அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 July 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow பகிர்வு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பகிர்வு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வேல்  
Sunday, 19 September 2004

'தெரிதல்’ இதழிற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது? 
பெனடிக்ற்
பண்டத்தரிப்பு.

இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்படுகின்றன. பெரும்பாலும் விநியோகிக்கப்பட்டும் விடுகின்றன. புதியவர்கள் - இளைஞர்கள் தங்களிற்குப் பயனளிப்பதாக சொல்கிறார்கள். வாசிப்புப் பழக்கம் குறைவடைந்துள்ள இன்றைய நிலையில், 'வாசிப்பை’ ஊக்குவிக்க இதன் அமைப்பு உதவுமெனப் பெரியவர்கள் கருதுகிறார்கள். இதற்குக் கிடைத்த வரவேற்பினால்தான் 'நடுகை’ 'கூத்தரங்கம்’ போன்ற இதழ்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மட்டக்களப்பிலிருந்து 'மற்றது’ என்ற புதிய இதழும் வெளிவரவுள்ளது. எனினும், 'சிலரை' எரிச்சலுறச் செய்திருப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்!


'தெரிதல்’ யாழ்ப்பாணத்தை மையப் படுத்தித்தான் வெளியிடப்படுகிறது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?
ஏ. எச். அன்வர்
கொழும்பு.

இல்லை! ‘தெரிதல்’ பிறமாவட்டங்களிலும் விநியோகிக்கப்படுகிறது. எம்மிடையே பிரதேச வாதம் எதுவும் இல்லை. நல்ல கலை - இலக்கிய இரசனையைப் பரவலாக்குவதே நோக்கம். ஏனைய மாவட்டங்களின் முக்கிய கலை - இலக்கிய நிகழ்வுகளைப் பற்றிய விடயங்களை யாரும் அனுப்பிவைக்கலாம். அவ்வாறே கவிதை, சிறிய கதைகள், கட்டுரைகளையும் அனுப்பலாம்@ தரங்கண்டு வெளியிடப்படும்!


'பத்தி எழுத்து' என்றால் என்ன?
அ.ஞா.பிறிற்றோ
பத்திரிசியார் கல்லூரி,
யாழ்ப்பாணம்.

பத்திரிகை - சஞ்சிகைகளில் ஏதாவது  விடயம் பற்றி, தொடர்ச்சியாக, சிறிய பகுதியில் ஒருவரால் எழுதப்படும் குறிப்புக்களைப் 'பத்தி எழுத்து' எனலாம். இலக்கியம், திரைப்படம், நாடகம், அரசியல், சமூக நிகழ்வுகள் என எதுபற்றியதாகவும் இது அமையலாம். தகவல்களை - இரசனையை - விமர்சனத்தை அது கொண்டிருக்கும்.


'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்', 'மரணத்துள் வாழ்வோம்' ஆகிய முக்கிய நூல்களை "நேர்மையற்ற தொகுப்புகள்” என அண்மையில் ஒருவர் குறிப்பிட்டுள்ளாரே!
மகேஷ்
யாழ்ப்பாணம். 

ஆம், 'பட்டிமன்றப் பாணி'யில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்! 'இன்றைய' புதுவை இரத்தினதுரை இடம்பெறாததை முன்வைத்தே அவரது குற்றச்சாட்டும் உள்ளது. இரண்டு நூல்களும் முறையே 1984,1985 ஆம் ஆண்டு களில் வெளிவந்தன. எனவே, அக்காலச் சூழலை வைத்து நோக்குவதே முறையானது.


புதிய ஜனநாயகக் கட்சியினர்மீதும் 'புதிய பூமி' மீதும் தெரிதலிற்குக் கோபம் ஏன்?
சாந்தன்
சுன்னாகம்.

தமிழ்த் தேசியஇனப் பிரச்சினையில் முன்பு இவர்களது நிலைப்பாடு எதிரானது. தற்போது மாறிவிட்டதாகச் சொன்னாலும், 'குயுக்தி'யுடனேயே செயற்படுகின்றனர். அவ்வப்போது தமிழ்த் தேசியவாதத்தையும், அதற்குச் சார்பான புத்திஜீவிகள்- எழுத்தாளர்களையும் கொச்சையாகத் தாக்குகின்றனர். சிலரின் குணநலனைக் கொலை செய்வதற்காகப் பொய்களையும் திட்டமிட்டுப் பரப்புகின்றனர். 'மஞ்சள் பத்திரிகைத்தனத்துடன்' கட்சிப் பத்திரிகையை நடத்தும் இவர்கள், 'சோலைக்குள் உலவும் பாம்பு போன்றவர்கள்'. இவைபோன்றவற்றால்தான் இவர்களைக் குறிப்பிடநேர்கிறது!
 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Jul 2024 02:52
TamilNet
HASH(0x556e38eeef28)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Jul 2024 02:52


புதினம்
Thu, 25 Jul 2024 02:52
     இதுவரை:  25413592 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9384 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com