அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 08 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow அவர்களும் நாங்களும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அவர்களும் நாங்களும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சூரி  
Sunday, 19 September 2004

யாழ்ப்பாணம் நாகவிஹாரையின் முன்னால் இரண்டுமாடிக் கட்டடமொன்று உள்ளது. அது பௌத்த யாத்திரிகர்கள் தங்குவதற்காக, 'சினிமாஸ்' குணரட்ணம் என்பவரால் முன்பு கட்டுவிக்கப்பட்டு, விஹாரைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதாகும்.

அண்மைக் காலத்தில் அதில் ஒரு பெயர்ப்பலகை காணப்படுகிறது. 'விஸ்ராம ஷாலாவ, ஸ்ரீ நாக விஹார, யாப்பணய' எனச் சிங்களத்தில் மட்டும் அதில் எழுதப்பட்டுள்ளது. ஓய்வு விடுதி, ஸ்ரீ நாக விஹாரை, யாழ்ப்பாணம் என்று தமிழில் - சிறிய எழுத்திலாவது - எழுதியிருக்கலாம்தான். ஆனாலும், 'அவர்கள்' தங்கள் தாய்மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களென
விட்டுவிடலாம்.
 
ஆனால், நாம் எவ்வாறு செயற்படுகிறோம்? தேவையில்லாமலே ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் - போலிக் கௌரவத்திற்காக! மறுபுறம் நமது தாய்மொழியை - தமிழை - ஒதுக்கித்தள்ளி விடுகிறோம், எவ்வித தயக்கமுமில்லாமல்! இதோ! சில உதாரணங்கள்:

1. பேராசிரியர் சு. வித்தியானந்தன் நினைவு (தமிழ்ப்) பேருரை அழைப்பிதழ் - யாழ். பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலேயே அச்சிடப்பட்டுள்ளது. உரைத்தலைப்பு மட்டுமே தமிழிலும் தரப்பட்டுள்ளது. ஆனால் அதிலும், 'பின் காலனித்துவச் சூழலில்' என்பது 'பின் காலணித்துவச் சூழலில்' எனத் தமிழ்க்கொலை காணப்படுகிறது.

பேராசிரியர் சு. வித்தியானந்தன் நினைவு

2. பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் 'கலைவட்டம்' யாழ். பிரெஞ்சு நட்புறவுக் கழகத்துடன் இணைந்து நடத்திய ஓவியக் காட்சியின் அழைப்பிதழிலும், ஒரு வரி மட்டுமே தமிழிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் ஆங்கிலம் விடப்பட முடியாதுதான். ஆனால், நிகழ்வு விபரங்கள் தமிழிலும் தரப்பட்டிருக்கவேண்டும்.

கலைவட்டம்

3. யாழ். மத்திய கல்லூரியின் ஆண்டுப் பரிசளிப்பு நிகழ்வு விளம்பரம் உதயன், வலம்புரி, யாழ் தினக்குரல் ஆகிய மூன்று தமிழ் நாளேடுகளிலும் ஆங்கிலத்தில்தான் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். மத்திய கல்லூரியின் ஆண்டுப் பரிசளிப்பு நிகழ்வு

4. கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரிப் பரிசளிப்பு நாள் அழைப்பிதழும் ஆங்கிலத்திலேயே அச்சிடப்பட்டுள்ளது.

கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி

மீண்டும் மீண்டும் இந்தப் போலிக் கௌரவ ஆங்கில மோகத்தையும், தமிழ்ப் புறக்கணிப் பையும் சுட்டிக்காட்டச் சலிப்புத்தான் வருகிறது!
 
மகாகவி பாரதியார் எங்கோ ஓரிடத்தில், '......எருமைகளைப் போல் இருக்கிறீர்களே...! சதா ஈரத்தில் உணர்ச்சியில்லாமல் கிடக்கிறீர்களே தமிழர்களே...!' என்று அர்த்தப்படக் குறிப்பிட்டிருப்பதும் நினைவிற்கு வருகிறது.....


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 08 May 2024 20:52
TamilNet
HASH(0x55a13225e9a8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 08 May 2024 20:52


புதினம்
Wed, 08 May 2024 20:52
















     இதுவரை:  24868541 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4639 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com