ஒத்தோடியா ?
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தெரிவு: முரணியா ? ஒத்தோடியா ?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Sunday, 19 September 2004
தெரிதல்"நான் சொல்கிறேன் என்பதாலேயே நீ ஏற்றுக்கொள்ளாதே; உன் பகுத்தறிவினால் நான் சொல்வதையெல்லாம் கேள்விக்கு உரியதாக்கு; உனக்கு நீயே ஒளியாக இரு!" - புத்தர்


நமது தமிழ்ப் பத்திரிகைகளால் அறிவுழைப்பும் படைப்புச் செயற்பாடும் உரிய பணக் கொடுப்பனவுடன் பேணப்படுகிறதாய்க் கூறமுடியாது.

கொழும்பிலிருந்து வரும் மூன்று நாளேடுகளின் வார வெளியீடுகளில் பிரசுரமாகும் சிறுகதைகளிற்கு சிறிய கொடுப்பனவு -150ரூபா- வழங்கப்படுவதாய்த் தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் வெளியாகும் நான்கு நாளேடுகளில், ஒன்றில் மட்டும், வெளிவரும் கட்டுரைகளிற்குக் கொடுப்பனவு செய்யப்படுவதாய்ச் சொல்லப்படுகிறது.

உரிய கொடுப்பனவுகள் வழங்கப் படுமானால் கட்டுரை, சிறுகதை, மொழிபெயர்ப்பு என்பவற்றில் ஈடுபடுவோர் ஊக்கத்துடன் தீவிரமாய்ச் செயற்பட வழியேற்படும்; அது வளர்ச்சிக்குத் துணையாகும்.

ஆனால், யதார்த்தம் வேறாய் உள்ளது!  பாவிக்கும் பேனை, கடதாசி, முத்திரை என்பவற்றிற்கும் எழுத்தாளன் தானே செலவு செய்யவேண்டியுள்ளதோடு, ஆக்கங்கள் வெளியாகும் இதழ்களையும் தானே காசு கொடுத்து வாங்கவேண்டிய பரிதாப நிலை!

பணம்தான் கொடுக்காது விட்டாலும், குறிப்பிட்ட இதழையாவது எழுத்தாளனிற்கு அனுப்பிவைக்க வேண்டுமென்ற, குறைந்தபட்ச பொறுப்புணர்வாவது இவ்வேடுகளில் இல்லையே!
எழுத்தாளனின் உழைப்பு தொடர்ந்தும் சுரண்டப்படுகிறது.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், வேறுயாரோவிற்காக "சுரண்டல், அநீதி" எனச் சத்தமிடும் எழுத்தாளன், தன்மீதான சுரண்டல் பற்றி மௌனம் காக்கிறான். "முரணி"யாய் இருப்பதில் தயக்கமா? அல்லது "ஒத்தோடி"யாய் இருப்பது பிரச்சினை தராதது - வசதியானது என்ற தப்பிக்கும் மனநிலையா?

இனியாகிலும், தனியாகவோ கூட்டாகவோ உழைப்பிற்கேற்ற ஊதியம் கேட்டு, எழுத்தாளர் செயலில் இறங்குவார்களா?


சென்ற இதழிலிருந்து "தெரிதல்"இல் வெளியாகும் விடயங்களிற்கு சன்மானம் வழங்கப்படுகின்றது. கட்டுரைகள், குறிப்புகள், கவிதைகள், சிறிய கதைகள் வரவேற்கப்படுகின்றன. ஆக்கங்கள் கையெழுத்தில், A - 4 அளவு தாளில் இரண்டு பக்கங்களுக்குள் அமைதல் வேண்டும். "படிப்பகம்"  பகுதியில் வெளியிடவேண்டுமானால் நூலின் ஒரு பிரதியை அனுப்பவேண்டும்.
ஆறு இதழ்களுக்கான சந்தா ரூபா 50/=; அனைத்துக் காசுக்கட்டளைகளும் அ. யேசுராசா, வண்ணார்பண்ணை அஞ்சலகத்தில் மாற்றும் வகையில் எடுக்கப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

"தெரிதல்"
இல. 1, ஓடைக்கரை வீதி,
குருநகர், யாழ்ப்பாணம்.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Jul 2024 01:52
TamilNet
HASH(0x55f31c3c7b28)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Jul 2024 01:52


புதினம்
Thu, 25 Jul 2024 01:52
     இதுவரை:  25413444 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9425 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com